மேலும் அறிய

Kolkata doctor case : ”செமினார் ஹால் SECRET” பல்டி அடித்த குற்றவாளி! டாக்டர் கொலையில் ட்விஸ்ட்

நான் செமினார் ஹாலுக்குள் போகும் போதே பெண் மருத்துவர் இறந்துதான் கிடந்தார் என பகீர் தகவலை சொல்லியுள்ளார் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சஞ்சய் ராய். 

மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையிலேயே உள்ள செமினார் ஹாலில் வைத்து அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையில் இறங்கிய போலீசார் சஞ்சய் ராய் என்பவரை கைது செய்தனர். மேற்கு வங்க போலீசாருக்கு உதவும் வகையில் Civic volunteer ஆக இருந்த அவர், இரவு நேரத்தில் மதுபோதையில் மருத்துவமனைக்குள் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த ப்ளூடூத்தை வைத்து சிக்கினார் சஞ்சய் ராய். அவர் உள்ளே வரும் போது காதில் ப்ளூடூத் இருந்ததும், வெளியே போகும் போது ப்ளூடூத் இல்லாமல் இருந்ததும் சிசிடிவி காட்சிகளை வைத்து கண்டுபிடிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் சஞ்சய் ராய் போலீசார் விசாரணையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். ஆனால் சில நாட்களுக்கு பிறகு தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், வேண்டுமென்றே தன்னை சிக்கவைத்ததாகவும் அந்தர்பல்டி அடித்தார். 

இந்தநிலையில் அவர் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதில், தான் செமினார் ஹாலுக்கு போகும் போதே மருத்துவர் இறந்து கிடந்ததாகவும், அதனால் பயத்தில் அங்கிருந்து ஓடியதாகவும் சொன்னதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த சோதனையின் போது அவர் நம்பமுடியாத பல தகவல்களை சொன்னதாக தெரிகிறது. மேலும் உண்மை கண்டறியும் சோதனையின் போது அவர் பதற்றமாகவும், கவலையுடன் இருந்ததாகவும் சொல்கின்றனர். 

சஞ்சய் ராய் தற்போது மாற்றி பேசினாலும், அவர் அந்த நேரத்தில் அங்கே வந்தது ஏன் என்பதற்கான சரியான காரணம் எதையும் சொல்லவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர். 

பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சில முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், அதனை மறைப்பதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இந்தநிலையில் முக்கிய குற்றவாளி என கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் கொலை செய்யவில்லை என யூ டர்ன் அடித்துள்ளது மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!
மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு செய்த நீதிமன்றம் !
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு செய்த நீதிமன்றம் !
மதுரை வைகையை நாசமாக்கும் மருத்துவக் கழிவுகள்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மதுரை வைகையை நாசமாக்கும் மருத்துவக் கழிவுகள்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற கிளை !
குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற கிளை !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget