Ola Scooter Delivery: விற்பனைக்கு வந்தது ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.. காலதாமதத்திற்கு காரணம் என்ன?
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இன்று முதல் டெலிவரி செய்யப்பட இருக்கின்றன.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் சந்தை பெருகி வரும் நிலையில், பிரபல ஓலா நிறுவனமும் அதில் கால்பதித்தது. அதன் படி கடந்த ஆகஸ்ட் மாதம் ஓலாவின் எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ ஆகிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. முன்னதாகவே இந்த ஸ்கூட்டர்கள் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக இருந்த நிலையில், முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆர்டர்கள் குவியத்தொடங்கின. இதனையடுத்து 1,100 கோடி மதிப்பிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கடந்த செப்டம்பர் மாதம் இரண்டு நாள் விற்பனையாக டெலிவரி செய்ய ஓலா நிறுவனம் திட்டமிட்டது.
ஆனால் உலகாவிய சிப்செட்ஸ் மற்றும் உதிரிபாகங்களின் தட்டுப்பாட்டால் ஸ்கூட்டர்கள் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து அக்டோபர் மாதம் ஸ்கூட்டர்களை டெலிவரி செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால் அது மேலும் தள்ளிப்போனது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 25 ஆகிய இடைப்பட்ட தேதிகளில் ஸ்கூட்டர்கள் டெலிவரி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இறுதியாக டிசம்பர் 15 ஆம் தேதி அதாவது இன்று ஸ்கூட்டர்கள் டெலிவரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று ஓலாவின் ஓலா எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ ஸ்கூட்டர்கள் டெலிவரி செய்யப்பட இருக்கின்றன.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பவிஷ் அகர்வால், இன்று முதல் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. முதல் நாள் விற்பனையாக பெங்களூரில் முதல் 50 வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு விற்பனை செய்ய தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர்கள் வசதிகளுக்கு ஏற்ப 99,999 ரூபாய்க்கும், 1,29,999 ரூபாய்க்கும் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்