Ducati Panigale | சீறிப்பாயும் டுகாட்டி ; இரண்டு மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்!
பிரபல ஸ்போர்ட்ஸ் பைக் தயாரிப்பு நிறுவனமான டுகாட்டி தனது இரண்டு புதிய ஹை ஸ்பீட் பைக்களை இந்திய சந்தியில் அறிமுகம் செய்துள்ளது.
Ducati Panigale V4 மற்றும் Ducati Panigale V4 S ஆகிய மடல்களை தற்போது இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. பிரபல வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமையின் கீழ் இயங்கும் பல முன்னணி கார் மாற்றம் பைக் தயாரிப்பு நிறுவனங்களில் டுகாட்டி நிறுவனமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலியில் உள்ள போலோக்னா என்ற இடத்தை தலைமையாக கொண்டு இந்த நிறுவனம் செயல்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டில் இருந்து டுகாட்டி நிறுவனம் தன்னுடைய பைக்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகின்றது.
Get ready to rule the racetrack!
— Ducati India (@Ducati_India) June 7, 2021
The all-new Panigale V4 is now available in India with prices starting at INR 23.50 Lacs (Ex-Showroom India). pic.twitter.com/hqYd9hWtd6
இந்நிலையில் இந்திய சந்தையில் Ducati Panigale V4 மற்றும் Ducati Panigale V4 S ஆகிய மாடல்களுக்கான புக்கிங்கை டுகாட்டி நிறுவனம் தனது டீலர்கள் மூலம் தொடங்கியுள்ளது. அதே சமயம் இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் நான்கு புதிய மாடல் பைக்குகளை இந்திய சந்தையில் வெளியிட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. Ducati Panigale V4 மற்றும் Ducati Panigale V4 S ஆகிய இரண்டு மாடல்களும் பி.எஸ்-6 என்ஜின் வகையை சேர்ந்தது. முறையாக 23.50 மற்றும் 28.45 லட்சம் என்ற விலையில் இந்த பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படும்.
Tirumph Speed Twin | அடுத்த ப்ரீமியம் பைக்கை வெளியிட்ட டிரையம்ப் - மூன்று வண்ணங்கள் ஸ்பீட் ட்வின்
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ப்ரீமியம் வகை கார் மற்றும் பைக்களின் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக்க இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த ப்ரீமியம் மாடல் பைக் மற்றும் கார்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது. Ducati Panigale V4 மற்றும் Ducati Panigale V4 S ஆகிய மாடல்களின் முந்தய வெர்சன் இந்தியாவில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டுகாட்டி பைக்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில் அப்கிரேட் செய்யப்பட்ட இந்த இரண்டு மாடல்கள் தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் ட்ரையம்ப் என்னும் பைக் நிறுவனம் இந்திய சந்தையில் ஓர் ஆண்டிற்கு மேலாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனது பைக்கை சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. ஸ்க்ராம்ப்ளர் 1200 ஸ்டீவ் மெக்-குயின் எடிஷன் என்னும் அந்த பைக்கை மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்தது. பல சிறப்பம்சங்களுடன் களமிறங்கியுள்ள இந்த ஆடம்பர பைக்கின் ஆரம்ப மாடலின் விலை சுமார் 13 லட்சத்து 75 ஆயிரம் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 100 கிலோமீட்டர் செல்ல இந்த வாகனத்திற்கு சுமார் 4.6 லிட்டர் பெட்ரோல் தேவைப்படும் என்றும் அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது.