மேலும் அறிய

Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்

Hybrid Cars: ஹைப்ரிட் கார் தான் வாங்க வேண்டும் என விரும்புபவர்களுக்காக, இந்திய சந்தையில் கிடைக்கும், மிக முக்கியமான 5 மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • இந்தியாவில் ஹைப்ரிட் கார்களின் தேவை அதிகரித்து, செயல்திறன் மற்றும் எரிபொருள் சேமிப்பை வழங்குகின்றன.
  • மாருதி விக்டோரிஸ், கிராண்ட் விட்டாரா ஆகியவை லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ், 5 நட்சத்திர பாதுகாப்பு தருகின்றன.
  • டொயோட்டா ஹைரைடர், ஹைக்ராஸ் கார்கள் 22 கிமீ மைலேஜ், 4-5 நட்சத்திர பாதுகாப்புடன் வருகின்றன.
  • ஹோண்டா சிட்டி e:HEV 27 கிமீ மைலேஜ், 900 கிமீ வரை சென்று 5 நட்சத்திர பாதுகாப்பு அளிக்கிறது.

Hybrid Cars: ஹைப்ரிட் கார் வாங்க திட்டமிடுபவர்கள் பரிசீலிக்க வேண்டிய முதன்மையான 5 மாடல்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

அதிகரிக்கும் ஹைப்ரிட் கார்களின் மோகம்:

இந்தியாவில் ஹைப்ரிட் கார் மாடல்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகின்றன. ஓட்டுநர்கள் எதிர்பார்க்கும் எரிபொருள் திறன் மற்றும் ஆச்சரியப்படுத்தக் கூடிய செயல்திறன் ஆகியவற்றுக்கு இடையே சரியான சமநிலையை வழங்குகின்றன. இத்தகைய கார்கள் வழக்கமான பெட்ரோல் கார்களுக்கான ஒரு சிறந்த மாற்றாக உருவெடுத்து வருகின்றன. 2026 ஆம் ஆண்டில், பல பிரபலமான மாடல்கள் அவற்றின் மேம்பட்ட தொழில்நுட்பம், ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் நடைமுறை அம்சங்களுக்காக தனித்து நிற்கின்றன. அந்த பட்டியலில் மாருதி சுசூகி விக்டோரிஸ், மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், டொயோட்டா ஹைக்ராஸ் மற்றும் ஹோண்டா சிட்டி e:HEV ஆகியவை வெகுஜன சந்தை பிரிவில் பயனர்களிடையே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

டாப் 5 டக்கரான ஹைப்ரிட் சாய்ஸ்:

1. மாருதி சுசூகி விக்டோரிஸ்

மாருதி சுசூகி விக்டோரிஸின் வலுவான ஹைப்ரிட் வேரியண்ட்களானது ரூ.16.38 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற தொடக்க விலையில் கிடைக்கின்றன. ஹைப்ரிட் ஆப்ஷனானது 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினிலிருந்து சக்தியைப் பெறுகிறது மற்றும் லிட்டருக்கு 28.65 கிமீ மைலேஜை வழங்குகிறது. இந்த மாடலானது முறையே 170 hp மற்றும் 263Nm ஒருங்கிணைந்த பவர் மற்றும் டார்க்கை உற்பத்தி செய்கிறது மற்றும் இ-சிவிடி டிரான்ஸ்மிஷனைக் கொண்டுள்ளது. 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கை முழுமையாக நிரப்பினால், சுமார் ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரம் இடைநிற்றல் இன்றி பயணிக்க முடியும். இது பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

 

2. மாருதி சுசூகி க்ராண்ட் விட்டாரா

மாருதி சுசூகி க்ராண்ட் விட்டாரா 1.5 லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் இன்ஜினை கொண்டு, லிட்டருக்கு 27.97 கிமீ மைலேஜை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 170 ஹெச்பி பவரையும், 263 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் e-CVT டிரான்ஸ்மிஷனுடன் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் இதன் விலை ரூ.18.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கை நிரப்பினால், ஆயிரத்து 200 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இடைநிற்றலின்றி பயணிக்க முடியும். இது பாதுகாப்பு பரிசோதனையில் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

3. டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் 1.5 லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் இன்ஜினை கொண்டு, லிட்டருக்கு 27.97 கிமீ மைலேஜை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 91.19 ஹெச்பி மற்றும் 112 என்எம் டார்க்கை உற்பத்தி செய்கிறது. ரூ.16.72 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற தொடக்க விலையில், இந்த மாடல் இ-டிரைவ் டிரான்ஸ்மிஷனைக் கொண்டுள்ளது. 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கை நிரப்பினால், ஆயிரத்து 200 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இடைநிற்றலின்றி பயணிக்க முடியும். சர்வதேச பாதுகாப்பு பரிசோதனையில் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

4. டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ்

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் மாடலானது ரூ.26.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற தொடக்க விலையில் கிடைக்கிறது. இது 2.0 லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் இன்ஜின் மூலம், அதிகபட்சமாக 183.7 ஹெச்பி பவரையும், 191 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. சீக்வன்சியல் ஷிஃப்ட்களுடன் கூடிய இ-டிரைவ் டிரான்ஸ்மிஷனை கொண்டு, லிட்டருக்கு லிட்டருக்கு 22.16 கிமீ மைலேஜை வழங்குகிறது. 52 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கை நிரப்பினால், ஆயிரத்து 200 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இடைநிற்றலின்றி பயணிக்க முடியும். பாரத் பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

5. ஹோண்டா சிட்டிe:HEV

ஹோண்டா சிட்டி e:HEV காரில் 1.5 லிட்டர் i-VTEC நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதோடு ஹைப்ரிட் சிஸ்டம் இணைக்கப்பட்டு,லிட்டருக்கு 27.26 கிமீ மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. இந்த மாடல் 124 hp மற்றும் 253 Nm பீக் டார்க்கை உற்பத்தி செய்கிறது. விலை ரூ.19.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. 40 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கை நிரப்பினால், 900 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இடைநிற்றலின்றி பயணிக்க முடியும். பாரத் பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

Frequently Asked Questions

இந்தியாவில் ஹைப்ரிட் கார்களின் பயன்பாடு ஏன் அதிகரித்து வருகிறது?

ஹைப்ரிட் கார்கள் சிறந்த எரிபொருள் திறனையும், ஆச்சரியமான செயல்திறனையும் வழங்குகின்றன. இவை வழக்கமான பெட்ரோல் கார்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக இருக்கின்றன.

மாருதி சுசூகி விக்டோரிஸ் காரின் எரிபொருள் திறன் மற்றும் பாதுகாப்பு எப்படி இருக்கிறது?

விக்டோரிஸ் லிட்டருக்கு 28.65 கிமீ மைலேஜ் தருகிறது. இதன் 45 லிட்டர் எரிபொருள் டேங்க் மூலம் சுமார் 1200 கிமீ வரை பயணிக்கலாம். இது 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கையும் பெற்றுள்ளது.

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் முக்கிய அம்சங்கள் யாவை?

இது 2.0 லிட்டர் ஹைப்ரிட் இன்ஜினுடன் லிட்டருக்கு 22.16 கிமீ மைலேஜ் தருகிறது. 52 லிட்டர் டேங்க் மூலம் 1200 கிமீக்கு மேல் பயணிக்கலாம். மேலும், இது 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் கொண்டுள்ளது.

ஹோண்டா சிட்டி e:HEV காரின் மைலேஜ் மற்றும் பாதுகாப்பு விவரங்கள் என்ன?

