Madurai Aadheenam: திட்டமிட்டு கொல்ல முயற்சியா? குற்றம் சாட்டிய மதுரை ஆதீனம்! வெளியான CCTV காட்சி
தன்னை கொலை செய்ய சதி நடந்ததாக மதுரை ஆதினம் குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், கார் விபத்து சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரம் ஆதினம் ஏற்பாட்டில் சென்னை காட்டாங்குளத்தூரில் அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய மதுரை ஆதினம் தன்னை கொலை செய்ய கார் விபத்து மூலம் சதி நடந்ததாக குற்றம்சாட்டினார். மேலும், மாநாட்டில் கலந்து கொள்ள வந்த தன் கார் மீது உளுந்தூர்பேட்டை அருகே மற்றொரு கார் உரசிச் சென்ற நிலையில் இது திட்டமிட்ட சதி, தன்னை கொலை செய்ய விபத்தை ஏற்படுத்தியதாகவும் தொடர்ந்து சமூகப்பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்து வருவதால், வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தன்னை கொல்ல திட்டமிட்டிருக்கலாம் என்று கூறி பரபரப்பை கிளப்பினார். இச்சூழலில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் மதுரை ஆதீனத்தின் கார் அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. அப்போது சாலையின் எதிர் பகுதியில் வெள்ளை நிறக் கார் மெதுவாக வந்துள்ளது. ஆதீனத்தின் கார் அதிவேகமாக சென்று சாலையைக் கடந்த போது தான் இந்த விபத்து நடந்திருப்பது தெரியவந்துள்ளது.





















