மேலும் அறிய

"என்னை என்ன வேணாலும் பண்ணுங்க"அம்மாவ மட்டும் பாத்துக்கோங்க! - விக்னேஷ் !

”சார்.. எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்க.. எங்க அம்மாவுக்கு மட்டும் நல்ல TREATMENT கொடுத்து பார்த்துக்கோங்க” என்று அரசு மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷ் வாக்குமூலம் அளித்துள்ளதாக வெளியாகும் தகவல் பகீரை ஏற்படுத்தியுள்ளது..

சென்னை கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையில் பட்டப்பகலில் டாக்டர் ஒருவரை கத்தியால் குத்தியதும், மருத்துவமனை முழுவதும் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவர் பாலாஜி சிகிச்சைக்காக தூக்கி செல்லபட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர், மேலும் இந்த நிகழ்வை கண்டித்து அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டு தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளன்னர்.

இந்நிலையில் தான் கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற விக்னேஷை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், டாக்டர் பாலஜியை தான் ஏன் கத்தியால் குத்தினேன் என்று அந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். 

அதில், “சார் என் பேரு விக்னேஷ். நான் சென்னையை அடுத்த புதிய பெருங்களத்தூரில் வசித்து வருகிறேன். எனக்கு வயசு 26. ஆட்டோமொபைல் இஞ்ஜினியரிங் படிச்சுருக்கேன். என் அம்மா பேரு பிரேமா. அவங்க நுரையீரல் புற்று நோயால் பாத்திக்கப்பட்டிருக்காங்க. பர்ஸ்ட் அம்மாவ சவிதா ஆஸ்பிட்டல்லுக்கு தான் கொண்டுட்டு போயி ட்ரீட் மெண்ட் எடுத்தோம். அதுக்கு அப்பறம் தான் கிண்டில உள்ள கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில டிரீட்மெண்ட் நல்லா இருக்கும்னு கடந்த மே மாசம் இங்க கூட்டிட்டு வந்தோம். டாக்டர் பாலாஜி தான் என்னோட அம்மாவுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்தாரு. பல முறை ஸ்கேன் எடுத்துட்டு வர சொல்லி எழுதி கொடுப்பாரு, ஆனா ஒருமுறை கூட அந்த ஸ்கேன் ரிப்போர்ட் வாங்கி அவர் பார்த்ததே இல்லை. எந்த டவுட் கேட்டாலும் ஆங்கிலத்தில் உடனே திட்டுவார். அம்மா வலி தாங்காம வீட்டுல இருக்கும் போது ரொம்ப கஷ்டப்படுவாங்க. இது பாத்துட்டு என்னால தாங்க முடியல அதனால வேற எங்கயாச்சும் காட்டலாமேனு தோனி கடைசியில அக்டோபர் மாசம் விருகம்பாக்கத்துல டாக்டர் ஜாக்குலின் மோசஸ் என்ற மருத்துவர் கிட்ட புற்று நோய் சிகிச்சை எடுத்தாங்க. 

அப்போ, இதுக்கு முன்னாடி எங்க ட்ரீட்மெண்ட் எடுத்தீங்க? என்று கேட்டார். கிண்டில பாத்துட்டு இருக்கோம்னு சொன்னேன். 

உடனே அந்த டாக்டர், உங்க அம்மாவுக்கு மெடிசன் சைடு எபெக்ட் ஆகியிருக்கு என்று சொன்னார். நான் உடனே கிண்டி மருத்துமனைக்கு போயி டாக்டர் பாலிஜிகிட்ட, “சார்..எங்க அம்மாவுக்கு மருந்து ஏதோ சைடு எபெஃக்ட் ஆகியிருக்காமே ? என்று கேட்டேன். அவர் என்னிடம் சரியாக பதில் சொல்லவில்லை என்னை எச்சரித்து அனுப்பினார். நான் அழுது கொண்டே வெளியே வந்தேன்.  இன்று (நவம்பர் 13) காலை என் அம்மாவுக்கு மறுபடியும் கடுமையான வலி,அவர் கஷ்டப்படுவதை என்னால் தாங்கிக்க முடியலில்லை. காரணம் அந்த டாக்டர்தானே என கோபம் அதிகமாக வந்தது. வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தி எடுந்துக்கொண்டு காலையிலேயே கிண்டி பன்னோக்கு மருத்துவமனைக்கு போனேன். டாக்டர் பாலாஜி ரூமுக்கு சென்று கதவை சாத்தினேன். “எங்க அம்மாவுக்கு என்னய்யா மருந்து கொடுத்த? அப்டினு கேட்டு அவரு வாய்லயே குத்துனேன்.  கோவம் தாங்காம வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற கத்தியால அவரை குத்தினேன் இது சார் நடந்துச்சு. எனக்கு என்ன வேணாலும் தண்டனை கொடுங்சார் ....ஆனா எங்க அம்மாவுக்கு நல்ல சிகிச்சை ,கொடுக்க சொல்லுங்க சார்”என்று கதறி அழுதாதாக தகவல்கள் கூறப்படுகிறது.

இந்நிலையில் தாய் பாசத்திற்காக, அவருக்கு உரிய சிகிச்சை கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் விக்னேஷ் இவ்வாறு செய்ததாக அவருடைய தாய் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசியல் வீடியோக்கள்

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORT
Senthil Balaji on Adani Issue |”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORT
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget