Mercedes Maybach Launch | இந்திய சந்தையில் அல்ட்ரா ஆடம்பர கார் - அனல்பறக்கும் விற்பனையில் பென்ஸ் மேபாக்
பிரபல பென்ஸ் கார் நிறுவனம் தன்னுடைய ப்ரீமியம் எடிஷன் கார் ரகமான Maybach வகையில் புதிய காரை இந்திய சந்தையில் தற்போது வெளியிட்டுள்ளது.
Mercedes Benz Maybach SUV GLS 600 4Matic என்ற காரை தான் பென்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. ஜெர்மானிய நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 1926ம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 95 ஆண்டுகளுக்கும் மேலாக தனது சேவையை அளித்து வரும் மெர்சிடிஸ் நிறுவனம் பல நாடுகளிலும் தனது கிளையை பரப்பியுள்ளது. இந்நிலையில் பிரபல பென்ஸ் நிறுவனம் 1994ம் ஆண்டு இந்திய சந்தையில் கால்பதித்து குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பென்ஸ்.
1994ம் ஆண்டு தனது கார் சேவையில் 68ம் ஆண்டை நிறைவு செய்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகமானது. இந்திய சந்தையில் அறிமுகமான முதல் ஆடம்பர கார்வகை பென்ஸ் என்று கூறப்படுகிறது. அப்போது தனது E கிளாஸ் மாடலான டபிள்யு 124 ஈ கிளாஸ் மடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது பென்ஸ் நிறுவனம். புனே நகரில் தங்களுடைய உற்பத்தி மையத்தையும் தொடங்கியது அந்நிறுவனம். அன்று தொடங்கி இன்று வரை பல மாடல்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்து வருகின்றது பென்ஸ் நிறுவனம். இந்நிலையில் இந்த ஆடம்பர கார் நிறுவனம் தங்களுடைய Mercedes Benz Maybach SUV GLS 600 4Matic காரை தற்போது வெளியிட்டுள்ளது.
The most luxurious SUV - the all-new Mercedes-Maybach GLS is officially here. Become a part of the Mercedes-Maybach legacy with intuitive technology and refined levels of sophisticated luxury. Visit https://t.co/cJpJqofhRr to know more. #GLSMaybach #MercedesMaybach pic.twitter.com/qfrbWCh88z
— Mercedes-Benz India (@MercedesBenzInd) June 8, 2021
Mercedes Benz Maybach SUV GLS 600 4Matic
எஸ்.யு.வி வகையை சேர்ந்த இந்த கார், அறிமுகம் செய்யப்பட்டபோதே புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. ஆம் பென்ஸ் நிறுவனம் 2021ம் ஆண்டு விற்பனைக்கு திட்டமிட்டிருந்த 50க்கும் அதிகமான கார்கள் ஏற்கனவே புக் செய்யப்பட்டுவிட்டது. இனி அடுத்த பேட்ச் கார்கள் தயாரிக்கப்பட்டு புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 2022ம் ஆண்டின் முதல் காலாண்டில் டெலிவரி செய்யப்படு என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Mercedes Benz Maybach SUV GLS 600 4Matic இந்தியாவில் வெளியாகும் முதல் அல்ட்ரா ஆடம்பர கார் என்று கூறப்படுகிறது. இந்த அல்ட்ரா ஆடம்பர காரின் விலை 2.43 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. மேபாக் ஜி.எல்.எஸ் 600 4 மேடிக் வி 8 3,982 சிசி எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 410 கிலோவாட் (557 ஹெச்பி) 6000-6500 ஆர்பிஎம் மற்றும் 730 என்எம் 2500-4500 ஆர்.பி.எம் கொண்டது.
Ducati Panigale | சீறிப்பாயும் டுகாட்டி ; இரண்டு மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்!
இந்த வாகனத்திற்கு 0 முதல் 100 கிலோமீட்டரை எட்ட 4.9 வினாடிகளில் தேவைப்படும். இந்த வாகனத்தால் மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்ல முடியும் என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.