Elon Musk: 2024-லேயே இந்தியா டெஸ்லா கார்? பிரதமர் மோடியை சந்திக்க தயாரான எலான் மஸ்க் போட்ட டிவீட்
Elon Musk: இந்தியாவில் நரேந்திர மோடி உடனான சந்திப்பை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக, எக்ஸ் மற்றும் டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
Elon Musk: பிரதமர் உடனான சந்திப்பின்போது இந்தியாவிஸ் தனது முதலீடுகள் குறித்து, எலான் மஸ்க் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலான் மஸ்க் டிவீட்:
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலோன் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த மாத இறுதியில் பிரதமர் மோடியுடனான ஒரு குறிப்பிடத்தக்க சந்திப்பிற்காக, இந்தியாவிற்கு வருகை தரவுள்ள நிலையில் அவர் பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பயணத்தின் போது, இந்தியாவில் தனது நிறுவனத்தின் முதலீட்டுத் திட்டங்களையும், நாட்டில் டெஸ்லா தொழிற்சாலையை நிறுவுவது பற்றியும் எலான் மஸ்க் அறிவிப்பார் என கூறப்படுகிறது.
இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை?
இந்தியாவில் டெஸ்லா மின்சார வாகனங்களை வழங்குவது 'இயற்கையான முன்னேற்றம்' என்று எலான் மஸ்க் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ஏப்ரல் 22 அவர் இந்தியா வரக்கூடும் என்றும், அபோது நிறுவனத்தின் மற்ற முகிய நிர்வாகிகளும் உடனிருப்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் டெஸ்லாவின் லட்சியங்கள் குறித்து அவர் ஒரு தனி பொது அறிவிப்பையும் வெளியிடுவார் என தெரிகிறது.
Looking forward to meeting with Prime Minister @NarendraModi in India!
— Elon Musk (@elonmusk) April 10, 2024