மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

ரகசிய வாக்குமூலத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர்? கொடநாடு மர்மம் பின்னணி

2017ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அவருடைய கோடநாடு பங்களா தலைப்புச் செய்தியானது. அந்த பங்களாவில் நடந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் தான் இதற்குக் காரணம். அண்மையில், தெஹல்கா முன்னாள் எடிட்டர் மேத்யூ சாமூவேல்ஸ் வெளியிட்ட 16 நிமிடங்கள் ஓடும் புலன்விசாரணை ஆவணப்படம் மீண்டும் இந்த சர்ச்சையை பூதாகரமாக்கியுள்ளது.

அந்த ஆவணப் படத்தில் கோடநாடு கொள்ளை பின்னணியில் ஈபிஎஸ் இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. இதனை ஈபிஎஸ் திட்டவட்டமாக மறுத்து வருகிறார். இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பரப்பப்படும் அவதூறு என்றும் அவர் கூறுகிறார்.

இந்நிலையில் கோடநாடு சம்பவங்களை டைம்லைன் வாரியாக அலசுவோமே.. ஏப்ரல் 24, 2017: கோடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் 800 ஏக்கர் டீ எஸ்டேட்டில் மர்ம நபர்கள் நுழைந்துவிட்டதாகவும் அங்கே அதிகாலை நேரத்தில் கொலை நடந்திருப்பதாகவும் பரபரப்புத் தகவல் வெளியானது. ஓம் பகதூர் என்ற காவல்காரர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இன்னுமொரு காவலாளி காயங்களுடன் மீட்கப்பட்டார். பங்களாவின் வாயில் கதவு எண் 10ல் இந்தக் கொடூர சம்பவம் நடந்திருந்தது. ஓம்பகதூர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் அருகிலிருந்த மரத்தில் தலைகீழாக தொங்கவிடப்பட்டிருந்தார்.

கேட் எண் 8ல் கிருஷ்ண பகதூர் தாக்கப்பட்டு மயக்கமடையச் செய்யப்பட்டிருந்தார். பங்களாவில் சிசிடிவி கேமராக்கள் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் தான் இந்த சம்பவம் நடந்தது. ஜெயலலிதா, சசிகலாவின் அறைகளில் இந்தச் சம்பவம் நடந்தது. பின்னர் போலீஸ் நடத்திய விசாரணையில் ஜெயலலிதாவின் அறையில் இருந்து 5 உயர்ரக கைக்கடிகாரங்கள் மட்டுமே காணாமல் போயிருந்தது தெரியவந்தது. ஏப்ரல் 27, 2017 சம்பவம் நடந்த மூன்று நாட்களில் போலீஸார் முதல் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். கேரளாவைச் சேர்ந்த சயன் என்பவர் கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 28, 2017 கோடநாடு வழக்கில் மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டனர். கோடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜின் பெயர் அடிப்பட்டது.

கனகராஜ், கோடநாட்டிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதும். அவரே சயனுடன் இணைந்து இந்த கொள்ளை சம்பவத்துக்கு திட்டமிட்டதும் பின்னாளில் தெரிந்தது. கனகராஜ், சயான் இருவருமே சாலை விபத்துகளில் சிக்கினர். இதில் கனகராஜ் சேலத்தில் சாலை விபத்தில் இறந்தார். சயான் கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு மனைவி, குழந்தையுடன் செல்லும்போது கார் விபத்துக்குள்ளானது. சயான் பிழைத்துக் கொள்ள, மனைவியும், குழந்தையும் இறந்தனர். ஜூலை 3, 2017: மூன்று மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் கோடநாடு எஸ்டேட்டில் மேலும் ஒருவர் மர்மமான முறையில் இறந்தார். எஸ்டேட்டில் கணினி பிரிவில் பணியாற்றிய 24 வயது இளைஞரான தினேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டார். அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய வலி பொறுக்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜனவரி 11,2019: கோடநாடு விவகாரம் தொடர்பான ஆவணப்படத்தை டெல்லி செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்ட டெஹல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், குற்றம்சாட்டப்பட்ட சயன் மற்றும் மனோஜ் ஆகியோரை பேச வைத்தார். ஜனவரி 23, 2019: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டெஹல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், ‛சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் எனது தூண்டுதலில் பேசவில்லை,’ என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் தனது குற்றச்சாட்டுகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார். ஆகஸ்ட் 13,2021: சயனிடம் கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக கூடுதல் விசாரணை செய்யக்கோரி ஊட்டி நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 16, 2021: கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குற்றம் சுமத்திய சயன், விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. சட்டமன்றத்தில் சலசலப்பு: சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்றைய விவாதத்தில் கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின், கோடநாடு வழக்கு விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான எடப்படி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

கோடநாடு தொடர்பாக என்ன நோக்கத்திற்காக விசாரணை நடத்த வேண்டும் என கேள்வி எழுப்பினர். இதை தொடர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வரின் அறிவிப்புக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோடநாடு விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை எனவும் உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் பதிலளித்தார். முதல்வரின் பேச்சுக்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அரசியல் வீடியோக்கள்

கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுக
BJP Meeting | கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுக
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE:  போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Auction 2025 LIVE: போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL RahulAR Rahman Saira Divorce Reason : வலியும் வேதனையும் அதிகம்  பிரிந்த AR ரஹ்மான்  சாய்ரா பானுIPL Auction 2025 :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE:  போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Auction 2025 LIVE: போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Embed widget