(Source: ECI/ABP News/ABP Majha)
Harley Davidson X440: இந்தியாவில் வெளியானது ஹார்லி-டேவிட்சன் X440… விலை முதல் சிறப்பம்சங்கள் வரை இதோ!
ஹார்லி-டேவிட்சன் X440 மோட்டார் சைக்கிளின் விலைகள் ரூ. 2.29 லட்சத்தில் தொடங்கி, 'எஸ்' வகைக்கு ரூ. 2.69 லட்சம் வரை செல்கிறது. மேலும், இதில் நடுத்தர வகையான 'விவிட்' வகையின் விலை 2.49 லட்சம் ஆகும்.
அமெரிக்க இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹார்லி-டேவிட்சன் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட X440 மோட்டார் சைக்கிளை ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பலரும் எதிர்பார்த்து வந்த இந்த வண்டியின் முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளன.
வேரியன்ட்கள் & விலை
புதிய Harley-Davidson X440 மோட்டார்சைக்கிள் டெனிம், விவிட் மற்றும் S ஆகிய 3 வகை வேரியன்ட்களில் வெளிவருகிறது. இந்த வகைகளில், 'டெனிம்' பேசிக் மாடல் ஆகும். அதேசமயம் 'S' என்பது இருப்பதிலேயே உயர்ந்த ரகம் ஆகும். ஹார்லி-டேவிட்சன் X440 மோட்டார்சைக்கிளின் விலைகள் ரூ. 2.29 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கி, 'எஸ்' வகைக்கு ரூ. 2.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது. மேலும், இதில் நடுத்தர வகையான 'விவிட்' வகையின் விலை 2.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
டிசைன்
டிசைன் வாரியாக புதிய Harley-Davidson X440 பைக் அதன் பெட்ரோல் டாங்க் மற்றும் நேர்த்தியான பின் புறம் ஆகியவற்றால் ஈர்க்கிறது. கூடுதலாக, இந்த பைக்கில் நியோ-ரெட்ரோ தோற்றத்தை கொண்டு வருவதற்காக பெரும்பாலும் வட்ட வடிவமைப்பில் எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பைக் மொத்தம் 4 வண்ணங்களில் வருகிறது. மஸ்டார்ட் டெனிம் (பேசிக் மாடல் மட்டும்), மெட்டாலிக் டார்க் சில்வர், மெட்டாலிக் திக் சில்வர் மற்றும் மேட் பிளாக் (உயர் தர மாடல் மற்றும்) ஆகிய வண்ணங்களில் வருகின்றன.
பவர்
புதிய Harley-Davidson X440 பைக் சிங்கிள் சிலிண்டர், ஆயில்-கூல்டு இன்ஜின் மூலம் இயங்குகிறது. இந்த இன்ஜின் 6,000 ஆர்பிஎம்மில் 27 பிஎச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்மில் 38 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருவது ஹார்லி ஸ்பெஷல்.
பிற முக்கிய அம்சங்கள்
இந்த பைக்கின் முன்பக்கத்தில் 43mm USD ஃபோர்க்குகள், டூயல் கார்ட்ரிட்ஜ் டம்மிங் அமைப்பு மற்றும் பின்புறத்தில் டூயல் ஃப்யூவல் ஃபில்டு வைப்பிரேஷன் சக்கர் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், அதில் இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் நிறுவனம் வெளிப்படுத்தியது. முன்பக்கத்தில் உள்ள டிஸ்க் பிரேக் 320மிமீ அளவுள்ள நிலையில், பின்புறத்தில் உள்ள டிஸ்க் பிரேக்கின் விவரக்குறிப்பை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. கூடுதலாக, இதில் இரட்டை சேனல் ஏபிஎஸ் வசதியும் உள்ளது. இதில் எல்லா விளக்குகளும் எல்இடி விளக்குகளாக அமைக்கப்பட்டுள்ளன. ப்ளூடூத் இணைப்பு உட்பட பல அம்சங்கள் உள்ளன.