மேலும் அறிய

உங்கள் ஸ்மார்ட்போனில் ட்ரைவிங் லைசன்ஸ் நகல் வைத்துக் கொள்வது எப்படி?

உங்கள் டிரைவிங் லைசன்ஸை நீங்கள் செல்லும் எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்ல முடியவில்லையா? உங்களுக்கு உதவுகின்றன அரசின் செயலிகள் - DigiLocker மற்றும் mParivahan App.

உங்கள் டிரைவிங் லைசன்ஸை நீங்கள் செல்லும் எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்ல முடியவில்லையா? உங்கள் ஸ்மார்ட்போனில் ட்ரைவிங் லைசன்ஸை வைத்துக் கொண்டால் போதுமா? உங்களுக்கு உதவுகின்றன அரசின் செயலிகள் - DigiLocker மற்றும் mParivahan App. உங்கள் ட்ரைவிங் லைசன்ஸை மறதியில் எடுத்துச் செல்லாமல் இருந்தாலும் இந்த செயலிகள் உங்களுக்குக் கைகொடுக்கும். மேலும், உங்கள் ட்ரைவிங் லைசன்ஸை உங்கள் ஸ்மார்ட்போனில் பத்திரப்படுத்தி வைப்பதன் மூலமாக அது தொலைந்து போவதில் இருந்தும், திருடப்படுவதில் இருந்தும் அதனைப் பாதுகாக்கும். 

கடந்த 2018ஆம் ஆண்டு, ஒன்றிய அரசு Digilocker மற்றும் mParivahan ஆகிய செயலிகளைப் பயன்படுத்தி, ட்ரைவிங் லைசன்ஸ், வாகனப் பதிவு தொடர்பான ஆவணங்கள் முதலானவற்றைச் சேகரித்துக் கொள்வதை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியது. இதன் மூலம், ட்ரைவிங் லைசனஸ், வாகனப் பதிவு ஆவணங்கள் முதலானவற்றின் ஒரிஜினல்களை எடுத்துச் செல்வதைத் தவிர்ப்பது ஊக்குவிக்கப்படுகிறது.

உங்கள் ஸ்மார்ட்போனில் ட்ரைவிங் லைசன்ஸ் நகல் வைத்துக் கொள்வது எப்படி?

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வழிகளைப் பின்பற்றி, உங்கள் ட்ரைவிங் லைசன்ஸை உங்கள் ஸ்மார்ட்போனில் வைத்துக் கொள்ள முடியும். 

1. தொடங்குவதற்கு முன், உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து DigiLocker செயலியை இன்ஸ்டால் செய்து அதில் அக்கவுண்ட் உருவாக்க வேண்டும். இதற்காக உங்கள் போன் நம்பர் மற்றும் ஆதார் எண்ணைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

2. DigiLocker செயலிக்குள் செல்ல வேண்டும். அதில் உங்கள் யூசர்நேம் மற்றும் நீங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்துக் கொண்ட 6 டிஜிட் PIN எண்ணை அதில் பயன்படுத்த வேண்டும். நீங்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும். அதனைப் பயன்படுத்தி, உங்கள் அக்கவுண்டிற்குள் செல்லலாம். 

3. உங்கள் அக்கவுண்டிற்குள் நுழைந்தவுடன், Get Issued Documents என்ற பட்டனை அழுத்தி, அதற்குள் செல்லவும்.

4. இப்போது, அங்குள்ள search boxல் "Driving License" என்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

5. உங்கள் ட்ரைவிங் லைசன்ஸ் பதிவு செய்யப்பட்டிருக்கும் மாநில அரசை அதில் குறிப்பிடவும். அனைத்து மாநிலங்கள் என்ற பொதுவான ஆப்ஷனையும் இதில் குறிப்பிடலாம். 

உங்கள் ஸ்மார்ட்போனில் ட்ரைவிங் லைசன்ஸ் நகல் வைத்துக் கொள்வது எப்படி?

6. உங்கள் ட்ரைவிங் லைசன்ஸ் எண்ணை அதில் செலுத்தி, Get the Document என்ற பட்டனை அழுத்தவும். உங்கள் லைசன்ஸின் நகலை உங்களுக்கு வழங்குவதற்காக Digilocker செயலி, இப்போது வாகனத் துறையின் ஒப்புதலைக் கேட்கும். அங்கு காட்டப்படும் checkboxசை ஏற்றுக் கொண்டால் அது அடுத்த பக்கத்திற்கு எடுத்துச் செல்லும்.

7. வாகனங்கள் துறையில் இருந்து உங்கள் ட்ரைவிங் லைசன்ஸை Digilocker உங்களுக்கு எடுத்துத் தரும்.

8. Issued Documents என்ற பட்டியலில் இப்போது உங்கள் ட்ரைவிங் லைசன்ஸ் கிடைக்கும். அதனை pdf வடிவிலும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

DigiLocker செயலியை விரும்பாதவர்கள், mParivahan செயலியைப் பயன்படுத்தலாம். இதில் DL Dashboard tabல் இருந்து உங்கள் ட்ரைவிங் லைசன்ஸை டவுன்லோட் செய்யலாம்.

தலைப்பு செய்திகள்

வந்துடுச்சு.. வந்துடுச்சு.. பட்ஜெட் விலையில் அறிமுகமாகியது Toyota Glanza Facelift - வாங்கலாமா?
வந்துடுச்சு.. வந்துடுச்சு.. பட்ஜெட் விலையில் அறிமுகமாகியது Toyota Glanza Facelift - வாங்கலாமா?
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget