Rolls Royce Phantom: சொகுசின் உச்சம்; வெறும் 25 கார்கள் தான்; ‘பேந்த்தம்‘ நூற்றாண்டு எடிஷனை வெளியிட்ட ரோல்ஸ் ராய்ஸ்
உலகப்புகழ் பெற்ற சொகுசுக் கார் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ், அதன் பேந்த்தம் மாடலின் நூற்றாண்டை குறிக்கும் வகையில், ஸ்பெஷன் எடிஷனை வெளியிடுகிறது. உலகம் முழுவதிலும் வெறும் 25 கார்கள் மட்டுமே விற்க்கு வரும்.

ஆடம்பர சொகுசுக் கார்களுக்கு பெயர்போன ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், அதன் பேந்த்தம் மாடலின் நூற்றாண்டை கொண்டாடுகிறது. அதற்காக, நூற்றாண்டு கலெக்ஷனாக ஒரு சிறப்பு லிமிடெட் எடிஷனை வெளியிடுகிறது. இந்த சிறப்பு எடிஷனில் வெறும் 25 கார்களை மட்டுமே தயாரித்து, உலகம் முழுவதும் விற்க உள்ளது. இந்த சிறப்பு எடிஷன், மிகவும் சிக்கலான, தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட தனியார் சேகரிப்பாக இருக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நூற்றாண்டு கண்ட ‘பேந்த்தம்‘ மாடல்
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பேந்த்தம் மாடல் கார்கள், சொகுசு மற்றும் பிரமாண்டத்திற்கு பெயர் பெற்றவை. இந்த ‘பேந்த்தம்‘ மாடலை 1925-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம். அந்த பெயர்ப் பலகையின் நூற்றாண்டு தற்போது கொண்டாடப்படுகிறது.
அதை குறிக்கும் வகையில்தான், இந்த ஸ்பெஷன் லிமிடெட் எடிஷனை வெளியிட்டுள்ளது ரோல்ஸ் ராய்ஸ். இந்த சிறப்பு எடிஷனை வடிவமைக்க 40,000 மணி நேரங்களுக்கும் அதிகமாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த எடிஷனை, இதுவரை மேற்கொண்ட மிகவும் சிக்கலான மற்றும் தெழில்நுட்ப ரீதியில் லட்சியமான பிரைவேட் கலெக்ஷன் என்று ரோல் ராய்ஸ் தெரிவிக்கிறது.
பேந்த்தம் ஸ்பெஷன் எடிஷனின் வடிவமைப்பு
இந்த ஸ்பெஷல் எடிஷன், ரோல்ஸ் ராய்ஸ் அதன் சூப்பர் ஷாம்பெயின் கிரிஸ்டல் ஃபினிஷ் என்று அழைக்கும் தனித்துவமான கருப்பு வெள்ளை நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் கிரில்லின் மேல் உள்ள ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டஸி, 18 கேரட் தங்கத்தில், 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஹூட் லோகோ, லண்டனில் உள்ள ஹால்மார்க்கிங் அண்ட் அஸே அலுவலத்தில் இருந்து, ‘பேந்தத்தம் சென்ட்னரி‘ ஹால்மார்க்கை கொண்டுள்ளது என ரோல் ராய்ஸ் நிறுவனம் கூறுகிறது. லோகோவின் அடிப்பகுதியில் எனாமல் பூசப்பட்டுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் பேட்ஜ்கள் வெளிப்புறத்தை முழுமையாக்குகின்றன. மேலும், இந்த எடிஷனில், முதல் முறையாக 24 கேரட் தங்கம் மற்றும் வெள்ளை எனாமல் காண்ட தனித்துவமான பேந்த்தம் சக்கரங்களுடன் வருகிறது.
உட்புற வடிவமைப்பு மற்றும் எஞ்சின்
இந்த பேந்த்தம் ஸ்பெஷல் எடிஷனின் உட்புற கேபினை பொறுத்தவரை, கடந்த கால பேந்த்தம் மாடல்களில் இருந்து உத்வேகத்தை பெறும் அதே வேளையி, நிறுவனத்தின் நிறுவனர்களுக்கு மரியாதை செலுத்துகிறது.
பின்புற இருக்கைகள் 1926-ம் ஆண்டின் பேந்தத்தம் ஆஃப் லவ் மாடலால் ஈர்க்கப்பட்டுள்ளன. அதோடு, பேந்த்தம் வரலற்றில் இருந்து இடங்கள் மற்றும் கலைப் பொருட்களை சித்தரிக்கும் இருக்கை அப்ஹோல்ஸ்டரியில் கலைப்படைப்புகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், ஃபேஷன் அட்லியருடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட பின்புற இருக்கைகள், உயர் தெளிவுத்திறன் கொண்ட அச்சிடப்பட்ட துணிகள், சிக்கலான கோடு விவரங்கள் மற்றும் நுட்பமான தங்க எம்பிராய்டரி ஆகியவற்றின் கலவையைக் காட்டுகின்றன. ஒரு வருடத்திற்கும் மேலாக உருவாக்கப்பட்ட இந்த செயல்முறை, புதிய மைகள், பூச்சுகள் மற்றும் முறைகளை உருவாக்குவதை உள்ளடக்கியது. இதன் விளைவாக கவனமாக கைவினை செய்யப்பட்டு துல்லியமாக பொருத்தப்பட்ட 45 தனித்துவமான பேனல்கள் கிடைத்தன.

அதோடு, கதவுப் பலகைகளில், குட்வுட் சகாப்தத்தின் முதல் பேந்த்தம் ஆஸ்திரேலியா முழுவதும் 4,500 மைல் பயணம் போன்ற குறிப்பிடத்தக்க பேந்த்தம் பயணங்களின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வடிவமைப்பு, 3D மார்க்வெட்ரி, மை லேயரிங் மற்றும் தங்க இலை அலங்காரம் போன்ற நுட்பங்களை ஒருங்கிணைக்கிறது. மேலும், 24 கேரட் தங்க இலைகளை பயன்படுத்தி சாலைகள் சிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த பேந்த்தம் நூற்றாண்டு ஸ்பெஷன் எடிஷன், Phantom Centenary Collection 6.75-லிட்டர் ட்வின்-டர்போ V12 எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 24-காரட் தங்க டிரிம் கொண்ட ஆர்க்டிக் ஒயிட் எஞ்சின் கவர் மூலம் மூடப்பட்டுள்ளது.




















