2021 Tata Tiago NRG First Review: எப்படி இருக்கு புதிய டாடா டியாகோ என்ஆர்ஜி: ‛எஸ்யுவி சொகுசு... ஹேட்ச்பேக் பவுசு!’
ஒரு கார் வாங்கணும் சார். பட்ஜெட் 6 லட்சத்திலிருந்து 7 லட்சம் தான் எனச் சொல்பவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது டாடா டியாகோ என்ஆர்ஜி கார்.
ஒரு கார் வாங்கணும் சார். பட்ஜெட் 6 லட்சத்திலிருந்து 7 லட்சம் தான் எனச் சொல்பவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது டாடா டியாகோ என்ஆர்ஜி கார்.
இது பேஸ் வேரியன்ட் தான், ஆனால், எஸ்யுவியின் சொகுசை ஓரளவுக்குப் பெறலாம். அதேபோல் ஹேட்ச்பாக் ரகத்தின் வசதியையும் உணரலாம். Tiago NRG புதிய மாடல் இல்லை ஆனால், புதிய அவதாரம் பெற்றுள்ளது. அதன் உட்புறத்தில் மேம்படுத்தப்பட்டுள்ள தோற்றம் நிச்சயம் கார் பிரியர்களைக் கவரும். வாகன பாதுகாப்புக்கு இதற்கு 4 நட்சத்திர குறியீடு அளிக்கப்பட்டுள்ளது. இதுவே இதன் ஸ்திரத் தன்மைக்கு சான்றாகும்.
டியாகோ முதல் பார்வை:
முதலில் காரின் புறத்தோற்றத்தைப் பார்ப்போம். முகப்பில் உள்ள புதிய கிரிலும் அதில் பொருத்தப்பட்டுள்ள ஹெட்லேம்ப்பும் தான் முதல் கவர்ச்சி. அதையடுத்து ஒரு ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் உள்ளது. இதுதான் காருக்கு எஸ்யுவி தோற்றப் பொலிவைத் தருகிறது. அதுமட்டுமல்ல அழகுக்கு அழகு சேர்க்க ரூஃப் ரெயில் உள்ளது. அதேபோல் கருப்புக் கண்ணாடிகள் கூடுதல் ஈர்ப்பைத் தருகிறது. காரின் நிறம் என்னவாக இருந்தாலும் கருப்புக் கண்ணாடியின் கான்ட்ராஸ்ட் லுக் அட்டகாசம். அதேபோல், சர்க்கரங்களும் கருப்பு நிறத்திலேயே உள்ளன. 181 மி.மீ. கிரவுண்ட் கிளி யரன்ஸ், 15 அங்குல ஹைப்பர் ஸ்டைல் சக்கரம், ரிவெட் ரான் பெட்ரோல் என்ஜின், கியர் மாற்றும் வசதி மற்றும் ஆட்டோமேடிக் கியர் வசதி மாடலில் கிடைக்கிறது.
உட்புறத் தோற்றத்தில் பெரும்பாலும் புதிதாக பெரிய மாற்றமில்லை. டிஜிட்டல், 7 இன்ச் தொடு திரை உள்ளது. ஸ்மார்ட் ஃபோன் கனெக்டிவிட்டி இருக்கிறது. ஹார்மன் சவுண்ட் சிஸ்டம் உள்ளது. சீட் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். ரியர் வியூவ் கேமரா புதிய அம்சம். ஆரஞ்ச் நிற தொடுதல்கள் ஏசி துளைகள் மற்றும் கியர் லிவர் என கேபினை சுற்றிலும் வழங்கப்பட்டுள்ளது. ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல் ஃபீச்சர் உள்ளது. யணிகளின் பாதுகாப்பிற்கு இரட்டை காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ் மற்றும் கேமிரா உடன் பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது. பேசிக் வேரியன்ட் டியாகோவைப் போலத் தான் இதிலும் இடவசதி உள்ளது.
டியாகோ என்ஆர்ஜி ஃபேஸ்லிஃப்ட் காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட உள்ளது. அதிகப்பட்சமாக 86 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
மேனுவல் வெர்சன் டியாகோ என்ஆர்ஜி ரூ.6.6 லட்சம் என்றும், ஆட்டோமேடிக் வேரியன்ட் ரூ.7.09 லட்சம் என்றும் உள்ளது.