Mugundhan PMK Profile: அக்கா மகனுக்கு பொறுப்பு! எதிர்க்கும் அன்புமணி.. யார் இந்த முகுந்தன்?
விழுப்புரத்தில் இன்று பாமக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசும் அக்கட்சியின் தலைவர் அன்புமணியும் கலந்து கொண்டனர். அப்போது ராமதாஸ் பாமக இளைஞரணித் தலைவர் பொறுப்பு முகுந்தன் என்பவருக்கு வழங்குவதாக அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் முகுந்தனுக்கு பொறுப்பு வழங்க கூடாது என அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். கட்சியில் சேர்ந்த 4 மாதங்களில் எப்படி பொறுப்பு வழங்க முடியும்.. குடும்பத்தில் இருந்து இன்னொரு நபரா என்று கேள்வி எழுப்பினார். இதனால் கட்சிக்கும் கடும் மோதல் போக்கு உருவாகியுள்ளது. இந்த மோதலுக்கு காரணமான முகுந்தன் யார்? அவருக்கு ஏன் இவ்வளவு அவசரமாக பொறுப்பு வழங்கப்பட்டது ?
பாமக நிறுவனர் ராமதாசின் மூத்த மகள் காந்திமதி. இவருடைய கணவர் பரசுராமன். இந்த தம்பதியின் மகன் தான் முகுந்தன். பொறியியல் பட்டதாரியான இவர் தகவல் தொழில் நுட்ப துறையில் மிக்கிய நபராக விளங்கியவர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாமகவில் தன்னை இணைத்துக்கொண்டார். தகவல் தொழில் நுட்பத்துறையில் முக்கியமான நபர் என்பதால் இவர் மீது உள்ள நம்பிக்கையில் இவருக்கு சமூக ஊடக பேரவையின் மாநில செயலாளர் பொறுப்பை வழங்கினார் ராமதஸ்.
இதன் மூலம் தனக்கு கொடுத்த பொறுப்பில் சிறப்பாக செயல்பட்ட முகுந்தனுக்கு இன்னும் பவரான ஒரு பொறுப்பை வழங்கினால் அது கட்சியின் வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கும் என்று நினைத்தார் ராமதாஸ்,.. ஏற்கனவே தன்னுடைய மகன் அன்புமணி கட்சியின் தலைவராக இருப்பதாலும், இளைஞரணி தலைவர் பொறுப்பு காலியாக இருந்ததாலும் அந்த பொறுப்பிற்கு சரியான நபராக முகுந்தன் இருப்பார் என்று ராமதாஸ் நினைத்த ராமதாஸ் இன்றைய பொதுக்கூட்டத்தில் அவரை இளைஞரணித் தலைவராக அறிவித்திருக்கிறார்.
முன்னதாக ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் இளைஞரணி தலைவர் பதவியில் இருந்தார். அவருக்கு கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து பதவி விலகினார். இதனால் தான் அந்த பொறுப்புக்கு முகுந்தனை அறிவித்திருக்கிறார் ராமதாஸ். ஆனல் முகுந்தனுக்கும் தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.