மேலும் அறிய

EV Discounts: இயர் எண்ட் வந்தாச்சு..! எல்லா மின்சார கார்களுக்கும் ஆஃபர் - ரூ.5.2 லட்சம் வரை டிஸ்கவுண்ட், எப்புடி?

EV Discounts: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மின்சார கார்கள் மீது மார்ச் 31ம் தேதி வரை, ரூ.1.8 லட்சம் தொடங்கி ரூ.5.2 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom

EV Discounts: 2025-26 நிதியாண்டு இறுதியை முன்னிட்டு இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மின்சார கார் உற்பத்தியாளர்கள் அதிரடியான சலுகைகளை அறிவித்துள்ளனர்.

மின்சார கார்களுக்கு ரூ.5.2 லட்சம் வரை சலுகை:

2025-26 நிதியாண்டு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவடைய உள்ளது. இதையடுத்து, நாட்டின் மின்சார கார் உற்பத்தியாளர்கள், தங்களது கையிருப்பில் உள்ள மாடல்களை விற்று தீர்க்க அதிரடியான முன்னெடுப்பை கையிலெடுத்துள்ளனர். அதன்படி, கார்ப்ரேட் சலுகைகளை அள்ளி வீசுவதன் மூலம், தங்களது சுற்றுச்சூழலுக்கு உகந்த கார்களின் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர். பணத்தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்ரேட் சலுகைகள் மூலம், ரூ.1.8 லட்சம் தொடங்கி ரூ.5.2 லட்சம் வரை பயனர்கள் சேமிக்கலாம்.

அதிரடி டிஸ்கவுண்டிற்கான காரணம் என்ன?

மின்சார வாகன விற்பனை அதிகரிப்பதற்கு வரிச் சலுகைகள் ஒரு முக்கிய காரணம். இந்தியாவில் 2025-26 நிதியாண்டில் வணிக பயன்பாட்டிற்காக கொள்முதல் செய்யப்படும் மின்சார கார்களுக்கு, முதல் ஆண்டிலேயே 40 சதவிகிதம் வரை தேய்மானம் கணக்கிடப்பட்டு வரி விலக்கை கோரலாம்.  அதேநேரம், இந்த தேய்மான வரி விலக்கானது பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு 15 சதவிகிதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.  40 சதவிகிதம் என்பது முதல் ஆண்டிற்கு மட்டுமே பொருந்தும். இந்த தேய்மானத்திற்கான சலுகையானது நிறுவனங்களின் வரி சுமையை கணிசமாக குறைக்க உதவுகிறது. இந்த சலுகையானது வணிக அல்லது தொழில் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

எந்தெந்த நிறுவனங்களின் கார்களுக்கு சலுகை..

கிட்டத்தட்ட அனைத்து கார் உற்பத்தியாளர்களுமே தங்களது மாடல்களுக்கான சலுகைகளை வழங்குகின்றனர்.  இதன் மூலம் குறைந்தபட்சம் 15 முதல் 20 சதவிகிதம் வரை விற்பனை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. டாடா, மஹிந்த்ரா, JSW MG மோட்டார்ஸ், வின்ஃபாஸ்ட், BYD, கியா இந்தியா மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்கள் குறுகிய கால சலுகைகள் மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்களை குறிவைக்கும் சலுகைகளை பின்பற்றுகின்றன. வாடகை கார் ஓட்டுனர்கள் மற்றும் தங்களது பயன்பாட்டிற்கான கார்களை மின்சார யூனிட்களாக மாற விரும்பும் நிறுவனங்களை இலக்கு வைத்து இந்த சலுகை வழங்கப்படுகிறது. 

நிதியாண்டு முடிவதற்குள் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களை முடிக்க வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக, கொள்முதல் சலுகைகளுடன் உரிமையாளர் சலுகைகளையும் இணைத்து மார்ச் மாத சலுகைகளை உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். சில ப்ராண்டுகள் தங்கள் வாகன பிரிவை மின்சாரமயமாக்க விரும்பும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை இலக்காகக் கொண்டு, பொது சார்ஜிங் அணுகல், நீட்டிக்கப்பட்ட உத்தரவாதங்கள் மற்றும் பராமரிப்பு தொகுப்புகள் போன்ற கூடுதல் உரிமையாளர் சலுகைகளையும் அள்ளி வீசியுள்ளன.

