மேலும் அறிய

Tungsten Issue | ’’டங்ஸ்டன் விவகாரம் திமுக எதிர்க்கவே இல்ல’’ மத்திய அரசு அதிரடி | Modi | M K Stalin

டங்ஸ்டன் சுரங்க உரிம ஏலத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தமிழ் நாடு அரசு எந்தவொரு எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்று மத்திய அரசு கூறியிருப்பது விவாதத்தை கிளப்பியுள்ளது.

கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தில்,  ”எந்தக் காரணம் கொண்டும் தமிழ்நாட்டுக்குள் டங்ஸ்டன் சுரங்க திட்டம் வரக்கூடிய வாய்ப்பு இல்லை. ஒருவேளை டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் நான் முதலமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன்” என்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து டங்ஸ்டன் சுரங்க உரிம ஏலத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. 

இந்த நிலையில் தான் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தமிழ் நாடு அரசு எந்தவொரு எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்று  மத்திய அரசு கூறியிருக்கிறது. இது தொடர்பாக மத்திய சுரங்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மாவட்டம் மேலூர், தெற்குத்தெரு, முத்துவேல்பட்டி ஆகிய பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான, புவியியல் குறிப்பாணையை கடந்த 2021 செப்டம்பர் 14ல் தமிழக அரசிடம், இந்திய புவியியல் சர்வே(ஜிஎஸ்ஐ) அமைப்பு வழங்கியது. அந்த நேரத்தில், டங்ஸ்டன் உள்ளிட்ட அனைத்து இயற்கை வளங்களையும் ஏலத்தில் விடும் அதிகாரம் மாநில அரசுகளிடம் தான் இருந்தது. பிறகு, மத்திய அரசு கொண்டு வந்த சட்டதிருத்தத்தின்படி சுரங்க குத்தகைகள் மற்றும் ஏலத்திற்கு விடும் அதிகாரம் மத்திய அரசுக்கு மாற்றப்பட்டது. 

இதில், டங்ஸ்டனும் அடங்கும். இதனடிப்படையில், மத்திய சுரங்கத்துறை அமைச்சகம், கடந்த 2023 செப்டம்பர் 15ல், நாயக்கர்பட்டி டங்ஸ்டன் பிளாக் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள முக்கியமான தனிமங்கள் ஏலம் தொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது. இதற்கு 2023 அக்டோபர் 3 ல் பதிலளித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர், மத்திய அரசின் சட்டத்திருத்தம் குறித்து கேள்வி எழுப்பியதோடு, முக்கியமான தனிமங்கள் ஏலத்தில் விடுவதற்கான உரிமை தமிழக அரசிடமே இருக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், 2021-2023 காலகட்டத்தில் முக்கியமான தனிமங்களை ஏலத்தில் விடுவதற்கு அதிகாரம் இருந்தும் தமிழக அரசு, எதையும் செய்யவில்லை. ஏலம் விடுவதற்கான அதிகாரம் இருந்தபோதிலும், ஒன்பது ஆண்டுகளில் ஒரு சுரங்கத்தைக் கூட தமிழக அரசு ஏலம் விடவில்லை.

இதன் பிறகு, சட்டத்தின்படி, சுரங்கத்தை ஏலம் விடும் நடவடிக்கை துவங்கும் என தமிழக அமைச்சருக்கு கடிதம் எழுதிய பிறகு, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் பிளாக் உள்ளிட்ட 3 முக்கிய தனிமங்கள் குறித்த விவரங்களை அளிக்கும்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டது.

தமிழக புவியியல் மற்றும் சுரங்கத்துறை கமிஷனர், கடந்த பிப்ரவி 8 ல் அளித்த கடிதம் மூலம் நாயக்கர்பட்டி பிளாக் உள்ளிட்ட 3 பிளாக்குகளின் விவரத்தை அளித்தார். அப்போது, பல்லுயிர் பகுதிகள் குறித்து தெரிவித்து இருந்தாலும், அங்கு ஏலம் விடுவதற்கு எதிராக எந்த பரிந்துரையையும் அளிக்கவில்லை.

சுரங்கத்துறை அமைச்சகம், முக்கிய தனிமங்கள் கொண்ட 24 பிளாக்குகளை வெற்றிகரமாக ஏலம் விடுத்துள்ளது. 20.16 சதுர கி.மீ., நாயக்கர்பட்டி டங்ஸ்டன் பிளாக் ஆனது பிப்ரவி மாதம் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. மீண்டும் இரண்டாவது முயற்சியாக ஜூன் மாதம் ஏலத்தில் விடப்பட்டது. கடந்த நவ., மாதம் ஹிந்துஸ்தான் ஜின்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்தது.

முதலில் ஏலம் விடப்பட்ட பிப்ரவரி முதல் நவம்பர் 7 வரையிலான காலகட்டத்தில் ஏலம் தொடர்பாக மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் நடத்திய பல கூட்டங்களில் தமிழக அரசு கலந்து கொண்டது. ஆனால், ஏலம் தொடர்பாக தமிழக அரசு எந்த எதிர்ப்பையோ, கவலையையோ அல்லது எந்த தகவலையும் மத்திய அரசுக்கு தெரிவிக்கவில்லை”என்று கூறியுள்ளது. இந்த நிலையில் தமிழ் நாடு அரசின் இந்த செயல்பாடு சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதத்தை கிளப்பியுள்ளது.

அரசியல் வீடியோக்கள்

Tungsten Issue | ’’டங்ஸ்டன் விவகாரம் திமுக எதிர்க்கவே இல்ல’’ மத்திய அரசு அதிரடி | Modi | M K Stalin
Tungsten Issue | ’’டங்ஸ்டன் விவகாரம் திமுக எதிர்க்கவே இல்ல’’ மத்திய அரசு அதிரடி | Modi | M K Stalin
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
EPS Slams DMK:  “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
EPS Slams DMK: “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
Christmas 2024 Wishes: கிறிஸ்துமஸ் வந்தாச்சு..மனம் நிறைந்த வாழ்த்து அனுப்ப.. மெசேஜ், புகைப்படங்கள் இதோ!
Christmas 2024 Wishes: கிறிஸ்துமஸ் வந்தாச்சு..மனம் நிறைந்த வாழ்த்து அனுப்ப.. மெசேஜ், புகைப்படங்கள் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tungsten Issue | ’’டங்ஸ்டன் விவகாரம் திமுக எதிர்க்கவே இல்ல’’ மத்திய அரசு அதிரடி | Modi | M K StalinADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
EPS Slams DMK:  “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
EPS Slams DMK: “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
Christmas 2024 Wishes: கிறிஸ்துமஸ் வந்தாச்சு..மனம் நிறைந்த வாழ்த்து அனுப்ப.. மெசேஜ், புகைப்படங்கள் இதோ!
Christmas 2024 Wishes: கிறிஸ்துமஸ் வந்தாச்சு..மனம் நிறைந்த வாழ்த்து அனுப்ப.. மெசேஜ், புகைப்படங்கள் இதோ!
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
’’பொதுத்தேர்வுக்கு முன் பாத பூஜை எனும் பெயரில் கொடுமை’’ பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு!
’’பொதுத்தேர்வுக்கு முன் பாத பூஜை எனும் பெயரில் கொடுமை’’ பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு!
Embed widget