புதூர் சுற்று வட்டார பகுதிகளில் வேப்பமுத்து சேகரித்து வருவாய் ஈட்டும் பெண்கள்
வேப்பங் கொழுந்தை அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சர்க்கரை வியாதியின் கடுமை குறைந்து அதை கட்டுப்படுத்தலாம்.
தூத்துக்குடி மாவட்டம் புதூர் சுற்றுவட்டார பகுதியில் பெண் தொழிலாளர்கள் வேப்பமுத்துக்களை சேகரித்து வருவாய் ஈட்டி வருகின்றனர். அனைத்து பகுதிகளிலும் வேப்ப மரங்கள் பிரதானமாக வளர்க்கப்படுகின்றன. வேப்பமரம் அதிக எதிர்ப்பு சக்தியை கொண்டது. பயிர்களை ஏற்படும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த ரசாயன மருந்துகளை தெளிக்க வேண்டி உள்ளது,இதனால் விளைவிக்கப்படும் தானியங்கள் நச்சுத்தன்மை கொண்டதாக மாறுகிறது. சர்வதேச அளவில் விஞ்ஞானியின் வேப்பம் முத்துக்களை அரைத்து அதில் இருந்து வேப்ப எண்ணெய், வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை தயாரித்து பூச்சிகளை ஒழிக்க பயன்படுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
வேப்பமுத்து
ஆண்டுதோறும் மே மாதம் வேப்பமரத்தில் பூக்கள் அரும்பெடுக்கும் தொடர்ந்து காய் காய்க்கும் .தற்போது பழுத்துள்ள வேப்பம்பழங்கள் உதிரத் தொடங்கியுள்ளன புதூர் பகுதியில் பெண் தொழிலாளர்கள் வேப்பமுத்துக்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு வேப்பம்பத்தில் கிலோ ஒன்றுக்கு ரூ.130 வரை விலை போனது. தற்போது வேப்பமுத்து சீசன் தொடங்கியுள்ளதால் கிலோ 85 வரை வியாபாரிகள் விலைக்கு வாங்கி இருக்கின்றனர். அடுத்த வரும் நாட்களின் விலை மேலும் அதிகரிக்கும் என தொழிலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பூச்சி கொல்லி மருந்து
இது ஒரு கரிசல் பூமி விவசாயி சங்கத் தலைவர் வரதராஜனின் கூறும் போது, வேப்பமுத்து தேவை சர்வதேச அளவில் அதிகரித்து வருகிறது. இன்னும் இரண்டு மாத காலத்திற்கு வேப்பமுத்து சீசன் தொடர்ச்சியாக இருக்கும். வேப்பம் முத்துக்களை சேகரித்து அதிலிருந்து வேப்பம் புண்ணாக்கு, வேப்ப எண்ணெய், பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கின்றனர்.இது நச்சுத்தன்மை அற்றதாகவும் 100 மடங்கு நன்மை தரக்கூடியதாகவும் உள்ளது. வேப்பமரக்கன்று நடவு செய்தால் அது மூன்று ஆண்டுகளில் பலனுக்கு வந்து விடும். வேப்பமரத்தின் பயன்கள் குறித்து அரசு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்கிறார்.
வேம்பின் பயன்கள்
மனித உடலில் உண்டாகும் சகல வியாதிகளையும் குணமாக்கிடும் மருத்துவ குணத்தைக் கொண்ட மரமாக வேம்பு திகழ்கின்றது. வேப்ப இலை புழு, பூச்சிகளால் நேரிடும் துன்பங்களை ஒழிக்கும்.இம்மரத்தில் வேர், பட்டை, மரப்பட்டை, வேப்பங் கொட்டையின் மேல் ஓடு, உள்ளிருக்கும் பருப்பு, வேப்பமரத்து பால், வேப்பம் பிசின், வேப்பங்காய், வேப்பம் பழம், பூ, இலை, ஈர்க்கு, வேப்பங் கொழுந்து போன்றவை மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளபடியால் அவை அனைத்துமே மருந்துப் பொருளாகச் சேர்க்கப்பட்டு வருகிறது.வேப்பங் கொழுந்தை அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சர்க்கரை வியாதியின் கடுமை குறைந்து அதை கட்டுபடுத்தலாம்.வேப்பம்பூ நிம்பஸ்டி ரோல் என்ற பொருளை கொண்டுள்ளது. இது பசியை தூண்டவும், பித்தம், வாந்தி, வாதம் சமந்தப்பட்ட நோய்களை குணபடுத்துகிறது.