Madurai to Theni : 12 மணிநேர காத்திருப்பு.. மதுரை டூ தேனி ரயில்சேவை மீண்டும் தொடங்கியது..
மதுரை - தேனி சிறப்பு ரயிலை பாரத பிரதமரோடு இணைந்து கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
கடந்த 1928-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் கேரளாவில் விளைந்த ஏலக்காய் போன்ற நறுமண பொருட்களை வியாபார தேவைக்காக தமிழகம் கொண்டுவர போடி - மதுரை இடையிலான ரயில் போக்குவரத்தை மீட்டர் கேஜ் பாதையில் தொடங்கியது. அதன்பிறகு தொடர்ந்து இயங்கி வந்த சேவை கடந்த 2010 ம் ஆண்டு வரை இயங்கி வந்தது. போடி, தேனி, ஆண்டிபட்டி, மதுரை, உசிலம்பட்டி, கருமாத்தூர், செக்கானூரணி வழியாக இயங்கி வந்ததால் பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைக்காக பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில், இந்தியா முழுவதும் அனைத்து மீட்டர் கேஜ் பாதைகளும், அகல ரயில் பாதையாக மாற்றிய நிலையில் இறுதியாக 2010 டிசம்பரில் மதுரை - போடி இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, மத்திய அரசு இந்த அகலப்படுத்தும் பணிக்காக ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்ததை தொடர்ந்து பணிகள் விரைவு படுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரையும், 2 ம் கட்டமாக உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி வரையும் பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ரயில் ஓட்டம் நடத்தப்பட்டது. அதன்பின் ஆண்டிபட்டியில் இருந்து தேனி வரை 17 கிலோ மீட்டர் தூரப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டது. இந்நிலையில் மதுரை மற்றும் தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே புதிதாக அமைக்கப்பட்ட அகல ரயில் பாதையை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். விழா சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக இந்த திட்டங்களை துவக்கி வைத்தார்.
All set for madurai -Teni Train service.
— Thangadurai (@thangadurai887) May 26, 2022
12 yr of waiting over in an hour.
From Tomorrow, Theni people will have separate train service between MDU-Teni
Morning Dept 8:30 from mdu reach teni at 9:35
Evening dept from teni @ 18:15 will reach mdu @ 19:35 #Maduraitrain pic.twitter.com/Fcgwkde0vF
மதுரை - தேனி புதிய அகல ரயில் பாதை மற்றும் புதிய ரயில் துவக்க விழாவும், மதுரை ரயில் நிலைய மறு சீரமைப்புக்கான அடிக்கல் நாட்டு விழாவும் சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக இந்த திட்டங்களை துவக்கி வைத்தார். @drmmadurai @abpnadu pic.twitter.com/UEuH4pu9TO
— Arunchinna (@iamarunchinna) May 26, 2022