Honda CD 110: 10 வருட வாரண்டியுடன் ஹோண்டா சிடி 110 மோட்டார் சைக்கிள்.. குறைந்த விலை, கூடுதல் அம்சங்கள்
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், புதிய CD110 டிரீம் டீலக்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் புதிய CD110 டிரீம் டீலக்ஸ் மாடலின் விலை 73 ஆயிரத்து 400 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா நிறுவனம்:
பல்வேறு சொகுசு வசதிகளுடன் ஏராளமான இருசக்கர வாகனங்கள் இந்திய ஆட்டோமொபைல் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், நடுத்தர வர்கத்தினருக்கான மோட்டார் சைக்கிளை வழங்குவதில் ஹோண்டா நிறுவனம் தடையின்றி இயக்கி வருகிறது. இதன் காரணமாகவே எண்ட்ரி லெவல் மோட்டார் சைக்கிளில் இன்றளவும் அந்த நிறுவனம் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. அந்த வகையில் தான், புதியதாக தற்போது CD110 டிரீம் டீலக்ஸ் மாடலை ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தயில் அறிமுகப்படுத்தியுள்ளது.
10 ஆண்டுகள் வாரண்டி:
புதிய மாடலில் OBD-2 விதிகளுக்கு பொருந்தும் இன்ஜின் மற்றும் ஹோண்டா என்ஹான்ஸ்டு ஸ்மார்ட் பவர் சிஸ்டம் (eSP) வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 73 ஆயிரத்து 400, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஹோண்டா CD110 மாடல் பத்து ஆண்டுகள் வாரண்டியுடன் வழங்கப்படுகிறது. இதில் மூன்று ஆண்டுகள் ஸ்டான்டர்டு வாரண்டி, ஏழு ஆண்டுகளுக்கு ஆப்ஷனலாக நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது.
இன்ஜின் விவரங்கள்:
ஹோன்டா CD110 டிரீம் டீலக்ஸ் மாடலில் 109.51சிசி, ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது ஒரு 4 ஸ்ட்ரோக் ஒற்றை சிலிண்டர் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் 8.67 ஹெச்.பி. பவர், 9.30 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது BS6 ஸ்டேஜ் இரண்டாம் நிலைகளுக்கு பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
ஹோண்டா CD110 டிரீம் டீலக்ஸ் மாடலில் ACG ஸ்டார்டர் மோட்டார் வழங்கப்படுகிறது. சஸ்பென்ஷனுக்கு முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், டுவின் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படுகின்றன. இதன் இருபுறங்களிலும் டிரம் பிரேக்குகள் மற்றும் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் சைலன்ட் ஸ்டார்ட் மெக்கானிசம், ப்ரோகிராம் செய்யப்பட்ட ஃபியூவல் இன்ஜெக்ஷன், டியூப்லெஸ் டயர்கள், இன்-பில்ட் சைடு-ஸ்டான்டு இன்ஜின் கட்-ஆஃப் வசதி வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு வேளை சைட் ஸ்டேண்ட் போடப்பட்டு இருந்தால் வாகனத்த ஸ்டார்ட் செய்வது தடுக்கப்படுகிறது.
CD110 ட்ரீம் டீலக்ஸ் டேங்க் மற்றும் பக்க அட்டையில் ஸ்டைலான கிராபிக்ஸ் கொண்ட கவர்ச்சிகரமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஒரு கவர்ச்சியான வைசர் மற்றும் முன் ஃபெண்டரைச் சேர்ப்பது பைக்கின் அழகியலை மேம்படுத்துகிறது. பிரேக்கிங் செயல்திறனைப் பொறுத்தவரை, சமப்படுத்தலுடன் கூடிய காம்பி-பிரேக் சிஸ்டம் (CBS) முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையில் பிரேக்கிங் விசையை மறுபகிர்வு செய்கிறது. இது பிரேக்கிங் செயல்திறனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கும் பங்களிக்கிறது