மேலும் அறிய

BMW ELECTRIC SCOOTER: புதிய பைக் அறிமுகம்.. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்சிப்படுத்திய பிஎம்டபிள்யூ

S 1000 RR பைக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்திய பிஎம்டபிள்யூ நிறுவனம், அதோடு CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் காட்சிப்படுத்தியது.

சொகுசு வாகனங்களுக்கு பெயர் போன பிஎம்டபிள்யூ நிறுவனம், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக தனது வாகனங்களை தொடர்ந்து மேம்படுத்தி புதிய மாடலாக சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் பைக்குகளின் விலை கூடுதலாக இருந்தாலும், அதில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பிஎம்டபிள்யூ S 1000 RR பைக் மாடல் அறிமுகம்:

இந்நிலையில், உலக சந்தையில் நடப்பாண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு வந்த S 1000 RR மாடலை, பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அண்மையில் கோவாவில் நடைபெற்ற  India Bike Week in 2022 நிகழ்ச்சியில் ஏராளமான நிறுவனங்கள் தங்களது புதிய வாகனங்களை காட்சிப்படுத்தின. அந்த வகையில் தங்களது பல்வேறு மாடல் பைக்குகளை காட்சிப்படுத்திய பிஎம்டபிஎள்யூ நிறுவனம் யாரும் எதிர்பாராத விதமாக, அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாகவே 2023 S 1000 RR மாடல் பைக்கையும் காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இன்ஜின் திறன் விவரங்கள்:

இந்த மாடலில் 999சிசி, இன்-லைன் 4 சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 206.5 குதிரைகளில் திறன், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் பிஎம்டபிள்யூ ஷிஃப்ட்கேமும், ஸ்லிப்பர் கிளட்ச் கொண்ட 6-ஸ்பீடு கியர்பாக்ஸும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 10ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட S 1000 RR பைக் மாடலின், ஆரம்ப விலை ரூ.20.25 லட்சத்திலிருந்து அதிகபட்சமாக ரூ.24.45 லட்சமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்:

S 1000 RR பைக் அறிமுகத்தின் போது யாரும் எதிர்பாராத விதமாக புதிய, CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் காட்சிப்படுத்தியது. புதிய CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் லாங் சைடு பேனல்கள், எல்.ஈ.டி முகப்பு விளக்குகள் மற்றும்  டிசைன் பிட்கள் கொண்டுள்ளன. நீளமான ஒற்றை இருக்கை, மஸ்குலர் உடலமைப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 31 கிலோவாட் பீக் பவர் கொண்ட மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.  8.9kWh திறன் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரியும் இடம்பெற்றுள்ளது.

130 கி.மீ. ரேன்ஜ்:

வழக்கமான சார்ஜரைப் பயன்படுத்தி, பேட்டரியை 4 மணி 20 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். அதேநேரம், ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி 1 மணிநேரம் 40 நிமிடங்களுக்குள்ளும் இந்த வாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். இந்த ஸ்கூட்டரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 130 கிமீ தூரம் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 0 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தை 2.6 நொடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக 120 கிலோமீட்ர் வேகத்தில் வாகனத்தை செலுத்த முடியும். 

சிறப்பம்சங்கள்:

பிரேக்கிங்கிற்கு 265mm முன்புற சிஸ்ர், பின்புற டிஸ்க் 15 இன்ச் வீல்களில் மவுண்ட் செய்யப்பட்டு உள்ளது.  பிஎம்டபிள்யூ நிறுவனம் CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில்  Eco, Road மற்றும் Rain என மூன்று ரைடிங் மோட்கள் உள்ளன.  டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ், டிஎஃப்டி டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி மூலம் நேவிகேஷன் மற்றும் ஏராளமான அம்சங்களை கொண்டுள்ளது. முழு ஸ்மார்ட்போன் இணைப்பையும் கொண்டுள்ளது.

