Honda Destini 125: நம்ம டெஸ்டினிக்கு போக DESTINI 125.. விலை எப்படி? மைலேஜ் எப்படி?
ஹோண்டா நிறுவனத்தின் டெஸ்டினி 125 ஸ்கூட்டர் விலை என்ன? மைலேஜ் என்ன? என்பதை கீழே காணலாம்.

இந்தியாவில் தரமான இரு சக்கர வாகன தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனமாக ஹோண்டா உள்ளது. பைக் தயாரிப்பில் ஹோண்டா அசத்தி வருவது போல ஸ்கூட்டர் தயாரிப்பிலும் ஹோண்டா அசத்தி வருகிறார். ஆக்டிவா, டியோ போன்ற ஸ்கூட்டர்கள் இருந்தாலும் DESTINI 125 ஸ்கூட்டரும் வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படும் ஸ்கூட்டராக உள்ளது.
DESTINI 125:
இந்த DESTINI 125 ஸ்கூட்டர் 125 சிசி திறன் கொண்டது ஆகும். 7 ஆயிரம் ஆர்பிஎம் ஆற்றல் கொண்டது. அதிகபட்சமாக 5500 ஆர்பிஎம் டார்க் இழுதிறன் கொண்டது ஆகும். இந்த DESTINI 125 மொத்தம் 3 வேரியண்ட்களை கொண்டது ஆகும்.
1. DESTINI 125 ZX+
2. DESTINI 125 ZX
3. DESTINI 125 VX
இந்த 3 வேரியடண்களும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல வண்ணங்களில் உள்ளது. DESTINI 125 ZX+ கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் மட்டும் சந்தையில் விற்கப்படுகிறது. DESTINI 125 ZX ஸ்கூட்டர் நீலம் மற்றும் கத்தரிப்பூ வண்ணத்தில் விற்கப்படுகிறது. DESTINI 125 VX சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது.
விலை என்ன?
DESTINI 125 VX - ரூபாய் 85 ஆயிரத்து 951
DESTINI 125 ZX - ரூபாய் 94 ஆயிரத்து 801
DESTINI 125 ZX+ - ரூபாய் 95 ஆயிரத்து 801
சென்னையில் மேலே கூறிய ஸ்கூட்டர்களின் எக்ஸ் ஷோரூம் விலை இதுவாகும். இந்த DESTINI 125 லிட்டருக்கு 60 கி.மீட்டர் மைலேஜ் அளிக்கிறது. டிஸ்க் மற்றும் ட்ரம் ப்ரேக் கொண்டது. 5.3 லிட்டர் பெட்ரோல் டேங்கர் உள்ளடக்கியது. 115 கிலோ கிராம் எடை கொண்டது இந்த ஸ்கூட்டர் ஆகும். வாடிக்கையாளர்களை கவரம் வகையில் இதன் தோற்றமும், வடிவமும் உள்ளது. பெரிய இருக்கை கொண்டது. சக்கரமும் பெரியதாக இருப்பது இதற்கு பலமாக உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி கொண்டது ஆகும்.
எல்இடி முகப்பு விளக்குகளை கொண்டது. எச் வடிவத்தில் இந்த முகப்பு விளக்குகள் உள்ளது. நகர்ப்புறங்களில் ஓட்டுவதற்கு மிகவும் ஏதுவானதாக உள்ளது. தேவையற்ற சத்தம், அதிர்வுகளை இந்த DESTINI 125 எஞ்ஜின் ஏற்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
நெடுஞ்சாலையில் மணிக்கு 70 கி.மீட்டர் வரை வேகம் வரை செல்லும் ஆற்றல் கொண்டது. இது 5.3 லிட்டர் பெட்ரோல் டேங்கரை கொண்டதால் 250 கி.மீட்டர் வரை தடையில்லாமல் செல்லும் ஆற்றல் கொண்டது ஆகும். ஆக்டிவா, டியோ போன்ற ஹோண்டாவின் ஸ்கூட்டர்கள் வெற்றிகரமாக விற்பனையாகி வந்தாலும் இந்த டெஸ்டினியும் வெற்றிகரமாக விற்பனையாகி வருகிறது.





















