மேலும் அறிய
தருமபுரி : பட்டாசாக பலாப்பழம் விளைச்சல்.. கொத்துக் கொத்தாய் மகசூல்.. விவசாயிகள் மகிழ்ச்சி
மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி பகுதிகளில் பலாப்பழம் விளைச்சல் அதிகரிப்பு : கொத்துக்கொத்தாய் மகசூல் விவசாயிகள் மகிழ்ச்சி..

பலாப்பழம்
தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் சின்னாறு அணையின் தண்ணீரை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். இதனால், இப்பகுதியில் தென்னை, பாக்கு, வாழை போன்ற பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்கின்றனர்.
அதே போல் சுற்றிலும் மலைக்கள் சூழ்ந்து இருப்பதால், இப்பகுதி எப்போதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை இருக்கும். குளிர்ந்த மலைப் பகுதிகளில் விளையும் பலா சாகுபடியும் இந்த பகுதியில் வரப்பு வயல்வெளிகளில் அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். தற்போது மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் நடவு செய்துள்ள பலா மரங்களில் பலா பழங்கள் கொத்து கொத்தாக காய்த்து தொங்குகிறது.
கடந்தாண்டை விட இந்தாண்டு நல்ல மழை பெய்துள்ளதால், பலாப்பழம் நல்ல விளைச்சல் அடைந்து, மரத்தின் வேர் முதல் நுனி கிளைகள் வரை கொத்து கொத்தாய் மகசூல் பிடித்துள்ளது. இதனால் பலா நடவு செய்துள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இங்கு அறுவடை செய்யும் பலாப்பழம் தருமபுரி, மாரண்டஹள்ளி, பாலக்கோடு, ஒசூர், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். இதில் சிறிய ரக பழங்கள் ரூ.50 முதலும், பெரிய ரகங்கள் ரூ.300 வரை விற்பனையாகிறது. கடந்த ஆண்டை விட, விளைச்சல் அதிகரித்துள்ளதால், இந்த அதிக வருவாய் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai to Theni : 12 மணிநேர காத்திருப்பு.. மதுரை டூ தேனி ரயில்சேவை மீண்டும் தொடங்கியது..
மேலும் படிக்கவும்





















