Tirumph Speed Twin | அடுத்த ப்ரீமியம் பைக்கை வெளியிட்ட டிரையம்ப் - மூன்று வண்ணங்கள் ஸ்பீட் ட்வின்
இந்த கொரோனா காலகட்டத்தில் இந்திய சந்தையில் பல புதிய மற்றும் அப்டேட் செய்யப்பட்ட பல பைக்குகளை விற்பனை செய்து வருகின்றது டிரையம்ப்.
பிரபல டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் தனது அடுத்த மாடல் பைக்கை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. டிரையம்ப் நிறுவனம் இந்த கொரோனா காலகட்டத்தில் இந்திய சந்தையில் பல புதிய மற்றும் அப்டேட் செய்யப்பட்ட பல பைக்குகளை விற்பனை செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த ஜூன் 1ம் தேதி இந்திய சந்தை உள்பட உலக சந்தையில் தனது டிரையம்ப் ஸ்பீட் ட்வின் என்ற புதிய மாடல் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. பல புதிய மற்றும் மெருகேற்றப்பட்ட அமைப்புகளுடன் இந்த பைக் வெளியாகி உள்ளது. இந்த பைக்கின் விலை இன்னும் வெளியிடப்படவில்லை என்றபோது சில கணிப்புகள் இணையத்தில் வலம்வருகின்றன.
Evolution in every dimension, the incredible 2021 Speed Twin sets a new benchmark.
— TriumphIndiaOfficial (@IndiaTriumph) June 1, 2021
Watch the global reveal: https://t.co/5YZJoCLrK4#ForTheRide #OfficialTriumph #Bonneville2021 #SpeedTwin pic.twitter.com/qK7sJattnq
1200cc திறன் கொண்ட இந்த வாகனம் ஒரே ஒரு வேரியண்ட்டில் தான் வெளியாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெட் பிளாக், மேட் ஸ்ட்ராம் க்ரே, மற்றும் ரெட் ஹைப்பர் ஆகிய மூன்று வண்ணங்களில் 10 லட்சம் என்ற விலையில் இந்திய சந்தையில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கடந்த சில மாதங்களில் வெளியான பைக்களில் மிகவும் விலை குறைந்த பைக் என்பது குறிப்பிடத்தக்கது.
’’இப்போது நிலைமை சரியில்லை’’ - Mi 11 Ultra மாடல் விற்பனையை தள்ளிப்போட்ட சியோமி!
லண்டன் நகரை தலைமையாக கொண்டு செயல்படும் நிறுவனம் தான் டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம். 1900களின் தொடக்கத்தில் உருவான இந்த நிறுவனம் ஜான் என்பவரால் 1983ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிறுவனம் பல மாடல் பைக்குகளை இதுவரை வெளியிட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் இந்த நிறுவனத்தின் வாகனம் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்திய சந்தையிலும் கடந்த 2013ம் ஆண்டு முதல் தனது சேவையை அளித்து வருகின்றது. கடந்த 2018ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சுமார் 5000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது இந்த நிறுவனம்.
The Performance Icon. Evolution in every dimension.
— TriumphIndiaOfficial (@IndiaTriumph) May 31, 2021
Subscribe to our official YouTube channel to watch the live reveal of the latest generation of Triumph’s renowned #SpeedTwin at 5:30 pm (IST) on 1st June: https://t.co/iv437on895#ForTheRide #OfficialTriumph #Bonneville2021 pic.twitter.com/xRP7eXQg0d
கடந்த ஓர் ஆண்டாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இந்திய சந்தையில் சில தினங்களுக்கு முன்பு ஸ்க்ராம்ப்ளர் 1200 ஸ்டீவ் மெக்-குயின் எடிஷன் பைக்கை மீண்டும் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. பல சிறப்பம்சங்களுடன் களமிறங்கியுள்ள இந்த ஆடம்பர பைக்கின் ஆரம்ப மாடலின் விலை சுமார் 13 லட்சத்து 75 ஆயிரம் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 100 கிலோமீட்டர் செல்ல இந்த வாகனத்திற்கு சுமார் 4.6 லிட்டர் பெட்ரோல் தேவைப்படும் என்றும் அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது.