மேலும் அறிய

பார்க்கிங்கில் வாகனம் தொலைந்தால் ரூ.1 கோடி வரை இழப்பீடு? சட்டம் சொல்வது என்ன?

குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி பாதுகாப்புக்காக வாகனத்தை நிறுத்தி செல்லும் நிலையில் அது காணாமல் போனால் நாங்கள் பொறுப்பில்லை என சொன்னால் அதனை சாதாரணமாக கடந்து போக முடியுமா?

சென்னை போன்ற பெரிய நகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை பரவிக் கிடக்கிறது பார்க்கிங். பஸ் ஸ்டாண்ட் ஓரம் தொடங்கி ரயில் நிலையம், கடைகள், தியேட்டர்கள் என பைக் பார்க்கிங்க் இருப்பதை நாம் பார்க்கலாம். சாலையில் நிறுத்திச்சென்றால் பாதுகாப்பு இல்லை என்பதால் நாம் பார்க்கிங்கை நாடுகிறோம். ஆனால் சில நேரங்களில் பார்க்கிங்கில் இருந்தும் வாகனங்கள் காணாமல் போவதும் உண்டு. அது மாதிரியான சிக்கல்களை சமாளிக்க முன் ஏற்பாடாக பார்க்கிங் ரசீதில் வாகனம் தொலைந்தால் நிறுவனம் பொறுப்பல்ல என்ற வாசகத்தை அச்சிட்டு அதன் மூலம் சட்டம் பேசுவார்கள் பார்க்கிங்  நிறுவனத்தினர். ஆனால் உண்மையான சட்டம் என்ன சொல்கிறது? ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி பாதுகாப்புக்காக வாகனத்தை நிறுத்தி செல்லும் நிலையில் அது காணாமல் போனால் நாங்கள் பொறுப்பில்லை என சாதாரணமாக கடந்து போக முடியுமா? பார்க்கலாம்.

பார்க்கிங்கில் வாகனம் தொலைந்தால் ரூ.1 கோடி வரை இழப்பீடு? சட்டம் சொல்வது என்ன?

சட்டம் சொல்வது என்னவென்றால் பார்க்கிங் நிறுத்தப்படும் வாகனத்துக்கு முழுப் பொறுப்பும் அந்த பார்க்கிங் நிறுவனம் தான்.  வண்டி காணாமல் போனால் முழுப்பொறுப்பையும் அந்த நிறுவனமே ஏற்க வேண்டும். நாம் குறிப்பிட்ட தொகை செலுத்தியே வாகனத்தை பாதுகாப்புக்காக நிறுத்துகிறோம். எனவே நாம் அவர்களுக்கு நுகர்வோர். நுகர்வோர் சட்டப்படி, நம்முடைய வாகனம் சேதம் அடைந்தாலோ, தொலைந்து போனாலோ தொடர்புடைய நிறுவனம் தான் பொறுப்பேற்கவேண்டும் என்கிறது சட்டம். அப்படியானால்  வாகனம் தொலைந்தால் நிறுவனம் பொறுப்பல்ல என்று ரசீதில் எழுதி சட்டம் பேசுகிறார்களே? என்று கேட்டால் அதுவும் சட்ட விரோதம்தான்.

நுகர்வோர் சட்டப்படி வாகனம் தொலைந்தால் பொறுப்பேற்க முடியாது என அச்சிடுவது நுகர்வோர் சட்டத்தை தவறாக சித்தரிப்பதாகும். இதனை Unfair trade practices என்கிறோம். அதாவது முறையற்ற வர்த்தகம்.

பார்க்கிங்கில் வாகனம் தொலைந்தால் ரூ.1 கோடி வரை இழப்பீடு? சட்டம் சொல்வது என்ன?

Indian Contract Act 1872 ஒப்பந்த சட்டப்படி  ஒரு பொருளை மற்றவரிடம் ஒப்படைக்கும் போது அதனை பாதுகாக்க வேண்டிய தொடர்புடையவரின் கடமை. குறிப்பிட்ட பொருளுக்கு ஏதேனும் களங்கள் என்றால் அவர்களே பொறுப்பு.  வாகனம் தொலைந்துபோனால் நீங்கள் முறைப்படி நீதிமன்றத்தை நாடி சட்டப்போராட்டம் செய்யலாம். இந்த சட்டப்போராட்டத்தின் மூலம் நீங்கள் ஒரு கோடி முதல் ரூ.10 கோடி வரை இழப்பீடு கோரலாம். மாவட்ட  நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் மூலம் ரூ. 1 கோடி வரை இழப்பீடு கோரலாம். மாநில நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் மூலம் ரூ.1 கோடி முதல் இழப்பீடு கோரலாம். தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தை நாடினால் 10 கோடிக்கும் மேலும் இழப்பீடு கோரலாம். புகார் அளிக்க வேண்டுமென்றால், 14404 என்ற தேசிய நுகர்வோர் உதவி எண்ணை நாடலாம்.  அல்லது consumerhelpline.gov.in என்ற இணையதளம் சென்று புகார் அளிக்கலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Embed widget