பிற நிறுவனங்கள் வழங்கும் சலுகை..

பல உள்நாட்டு மற்றும் உலகளாவிய உற்பத்தியாளர்கள் நிதியாண்டு இறுதியில் வலுவான விற்பனையை பதிவு செய்ய முனைப்பு காட்ட தொடங்கியுள்ளனர்.  இது தேய்மான நன்மைகள் மற்றும் மின்சார கார்களின் குறைந்த இயக்க செலவுகளை அடையாளப்படுத்துகிறது. வாகன உற்பத்தியாளர்கள் விளம்பரப்படுத்துவதன் ஒரு பகுதியாக, நீட்டிக்கப்பட்ட உத்தரவாதக் கவரேஜ் மற்றும் பராமரிப்பு தொகுப்புகள் போன்ற உரிமைச் சலுகைகளையும் வழங்குகின்றனர்.

டெஸ்லா மற்றும் வின்ஃபாஸ்ட் போன்ற நிறுவனங்கள், டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களிலிருந்து மாறுவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களுடன் பெருநிறுவனங்கள் சார்ந்த சலுகைகளை முன்வைத்துள்ளன. அவை முன்பண செலவுகளைக் குறைத்து எளிய நிதி கட்டமைப்புகளை வழங்குகின்றன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

Frequently Asked Questions

மின்சார கார்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுகின்றன?

பணத்தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்ரேட் சலுகைகள் மூலம், ரூ.1.8 லட்சம் முதல் ரூ.5.2 லட்சம் வரை சேமிக்கலாம்.

மின்சார கார்களுக்கான அதிரடி தள்ளுபடிக்கு காரணம் என்ன?

வணிக பயன்பாட்டிற்காக கொள்முதல் செய்யப்படும் மின்சார கார்களுக்கு, முதல் ஆண்டிலேயே 40% வரை தேய்மான வரி விலக்கு கிடைக்கிறது. இது பெட்ரோல்/டீசல் வாகனங்களுக்கு 15% மட்டுமே.

எந்தெந்த நிறுவனங்களின் மின்சார கார்களுக்கு சலுகை உள்ளது?

டாடா, மஹிந்த்ரா, JSW MG மோட்டார்ஸ், வின்ஃபாஸ்ட், BYD, கியா இந்தியா மற்றும் டெஸ்லா போன்ற நிறுவனங்கள் சலுகைகளை வழங்குகின்றன.

இந்த சலுகைகள் யாருக்காக வழங்கப்படுகின்றன?

