மேலும் அறிய

Maruti Suzuki: லிட்டருக்கு 33.85 கி.மீ. மைலேஜ் தரும் K10 S-CNG கார்.. குறைந்த விலையில் வாவ் அம்சங்கள்..

லிட்டருக்கு 33.85 கி.மீ. மைலேஜ் தரக்கூடிய Alto K10 S-CNG எனும், புதிய மாடல் காரை மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய சந்தையில் ஏற்கனவே S-CNG பொருத்தப்பட்ட 12 மாடல்  வாகனங்களை,  மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்தி, பத்து லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்றுள்ளது. S-CNG பொருத்தப்பட்ட எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், அண்மையில் பலேனோ மற்றும் XL6 வகை கார்களையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது.

மருதி சுசுகி நிறூவனத்தின் புதிய கார்:

அந்த வரிசையில் தற்போது புதியதாக, S-CNG பொருத்தப்பட்ட 13வது மாடலாக Alto K10 S-CNG எனும் காரை மாருதி சுசுகி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஃபேக்டரி ஃபிட் செய்யப்பட்டு VXI வேரியண்டில் மட்டும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் இந்த காரின் விலை, ரூ.5.94 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் முந்தைய மாடலான பெட்ரோலில் இயங்கும் ஆல்டோ k10 காரை விட, CNG மாடல் காரின் விலை ரூ.95,000 அதிகம் ஆகும்.

காரின் சிறப்பம்சங்கள்:

1.0 லிட்டர் K சீரிஸ் என்ஜின் பொருத்தப்பட்டுள்ள இந்த கார், 56 குதிரைகளின் சக்தி, 82.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் உடன், 55 லிட்டர் எரிபொருள் டேங்க் கொண்டுள்ள Alto K10 S-CNG கார்,  லிட்டருக்கு 33.85 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ப்ளூடூத் இணைப்புடன் கூடிய 2-DIN SmartPlay ஆடியோ சிஸ்டம், 2 ஸ்பீக்கர்கள், சூழலை உணர்ந்து தானாகவே கதவை திறக்கும் சென்சார்கள், சென்ட்ரல் லாக்கிங், வேகத்தை உணரும் ஆட்டோ டோர் லாக், AUX மற்றும் USB போர்ட் என பல்வேறு சிறப்பம்சங்களும் காரில் இடம்பெற்றுள்ளன. இந்திய சந்தையில் ரூ.5 லட்சத்தை ஆரம்ப விலையாக கொண்ட, ரெனால்ட் க்விட், மாருதி ஆல்டோ 800 CNG மற்றும் S ப்ரெஸ்கோ CNG ஆகிய மாடல்களுக்கு,  Alto K10 S-CNG கார் போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.

S-CNG பிரிவு மிகவும் சிறப்பான முறையில் டிசைன் செய்யப்பட்டு, இந்திய சாலைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு இருப்பதாகவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பதாகவும், மாருதி சுசுகி நிறுவனத்தின், விற்பனை மற்றும் விளம்பர பிரிவு மூத்த நிர்வாக அலுவலர் சஷான்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்து உள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!

மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?

TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?

Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்

ABP Premium

வீடியோ

5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலாMa Subramanian Issue | மா.சு-வை மாத்துங்க!அமைச்சராகும் எழிழன்? பரபரக்கும் சுகாதாரத்துறைAadhav Arjuna ED Raid |வழிக்கு வராத ஆதவ் !ரவுண்டு கட்டும் பாஜகED ரெய்டின் பின்னணி?Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Karthigai 2024: பக்தர்களே! நாளை பிறக்கிறது முக்தி தரும் கார்த்திகை - இத்தனை விசேஷங்களா?

CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!

Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்

அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?

Embed widget