இந்த கார் லிட்டருக்கு 27.26 கிமீ மைலேஜ் தருகிறது. 40 லிட்டர் டேங்க் மூலம் 900 கிமீக்கு மேல் பயணிக்கலாம். இது 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கையும் கொண்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

400 கி.மீட்டர் வரை மைலேஜ்! Simple Ultra E Scooter விலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு - எவ்ளோ?
400 கி.மீட்டர் வரை மைலேஜ்! Simple Ultra E Scooter விலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு - எவ்ளோ?
Yamaha Hybrid Scooter: என்னய்யா ஹைப்ரிட் காரு, நாங்க இறக்குறோம் ஹைப்ரிட் ஸ்கூட்டர்; யமாஹாவின் தரமான சம்பவம்
என்னய்யா ஹைப்ரிட் காரு, நாங்க இறக்குறோம் ஹைப்ரிட் ஸ்கூட்டர்; யமாஹாவின் தரமான சம்பவம்
Hyundai Hybrid: புதுசா 3 ஹைப்ரிட் மாடல நாங்க இறக்குறோம் - ரெண்டு 7 சீட்டரும் இருக்கு - ஹுண்டாயின் அதிரடி திட்டம்
Hyundai Hybrid: புதுசா 3 ஹைப்ரிட் மாடல நாங்க இறக்குறோம் - ரெண்டு 7 சீட்டரும் இருக்கு - ஹுண்டாயின் அதிரடி திட்டம்
Mitsubishi Pajero: கம்பேக்கிற்கு ரெடி..! முற்றிலும் புதிய வடிவில் பஜேரோ - எந்த ரோட்லயும் தாராளமா ஓடும் எஸ்யுவி
Mitsubishi Pajero: கம்பேக்கிற்கு ரெடி..! முற்றிலும் புதிய வடிவில் பஜேரோ - எந்த ரோட்லயும் தாராளமா ஓடும் எஸ்யுவி
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: பெரம்பூருக்கு திடீர் விசிட்! வாசலில் விசில் கோலம் வரைந்த விஜய்!
TVK Vijay: பெரம்பூருக்கு திடீர் விசிட்! வாசலில் விசில் கோலம் வரைந்த விஜய்!
Hormuz Strait: கேட்டை ஓபன் பண்ணியச்சு.. கீரின் சிக்னல் கொடுத்த ஈரான்! நன்றி சொன்ன டிரம்ப்
Hormuz Strait: கேட்டை ஓபன் பண்ணியச்சு.. கீரின் சிக்னல் கொடுத்த ஈரான்! நன்றி சொன்ன டிரம்ப்
Valparai Accident: சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்! – வால்பாறை மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு
சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்! – வால்பாறை மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு
Edappadi Palanisamy: அம்மா உணவகம் முதல் தாலிக்கு தங்கம் வரை? - முடங்கிய திட்டங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கத் தயாராகும் இபிஎஸ்
அம்மா உணவகம் முதல் தாலிக்கு தங்கம் வரை? - முடங்கிய திட்டங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கத் தயாராகும் இபிஎஸ்
ஏப்ரல் 28-க்குள் சரண்டர் ஆகணும்! – எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஏப்ரல் 28-க்குள் சரண்டர் ஆகணும்! – எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
400 கி.மீட்டர் வரை மைலேஜ்! Simple Ultra E Scooter விலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு - எவ்ளோ?
400 கி.மீட்டர் வரை மைலேஜ்! Simple Ultra E Scooter விலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு - எவ்ளோ?
நாஞ்சில் சம்பத் ஆபாச பேச்சு: முகம் சுழித்த பெண்கள்! – பொதுமேடையில் அநாகரீகத்தின் உச்சம்
நாஞ்சில் சம்பத் ஆபாச பேச்சு: முகம் சுழித்த பெண்கள்! – பொதுமேடையில் அநாகரீகத்தின் உச்சம்
Delimitation: 60 பேரை தேடும் பாஜக..! இன்று மாலை வாக்கெடுப்பு - மக்களவையில் பலத்தை காட்டிடுமா? கணக்குகள் என்ன?
Delimitation: 60 பேரை தேடும் பாஜக..! இன்று மாலை வாக்கெடுப்பு - மக்களவையில் பலத்தை காட்டிடுமா? கணக்குகள் என்ன?
Embed widget