டேங்கை நிரப்பினால் 660 கி.மீட்டர் பறக்கலாம்.. Hero Passion Plus பைக் வாங்கலாமா?
ஹீரோ நிறுவனத்தின் Hero Passion Plus இரு சக்கர வாகனத்தின் விலை, மைலேஜ் குறித்து கீழே காணலாம்.

இந்தியாவின் பிரபலமான இரு சக்கர வாகன நிறுவனம் ஹோண்டா. பைக் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான இவர்களின் பல்வேறு படைப்புகள்தான் இன்றும் இந்திய சாலைகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
Passion Plus:
ஹோண்டா நிறுவனத்தின் வெற்றிகரமான இரு சக்கர வாகனங்களில் ஒன்று Hero Passion Plus ஆகும். இதன் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம். இந்த பைக்கில் மொத்தம் 2 வேரியண்ட்கள் உள்ளது.
1.Hero Passion Plus
2. Passion Plus Million Edition
விலை:
இந்த Hero Passion Plus இரு சக்கர வாகனத்தின் விலை ரூபாய் 93 ஆயிரத்து 652. Passion Plus Million Edition இரு சக்கர வாகனத்தின் விலை ரூபாய் 94 ஆயிரத்து 936 ஆகும். கருஞ்சிவப்பு, கருநீலம் மற்றும் சாம்பல் நிறங்களில் இந்த வாகனங்கள் கிடைக்கிறது.
இதில் 97.2 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சமே மைலேஜ் ஆகும். இந்த பைக் ஒரு லிட்டருக்கு 60 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 4 கியர்கள் இதில் உள்ளது. இந்த பைக்கின் 115 கிலோ ஆகும்.
மைலேஜ்:
இதன் பெட்ரோல் டேங்கர் 11 லிட்டர் பெட்ரோல் தாங்கும் திறன் கொண்டது. இதன் டேங்கரை நிரப்பினால், 660 கிலோமீட்டர் வரை செல்லாம். 7.91 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 8.05 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. ஒரு சிலிண்டர் ஏர் கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டது. யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளது. i3S வசதி உள்ளது.
சிறப்புகள்:
அதிகபட்சமாக 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது. ட்ரம் ப்ரேக் வசதி கொண்டது. 18 இன்ச் சக்கரங்கள் கொண்டது. டயூப்லெஸ் டயர்கள் கொண்டது. 5 வருடங்கள் வாரண்டி கொண்டது. 70 ஆயிரம் கிலோமீட்டர் வரை வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. ஜிபிஎஸ், நேவிகேஷன் வசதி கிடையாது.
மைலேஜ் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஓடோ மீட்டர், ஃப்யல் காஃஜ் டிஜிட்டல் வசதி கொண்டது. பெட்ரோல் குறைவை எச்சரிக்கும் வசதி, ஆயில் குறைவை எச்சரிக்கும் வசதி உள்ளது. இந்த பைக்கிற்கு பயனாளரகள் 5க்கு 4.6 ஸ்டார் வழங்கியுள்ளனர்.
ஸ்ப்ளெண்டர் ப்ளஸ், ஸ்ப்ளெண்டர், எச்எஃப் டிஃபெக்ஸ் ஆகிய இரு சக்கர வாகனங்களுக்கு போட்டியாக இந்த பைக் உள்ளது. நல்ல மைலேஜ், ஓட்டுவதற்கு இலகுவாக இருப்பது, கையாள்வதற்கும் மிகவும் எளிதாக இருப்பது, இளைஞர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் ஓட்டுவதற்கு இலகுவாக இருப்பதால் இந்த பைக்கை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.




















