Mahindra XUV700: மொத்த வித்தையையும் கொட்டும் மஹிந்த்ரா.. 3 ஸ்க்ரீன்கள், பெரிய இன்டீரியர் அப்க்ரேட்ஸ்- 7 சீட்டர்
Mahindra XUV700 Facelift: மஹிந்த்ரா நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள XUV 700 காரின் மேம்படுத்தப்பட்ட எடிஷனில், பல பெரிய அப்க்ரேட்கள் வழங்கப்பட்டுள்ளன.

Mahindra XUV700 Facelift: மஹிந்த்ராவின் 7 சீட்டரான XUV 700 காரின் மேம்படுத்தப்பட்ட எடிஷனில், வழங்கப்படும் அம்சங்கள் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
மஹிந்த்ராவின் XUV 700 ஃபேஸ்லிஃப்ட் எடிஷன்:
மஹிந்த்ரா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்தடுத்து இரண்டு முக்கிய கார் மாடல்களை அறிமுகப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. அந்த பட்டியலில் மின்சார எடிஷனான XEV 9S மற்றும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட XUV700 ஆகிய கார் மாடல்கள் இடம்பெற்றுள்ளன. XEV 9S மாடலானது XUV700 காரிலிருந்து ஈர்க்கப்பட்டு உருவான மின்சார காராகும். இது வரும் நவம்பர் 27ம் தேதி சந்தைப்படுத்தப்பட உள்ளது. மறுமுனையில் அப்க்ரேட் செய்யப்பட்ட XUV700 காரானது, 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. அதற்கு முன்னதாகவே தீவிர சாலை பரிசோதனையில் ஈடுபட்டுள்ள, இந்த காரின் பல புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
XUV 700 ஃபேஸ்லிஃப்ட் - XEV 9e தாக்கத்தில் டிசைன்
சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின்படி, XUV700 காரின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனானது புதியதாக வடிவமைக்கப்பட்ட பெரிய ஏர்-இன்லெட்களுடன் கூடிய க்ரில், இரட்டை பாட் மாதிரியான டிசைனை கொண்ட மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முகப்பு விளக்கு க்ளஸ்டர் மற்றும் புதிய லைட்டிங் சிக்னேட்சரை பெற்றுள்ளது. இதில் சில அம்சங்கள் XEV 9e காரில் இருப்பதை போன்றே உள்ளது. முன் மற்றும் பின்புற பம்பர்களும் மாற்றப்பட்டு இருக்கலாம். கூடுதலாக இந்த எஸ்யுவியில் புதியதாக வடிவமைக்கப்பட்ட ஏரோ-ஆப்டிமைஸ்ட் அலாய் வீல்கள் இடம்பெறலாம்.
XUV 700 ஃபேஸ்லிஃப்ட் - 3 ஸ்க்ரீன்கள்
XUV700 காரின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனானது உட்புறத்தில் மிகப்பெரிய மாற்றங்களை பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதேம் வெளியாகாவிட்டாலும், மேம்படுத்தப்பட்ட இந்த காரில் XEV 9e மாடலில் இருந்ததைபோன்றே 3 ஸ்க்ரீன்கள் இருக்கும் என கூறப்படுகிறது. மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டேஷ்போர்டானது ஹர்மன்/கார்டோன் ஆடியோ சிஸ்டம் மற்றும் மேலும் சில கூடுதல் அம்சங்களையும் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
XUV 700 ஃபேஸ்லிஃப்ட் - பெட்ரோல், டீசல் இன்ஜின்கள்
இன்ஜின் அடிப்படையில், புதிய 2026 மஹிந்த்ரா XUV700 ஃபேஸ்லிஃப்ட் எடிஷனில் மாற்றங்கள் மேற்கொள்ள வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. அதன்படி, இந்த எஸ்யுவி-யில் 2.0L டர்போ பெட்ரோல் மற்றும் 2.2L டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் அப்படியே தொடர உள்ளது. பெட்ரோல் யூனிட் அதிகபட்சமாக 200bhp பவரையும் 380Nm டார்க்கையும் வழங்கும் அதே வேளையில், டீசல் எடிஷன் 155bhp/185bhp மற்றும் 360Nm/450Nm ஐ உற்பத்தி செய்கிறது. டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் அதே 6-ஸ்பீட் மேனுவல் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் யூனிட் இருக்கும். டீசல்-ஆட்டோமேடிக் காம்போவுடன் AWD (ஆல்-வீல் டிரைவ்) சிஸ்டம் ஆப்ஷனும் அப்படியே வழங்கப்படும்.
XUV 700 ஃபேஸ்லிஃப்ட் - எதிர்பார்க்கப்படும் விலை
கூடுதல் அம்சங்கள் அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட XUV700 க்கு குறைந்தபட்ச விலை உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய எடிஷனின் விலையானது ரூ.13.66 லட்சத்தில் தொடங்கி ரூ.23.71 லட்சம் வரையிலும் நீடிக்கிறது. குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் ஆகும்.





















