மேலும் அறிய

Rasipalan December 03: மிதுனத்துக்கு சாந்தம்... மீனத்துக்கு ஊக்கம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவை தான்!

RasiPalan Today December 03: இந்த நாள் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள்: 03.12.2022

நல்ல நேரம்:

காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

காலை 10.45 மணி முதல் மதியம் 11.45 மணி வரை
 
மாலை 9.30 மணி முதல் மாலை 10.30 மணி வரை

இராகு:

காலை 9.00 மணி முதல் மதியம் 10.30 மணி வரை

குளிகை:

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

எமகண்டம்:

மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். மனதிற்கு நெருக்கமானவர்களுடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். மனை மற்றும் வீடு தொடர்பான கடன் சார்ந்த உதவி கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் குறைந்து மேன்மை ஏற்படும். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் சோர்வு உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வரவு மேம்படும் நாள்.

ரிஷபம்

இஷ்ட தெய்வ வழிபாடு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் உள்ள சில நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். புதுமையான சிந்தனைகளின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பும், அறிமுகமும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். நன்மை நிறைந்த நாள்.

மிதுனம்

சிறு தொழில் புரிபவர்களுக்கு முன்னேற்றமும், புதிய வாய்ப்பும் சாதகமாக அமையும். வியாபார பணிகளில் ஏற்பட்ட சிறு சிறு மாற்றங்களின் மூலம் லாபம் அடைவீர்கள். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் புதுவிதமான ஆசைகள் மேம்படும். சாந்தம் நிறைந்த நாள்.

கடகம்

கடன் தொடர்பான முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். செய்யும் செயல்பாடுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவது நல்லது. முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். இழுபறியாக இருந்துவந்த வியாபாரம் நிமிர்த்தமான பணிகளை செய்து முடிப்பீர்கள். தூரத்து உறவினர்களின் எதிர்பாராத சந்திப்பு உண்டாகும். குழப்பம் விலகும் நாள்.

சிம்மம்

தந்தைவழி உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். மனதில் ஏற்பட்ட எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

கன்னி

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். மனை தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவதால் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்களின் மத்தியில் நற்பெயர் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.

துலாம்

கடன் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். எதிர்பாலின மக்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.

விருச்சிகம்

நீண்ட நாட்களாக இருந்துவந்த கவலைகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். பணப்புழக்கம் உண்டாகும். புராணங்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புதிய கலை சார்ந்த முயற்சிகள் மேம்படும். விவாதங்களில் சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். மறைவாக இருந்துவந்த சில பொருட்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். அறம் சார்ந்த காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.

தனுசு

உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களை பற்றிய பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகளின் மூலம் தெளிவு ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

மகரம்

பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் தைரியமாக முடிவு எடுப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். அனுபவமிக்க வேலையாட்களின் ஒத்துழைப்பு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த உபாதைகள் குறையும். பொறுமை வேண்டிய நாள்.

கும்பம்

குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழல் அமையும். இழுபறியான தனவரவு கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் எண்ணிய முடிவு கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத தனவரவின் மூலம் சேமிப்பு மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் குறையும். தேர்ச்சி நிறைந்த நாள்.

மீனம்

விவசாயம் சார்ந்த பணிகளில் அலைச்சல்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். பெருந்தன்மையாக செயல்பட்டு பலரின் ஆதரவை பெறுவீர்கள். குடும்ப நபர்களை பற்றிய புரிதல் ஏற்படும். வாகனம் தொடர்பான பயணங்களில் நிதானம் வேண்டும். நண்பர்களின் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Vijay: குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
Embed widget