Renault Triber: பட்ஜெட் விலையில் 7 சீட்டர் கார்.. Renault Triber காரின் விலையும், மைலேஜும் எப்படி?
Renault Triber: ரெனால்ட் நிறுவனத்தின் முக்கியமான Renault Triber காரின் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் குறித்து கீழே காணலாம்.

இந்தியாவில் மஹிந்திரா, டாடா, ஹுண்டாய், டொயாட்டோ ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக இருப்பது ரெனால்ட் நிறுவனம். ரெனால்ட் நிறுவனத்தின் வெற்றிகரமான கார்களில் ஒன்று Renault Triber ஆகும்.
ரூ.6.88 லட்சம்:
பட்ஜெட் கார் வாங்க விரும்பும் பலரின் முதன்மையான பட்டியலில் இந்த காரும் இருக்கும். இந்த காரின் விலை, தரம், மைலேஜ், சிறப்பம்சங்கள் குறித்து கீழே காணலாம். இந்த கார் ஒரு காம்பேக்ட் எம்பிவி ஆகும். 7 பேர் அமர்ந்து பயணிக்கும் வகையில் இந்த கார் பெரிய கார் ஆகும்.
இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 6.88 லட்சம் ( ஆன்ரோட்) ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 10.18 லட்சம் ஆகும். இந்த காரில் மொத்தம் 11 வேரியண்ட்கள் உள்ளது. இந்த கார்கள் அனைத்தும் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் ஓடும் ஆற்றல் கொண்டது.
எஞ்ஜின் திறன்:
இந்த காரில் 999 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 71 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக்கில் ஓடும் ஆற்றல் கொண்டது.
1. Triber Authentic - ரூ.6.88 லட்சம்
2. Triber Authentic CNG - ரூ.7.67 லட்சம்
3. Triber Evolution - ரூ.7.89 லட்சம்
4. Triber Evolution CNG - ரூ.8.68 லட்சம்
5. Triber Techno - ரூ.8.69 லட்சம்
6. Triber Emotion - ரூ.9.38 லட்சம்
7. Triber Techno CNG - ரூ.9.48 லட்சம்
8. Triber Emotion Dual Tone - ரூ.9.62 லட்சம்
9. Triber Emotion AMT - ரூ.9.93 லட்சம்
10. Triber Emotion CNG - ரூ.10.17 லட்சம்
11. Triber Emotion AMT Dual Tone - ரூ.10.18 லட்சம்
மைலேஜ்:
இந்த கார் நகர்ப்புறங்களில் 13.64 கிலோமீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. நெடுஞ்சாலைகளில் 17.86 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது. இந்த காரின் கேபின் வசதி வாடிக்கையாளரை கவரும் வகையில் அமைந்துள்ளது. சாலைகளில் வாகனத்தை ஓட்டுவதற்கு இலகுவான காராக உள்ளது. 96 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 5 கியர்கள் கொண்டது.
பாதுகாப்பு வசதி:
6 ஏர்பேக்குகள் வசதி கொண்டது. ஏபிஎஸ் மற்றும் இபிடி வசதி கொண்டது. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் வசதி கொண்டது. இஎஸ்பி வசதி கொண்டது. ட்ராக்ஷன் கன்ட்ரோல் வசதி கொண்டது. என்சிஏபி இந்த காருக்கு 4 ஸ்டார் வழங்கியுள்ளது. வெள்ளை, சிவப்பு, நீலம் ஆகிய வண்ணங்களில் இந்த கார் உள்ளது. இந்த கார் ரெனால்ட் கிகர், மாருதி எர்டிகா, நிஸான் மெக்னைட் ஆகிய கார்களுக்கு போட்டியாக உள்ளது.





















