மேலும் அறிய

Kia Car Price: எகிறப்போகும் கியா கார்களின் விலை - ஏப்ரல் 1 முதலான நிலவரம் என்ன தெரியுமா?

Kia Car Price: கியா நிறுவன கார்களின் விலை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர உள்ளது.

Kia Car Price: கியா நிறுவன கார்களின் விலை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், 3 சதவிகிதம் வரை உயர்த்தப்பட உள்ளது.

கியா கார்கள்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாதமாத விற்பனையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. அதேநேரம், சர்வதேச அளவில் விநியோக சங்கிலியில் நிலவும் சிக்கல் மற்றும் பொருட்களின் உற்பத்தி செலவு அதிகரிப்பு கார் உற்பத்தியாளர்களுக்கு நீண்டகால சிக்கலாக உள்ளது. இதனை காரணம் காட்டி, கியா நிறுவனம் இந்திய சந்தையில் கார்களின் விலையை உயர்த்த உள்ளது. இந்த புதிய விலையானது வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

கியா கார் விலை உயர்வு:

கியா இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு மூன்று சதவிகிதம் வரை விலையை உயர்த்த உள்ளது. நடப்பாண்டில் கியாவால் அமல்படுத்தப்படும் முதல் விலை உயர்வு நடவடிக்கை இதுவாகும். செல்டோஸ் , சோனெட் மற்றும் கேரன்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய கியா நிறுவன மாடல்களின் புதிய விலைகள் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய விலை நிலவரம்:

தற்போதைய சூழலில் 19 வேரியண்ட்களில் கிடைக்கும் கியா சோனேட் விலை  7.99 லட்சத்தில் தொடங்கி 15.69 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 32 வேரியண்ட்களில் கிடைக்கும் கியா செல்டோஸ் கார் மாடலின் தொடக்க விலை 10 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயாகவும், அதிகபட்ச விலை 20 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 23 வேரியண்ட்களில் கிடைக்கும் கியா காரென்ஸ் கார் மாடல், தொடக்க விலை 10.45 லட்சமாகவும் அதிகபட்ச விலை 19.45 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு வேரியண்ட்களாக கிடைக்கும் EV6 விலை 60.95 - 65.95 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் 3 சதவிகிதம் வரை விலை உயர்த்தப்பட்டால், ஒவ்வொரு காரின் மீதும் சில ஆயிரங்கள் விலை உயரக்கூடும்.

இதையும் படியுங்கள்: Duplicate RC Book: உங்க வண்டி ஆர்.சி.புக் தொலைஞ்சிருச்சா? புதிய ஆர்.சி.புக் வாங்குவது எப்படி? வழிமுறைகள் என்ன?

விற்பனை எப்படி?

விற்பனையைப் பொறுத்தவரை, கியா 1.16 மில்லியன் ஒட்டுமொத்த யூனிட்களை விற்றுள்ளது. நடுத்தர அளவிலான எஸ்யூவி செல்டோஸ் 6.13 லட்சம் யூனிட் விற்பனையைத் தாண்டியுள்ளது, சோனெட் 3.95 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களையும், கேரன்ஸ் எம்பிவி 1.59 லட்சம் யூனிட்களையும் விற்பனை செய்துள்ளது. எலக்ட்ரானிக் ஆயில் பம்ப் கன்ட்ரோலரில் ஏற்படக்கூடிய கோளாறை சரிசெய்ய கியா கடந்த மாதம் பெட்ரோல்-சிவிடி செல்டோஸின் 4,358 யூனிட்களை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, கியா EV9, நியூ கார்னிவால், க்ளாவிஸ் மற்றும் EV9 ஆகிய புதிய கார் மாடல்களை சந்தைக்கு கொண்டு வர கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget