New Volvo XC60 : வால்வோவின் புதிய வகை XC60 கார்.. சொகுசின் உச்சம்.. அப்படி என்ன ஸ்பெஷலாக இருக்கு?
வால்வோ நிறுவனத்தின் புதிய வகை X60 காரின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

வால்வோவின் எஸ். யூ.வி ரக காரானா X60 மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதன் புதிய வெர்ஷன் அதை விட பெட்டர் ஆப்சன்களுடன் களமிறங்கியுள்ளது. இந்த புதிய X60 காரானது Petrol mild hybrid என்ஜினை உள்ளடக்கியுள்ளது. முந்தைய வெர்ஷனுடன் ஒப்பிடும் போது, இதில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. எல்.இ.டி ஹெட் லெம்பிலும், பம்பரிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

19 இன்ச் அலாய் வீலை கொண்டுள்ள X60 காரில், நப்பா லெதர் சீட்டும், ஹை குவாலிட்டி தொடுதிரையையும் இடம்பெற்றுள்ளது. காரின் உட்பகுதியின் முன்பக்கத்தில் உள்ள ஸ்டியரிங், கிரிஸ்டல் கிளாஸ் கியர் உள்ளிட்டவை அதிக சொகுசை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. கேபினில் உள்ள Infotainment System - கூகுள் மேப்ஸ் உள்ளிட்டவற்றோடு பல்வேறு கூகுள் ஆப்களை கொண்டுள்ளது.

இதில் இடம்பெற்றுள்ள அட்வான்ஸ் ஏர் கிளீனர், டெல்லி போன்ற காற்று மாசுபாடு அதிகம் உள்ள இடங்களில் ஓட்டுவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி காற்றின் தரத்தையும் நாம் தொடுதிரையில் பார்த்துக்கொள்ள முடியும். 48V Mild hybrid செட் அப்பை உள்ளடக்கிய புதிய XC60 250bhp குதிரை திறனுடன், 350 Nm டார்க்கையும் உள்ளடக்கியுள்ளது. Mild hybrid செட் அப் வாகனத்தின் வேகத்தை அதிகப்படுத்துவதுடன், சொகுசான பயணத்தையும் தரக்கூடியதாக இருக்கிறது. 61. 90 லட்சத்திற்கு கிடைக்கும் இந்த வாகனம் நம்மூர் சாலைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
Jacqueline Fernandez :200 கோடி ரூபாயை மிரட்டி பறித்த வழக்கு.. தப்ப முயன்ற பாலிவுட் நடிகை? விமான நிலையத்தில் மடக்கிப்பிடித்த போலீஸ்..! https://t.co/nsKXVvVL6O#JacquelineFernandez #mumbai #MumbaiPolice #extortioncase
— ABP Nadu (@abpnadu) December 5, 2021
TN Governor | தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கை?: கல்லூரி முதல்வர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடும் ஆளுநர்..#TNGovernor #GovernorRNRavihttps://t.co/zNSV9szDON
— ABP Nadu (@abpnadu) December 5, 2021
மேலும் படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்





