வாடகை கார் ஓட்டுனர்கள், தங்களது பயன்பாட்டிற்காக மின்சார வாகனங்களுக்கு மாற விரும்பும் நிறுவனங்கள், மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்கள் இலக்காக உள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Royal Enfield Electric Bike: ராயல் என்ஃபீல்டின் முதல் மின்சார பைக் - லேசான எடை, ரேஞ்ச், டாப் ஸ்பீட்? பேட்டரி, விலை
Royal Enfield Electric Bike: ராயல் என்ஃபீல்டின் முதல் மின்சார பைக் - லேசான எடை, ரேஞ்ச், டாப் ஸ்பீட்? பேட்டரி, விலை
Tata vs Mahindra SUV: டாடா vs மஹிந்திரா: எந்த எஸ்யுவி பெஸ்ட்? டிசைன், சேஃப்டி, அம்சங்கள்- ஓர் ஒப்பீடு!
Tata vs Mahindra SUV: டாடா vs மஹிந்திரா: எந்த எஸ்யுவி பெஸ்ட்? டிசைன், சேஃப்டி, அம்சங்கள்- ஓர் ஒப்பீடு!
Mahindra Scorpio: என்னடா பெரியா இன்னோவா..! ரூ.13 லட்சத்துக்கே 9 சீட்டர் எஸ்யுவி - பெர்ஃபாமன்ஸ் கிங், மொத்தமா எப்படி?
Mahindra Scorpio: என்னடா பெரியா இன்னோவா..! ரூ.13 லட்சத்துக்கே 9 சீட்டர் எஸ்யுவி - பெர்ஃபாமன்ஸ் கிங், மொத்தமா எப்படி?
Honda Offers: நாங்களும் தருவோம் தள்ளுபடி.! 1.80 லட்சம் ஆஃபர்.. City முதல் Amaze வரை - ஹோண்டா அறிவிப்பு!
Honda Offers: நாங்களும் தருவோம் தள்ளுபடி.! 1.80 லட்சம் ஆஃபர்.. City முதல் Amaze வரை - ஹோண்டா அறிவிப்பு!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ’’உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம்தான்; கூட்டணிக்குள்ளேயே பிரச்சினை’’ சீக்ரெட் சொன்ன விஜய்!
TVK Vijay: ’’உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம்தான்; கூட்டணிக்குள்ளேயே பிரச்சினை’’ சீக்ரெட் சொன்ன விஜய்!
TVK Vijay: மக்கள் பணத்தில் ஒரு பைசா தொடமாட்டேன்.. ஓட்டு போடுங்க.. நெல்லையில் விஜய் உறுதி!
TVK Vijay: மக்கள் பணத்தில் ஒரு பைசா தொடமாட்டேன்.. ஓட்டு போடுங்க.. நெல்லையில் விஜய் உறுதி!
TVK Vijay: “கும்பலாக சுத்துவோம்.. ஐயோ அம்மான்னு கத்துவோம்” - விஜய் வாகனத்தின் பின்னால் விபத்தில் சிக்கிய தவெகவினர்!
TVK Vijay: “கும்பலாக சுத்துவோம்.. ஐயோ அம்மான்னு கத்துவோம்” - விஜய் வாகனத்தின் பின்னால் விபத்தில் சிக்கிய தவெகவினர்!
Rajinikanth: நடிகர் பின்னால் செல்லும் கூட்டம்; ’’இளைஞர்கள்தான் ஜாக்கிரதையாக இருக்கணும்’’ ரஜினி வார்னிங்!
Rajinikanth: நடிகர் பின்னால் செல்லும் கூட்டம்; ’’இளைஞர்கள்தான் ஜாக்கிரதையாக இருக்கணும்’’ ரஜினி வார்னிங்!
Royal Enfield Electric Bike: ராயல் என்ஃபீல்டின் முதல் மின்சார பைக் - லேசான எடை, ரேஞ்ச், டாப் ஸ்பீட்? பேட்டரி, விலை
Royal Enfield Electric Bike: ராயல் என்ஃபீல்டின் முதல் மின்சார பைக் - லேசான எடை, ரேஞ்ச், டாப் ஸ்பீட்? பேட்டரி, விலை
US Iran War: பெட்ரோல், டீசல் விலை உயர்வது கன்ஃபார்ம்..! ட்ரிப்புக்கு கப்பலுக்கு ரூ.18.52 கோடி கட்டணம்- ஈரான்
US Iran War: பெட்ரோல், டீசல் விலை உயர்வது கன்ஃபார்ம்..! ட்ரிப்புக்கு கப்பலுக்கு ரூ.18.52 கோடி கட்டணம்- ஈரான்
RBI MPC Meeting: பாலை வார்த்த ஆர்பிஐ.. ரெப்போ வட்டி விகித மாற்றம் தொடர்பான முடிவு அறிவிப்பு - பொதுமக்கள் நிம்மதி
RBI MPC Meeting: பாலை வார்த்த ஆர்பிஐ.. ரெப்போ வட்டி விகித மாற்றம் தொடர்பான முடிவு அறிவிப்பு - பொதுமக்கள் நிம்மதி
Trump on Iran: அடிச்சாருயா அந்தர் பல்டி.! திடீரென ஈரான் மீது வந்த கரிசனம்.! பாசத்தில் பொங்கும் ட்ரம்ப்; புதிய பதிவு
அடிச்சாருயா அந்தர் பல்டி.! திடீரென ஈரான் மீது வந்த கரிசனம்.! பாசத்தில் பொங்கும் ட்ரம்ப்; புதிய பதிவு
Embed widget