(Source: ECI/ABP News/ABP Majha)
Mahindra XUV400: இந்தியாவின் அதிவேக எலக்ட்ரிக் SUV… ஜனவரி 2023-இல் வெளியாகிறது மஹிந்திரா XUV400!
இந்த எலெக்ட்ரிக் SUV உடன் அதற்கான சார்ஜர் வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் வேகமாக சார்ஜிங் நெட்வொர்க்கை அமைக்கும் வேலையிலும் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.
2020 ஆம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட eXUV300 கான்செப்ட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள Mahindra XUV400 Electric கார் அடுத்த வருட ஆரம்பத்தில் வெளியாக உள்ளது. இந்த கார் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டியாக களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா எக்ஸ்யுவி 400
இந்த எலெக்ட்ரிக் SUV பற்றி வரும் ஜனவரி 2023-ல் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக தற்போது காரில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மஹிந்திரா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் SUV காரான Mahindra XUV400, 456 கிமீ டிரைவிங் ரேஞ்ச் தரும் என்று நிறுவனம் கூறியுள்ளது. டிசம்பர் 2022 முதல் 16 நகரங்களில் முதல் கட்டமாக டெமோ வாகனங்கள் அனுப்பப்பட்டு இந்த எலெக்ட்ரிக் காருக்கான டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கும் என மஹிந்திரா நிறுவனம் அறிவித்து இருக்கிறது. மேலும் வரும் ஜனவரி 2023-ன் இறுதியில் இந்த காரின் டெலிவரி தொடங்கும். இந்த எலெக்ட்ரிக் SUV உடன் அதற்கான சார்ஜர் வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் வேகமாக சார்ஜிங் நெட்வொர்க்கை அமைக்கும் வேலையிலும் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.
வேகம் & ரேஞ்ச்
மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் காரானது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்-லக்ஸரி செக்மென்ட்டில் அதிவேக ஆக்ஸலரேஷன் கொண்ட முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகிறது. இந்த கார் வெறும் 8.3 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டுகிறது. இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 150kmph ஆகும். முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 456 கிலோமீட்டர் எலெக்ட்ரிக் ரேஞ்சை வழங்குகிறது.
சார்ஜ் செய்வது
Li-ion செல்களைப் பயன்படுத்தும் 39.4kW பேட்டரி பேக்குடன் இந்த கார் வருகிறது. இதன் மூலம் இந்த காரை 0kW DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 50 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 80% சார்ஜாகி விடும் என்று கூறப்படுகிறது. அதே நேரம் 7.2 kW/32A வழியாக சார்ஜ் செய்தால் முழுதாக 100 சதவிகிதம் சார்ஜ் செய்ய ஆறரை மணி நேரம் ஆகிறது. ஸ்டான்டர்ட் 3.3 kW/16A டொமஸ்டிக் சாக்கெட்டை பயன்படுத்தி சார்ஜ் செய்யும்போது 100% சார்ஜ் செய்ய 13 மணி நேரம் ஆகிறது.
வெளித்தோற்றம்
இந்த கார் இன்-கிளாஸ் வீல்பேஸ், 2600 மிமீ மற்றும் 378 லிட்டர் பூட் கெப்பாசிட்டியுடன் வருகிறது. இந்த கார் 4200 மிமீ நீளம் மற்றும் 1821 மிமீ அகலம் கொண்டதாக இருக்கும். காப்பர் ஃபினிஷில் டூயல் டோன் ரூஃப் உடன், ஆர்க்டிக் ப்ளூ, கேலக்ஸி கிரே, நாபோலி பிளாக், எவரெஸ்ட் ஒயிட், மற்றும் இன்பினிட்டி ப்ளூ உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் இந்த எலெக்ட்ரிக் SUV வெளியிடப்படும் என்று நிறுவனம் தெரிவுத்துள்ளது. புதிய வெண்கல நிறத்தில் 'Twin Peaks' லோகோவை மையத்தில் கொண்ட முதல் மஹிந்திரா எலெக்ட்ரிக் மாடல் கார் இதுவாகும்.
எப்போது வெளியீடு?
இந்த எலெக்ட்ரிக் SUV காரின் விலை ஜனவரி 2023-ல் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. முதல் கட்டமாக வரும் ஜனவரி 2023-ல் சென்னை, மும்பை, ஹைதராபாத், டெல்லி NCR, பெங்களூரு, கொல்கத்தா, புனே, அகமதாபாத், கோவா, ஜெய்ப்பூர், சூரத், நாக்பூர், திருவனந்தபுரம், கொச்சி, நாசிக், சண்டிகர் உள்ளிட்ட 16 நகரங்களில் மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒரு மாதம் முன்பு முதல் டெஸ்ட் ட்ரைவிற்கு கார் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்