விலை விவரம்:

light white மற்றும் matt black ஆகிய இரண்டு நிறங்களில் இந்த வாகனம் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என கூறப்படுகிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகாத நிலையில்,  C 400 GT  ஸ்கூட்டார் மாடலுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக, CE 04 ஸ்கூட்டரும் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் இதன் விலை, சுமார் ரூ.21.30 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலம் என கூறப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Himalayan 750: வெயிட்டா, பெருசா..! ஹிமாலயன் 750 ஆன் தி வே - ராயல் என்ஃபீல்டின் ரக்கட் பாய் - டாப் 5 அப்டேட்ஸ்
வெயிட்டா, பெருசா..! ஹிமாலயன் 750 ஆன் தி வே - ராயல் என்ஃபீல்டின் ரக்கட் பாய் - டாப் 5 அப்டேட்ஸ்
இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த Hyundai Bayon கார்! என்னென்ன வேரியண்ட் என்ன விலை? என்ன ஸ்பெஷல்?
இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த Hyundai Bayon கார்! என்னென்ன வேரியண்ட் என்ன விலை? என்ன ஸ்பெஷல்?
Defender 110 : அடேங்கப்பா..! ரூ.34 லட்சம் விலை குறைப்பு - டிஃபெண்டர் 110 சர்ப்ரைஸ் - உள்ளூர் அசெம்ப்ளி சம்பவம்
அடேங்கப்பா..! ரூ.34 லட்சம் விலை குறைப்பு - டிஃபெண்டர் 110 சர்ப்ரைஸ் - உள்ளூர் அசெம்ப்ளி சம்பவம்
Hyundai Bayon: ஹுண்டாய் பேயோனிற்கான டாப் 5 கேள்விகள் - விலை, வேரியண்ட், டெலிவெரி, CNG வசதி?
ஹுண்டாய் பேயோனிற்கான டாப் 5 கேள்விகள் - விலை, வேரியண்ட், டெலிவெரி, CNG வசதி?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
Jio IPO: அடித்து தூக்கிய ஜியோ..! நாட்டின் மதிப்புமிக்க இரண்டாவது நிறுவனமாகி அதிரடி - ரூ.12.5 லட்சம் கோடி
அடித்து தூக்கிய ஜியோ..! நாட்டின் மதிப்புமிக்க இரண்டாவது நிறுவனமாகி அதிரடி - ரூ.12.5 லட்சம் கோடி
Chennai Power Cut: சென்னையில் நாளை (29-10-2026) எந்தெந்த பகுதிகளில் பவர் கட்? எத்தனை மணிநேரம்?
Chennai Power Cut: சென்னையில் நாளை (29-10-2026) எந்தெந்த பகுதிகளில் பவர் கட்? எத்தனை மணிநேரம்?
DMK: கரூரிலேயே விஜய்யை முடித்திருந்தால்.. வாயை விட்ட டீட்டா சரவணன்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
DMK: கரூரிலேயே விஜய்யை முடித்திருந்தால்.. வாயை விட்ட டீட்டா சரவணன்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
Auto Fare Hike: ஆட்டோ பிரியர்களுக்கு ஷாக்.. 1.8 கி.மீ-க்கு ரூ.50.. வெயிட்டிங் சார்ஜ்.. இரவு கட்டணம் எவ்வளவு?
Auto Fare Hike: ஆட்டோ பிரியர்களுக்கு ஷாக்.. 1.8 கி.மீ-க்கு ரூ.50.. வெயிட்டிங் சார்ஜ்.. இரவு கட்டணம் எவ்வளவு?
அதிர வைக்கும் க்ரைம் ரேட்.. யார் இந்த சி.டி.மணி? இவருக்கு 200 கோடி சொத்தா?
அதிர வைக்கும் க்ரைம் ரேட்.. யார் இந்த சி.டி.மணி? இவருக்கு 200 கோடி சொத்தா?
Himalayan 750: வெயிட்டா, பெருசா..! ஹிமாலயன் 750 ஆன் தி வே - ராயல் என்ஃபீல்டின் ரக்கட் பாய் - டாப் 5 அப்டேட்ஸ்
வெயிட்டா, பெருசா..! ஹிமாலயன் 750 ஆன் தி வே - ராயல் என்ஃபீல்டின் ரக்கட் பாய் - டாப் 5 அப்டேட்ஸ்
Gem Veeramani: வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
Embed widget