Duplicate RC Book: உங்க வண்டி ஆர்.சி.புக் தொலைஞ்சிருச்சா? புதிய ஆர்.சி.புக் வாங்குவது எப்படி? வழிமுறைகள் என்ன?
Duplicate RC Book: வாகனத்தின் ஆர்.சி.புக் தொலைந்துவிட்டால் புதிய ஆர்.சி. புக் வாங்குவது எப்படி? என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
Duplicate RC Book: வாகனத்தின் ஆர்.சி. புக் தொலைந்துவிட்டால் புதிய ஆர்.சி. புக் வாங்குவதற்கான வழிமுறைகள் படிப்படியாக கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆர்.சி. புக் என்றால் என்ன?
RC (Registyered Certificate) அல்லது பதிவுச் சான்றிதழ் என்பது வாகனத்தை ஓட்டும் போது, கையில் வைத்திருக்க வேண்டிய முக்கியமான ஆவணமாகும். ஒருவேளை நீங்கள் அதை தொலைத்துவிட்டால் போக்குவவரத்து காவலர்களிடம் அபராதங்களை தவிர்க்க நகல் ஆர்சி புத்தகத்தைப் பெற வேண்டியது அவசியம். இதற்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டு விதங்களிலும் விண்ணப்பிக்கலாம். ஆர் சி புத்தகத்திற்கு விண்ணப்பிப்பது ஒரு விரைவான மற்றும் எளிமையான செயல்முறையாகும். செலவும் குறைவு தான்.
டூப்ளிகேட் ஆர்சி புக் என்றால் என்ன?
டூப்ளிகேட் ஆர்சிக்கள் என்பது, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) பதிவுசெய்யப்பட்ட குறிப்பிட்ட வாகனங்களுக்கு வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் அசல் பதிவுச் சான்றிதழ்களின் (ஆர்சி) நகல்களாகும். அதை புதுப்பிக்கும் போது நீங்கள் இரண்டாவது RC புக் அல்லது ஸ்மார்ட் கார்டைப் பெறலாம். அதேநேரம், ஆர்சி புக் தொலைந்துவிட்டால் முதலில் காவல்துறையில் புகாரளிக்க வேண்டியது அவசியம். அந்த புகாரின் நகலுடன் ஆர்சி நகலைப் பெற ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.
டூப்ளிகேட் ஆர்சி புக்கிற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
- முதலில் https://parivahan.gov.in எனப்படும் பரிவாஹன் சேவை எனப்படும் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகுங்கள்
- "ஆன்லைன் சேவைகள்" என்பதைக் கிளிக் செய்து, பின்னர் "வாகனம் தொடர்பான சேவைகள்" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் நகல் ஆர்சிக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் விருப்பத்தைத் தேர்வுசெய்யுங்கள்
- நகல் ஆர்சிக்கான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தானாக உருவாக்கப்பட்ட உரிமையாளரின் தகவலைச் சரிபாருங்கள்
- ஆன்லைன் சேவை கட்டணம் செலுத்தும்போது, இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், LCV, HCV போன்றவற்றைப் பொறுத்து கட்டணம் மாறுபடும்
- கட்டணம் செலுத்தப்பட்ட பிறகு ரசீது உருவாக்கப்படுகிறது. இதை மற்ற துணை ஆவணங்களுடன் சேர்த்து, தொடர்புடைய போக்குவரத்து அதிகார அலுவலகத்திற்கு வழங்கப்பட வேண்டும்
டூப்ளிகேட் ஆர்சி புக்கிற்கு ஆஃப்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
- படி 1: RC புக் தொலைந்ததற்கான பதிவுச் சான்றிதழின் சலானை காவல்நிலையத்தில் இருந்து பெறுங்கள்
- படி 2: வாகனம் ஃபனான்ஸ் அல்லது குத்தகைக்கு விடப்பட்டிருந்தால், உர்ய நபர்களிடமிருந்து NOC சான்றை பெறவும்
- படி 3: தேவையான ஆவணங்களை சேர்த்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு (RTO) அனுப்புங்கள்
- படி 4: மாநிலத்தின் விதிமுறைகளின்படி நகல் ஆர்சி புக்கிற்கான கட்டணத்தைச் செலுத்துங்கள்
இந்த செயல்முறையை முடித்த சில வணிக நாட்களுக்குள் உங்களின் நகல் ஆர்சி புக், உங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு தபால் மூலம் வந்து சேரும்.
தேவையான ஆவணங்கள்:
டூப்ளிகேட் ஆர்சி புக்கிற்கு விண்ணப்பிக்க சில முக்கிய ஆவணங்கள் தேவைப்படுகின்றன. அதன்படி, ஆர்சி புக் தொலைந்தது தொடர்பான காவல்துறை சான்றிதழ், படிவம் 26, வாகனத்தின் தனித்துவமான மாசு சான்றிதழ், கார் உரிமையாளரின் முகவரி சரிபார்ப்பு, கார் உரிமையாளரின் படிவம் 60 அல்லது 61 அல்லது பான் கார்டு, கையொப்பத்தின் மூலம் உரிமையாளரை அடையாளம் காணுதல், வணிக வாகனங்களுக்கு வரி அனுமதிச் சான்றிதழ் மற்றும் அமலாக்கப் போக்குவரத்துப் பிரிவின் தீர்வுச் சலான் போன்ற கூடுதல் ஆவணங்கள், என்ஜின் பென்சில் மற்றும் என்ஜின் சேஸ் விவரங்கள் மற்றும் அசல் RC காணவில்லை என்று கூறும் உறுதிமொழிப் பத்திரத்தின் நகல் ஆகிய ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்.