Baby Viral Video | உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..
சென்னையில் அடுக்கு மாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஒரு குழந்தையை கூட ஒழுங்கா பார்த்துக்க முடியல, உனக்கெல்லாம் எதற்கு குழந்தை என்று பலர் தன்னை சமூக வளைத்தளத்தில் ட்ரோல் செய்ததால் மனதளவில் பாதிக்கப்பட்ட பெண்மணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தை சேர்ந்த ரம்யா சென்னையில் தன்னுடைய கணவர் வெங்கடேஷ் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் திருமுல்லை வாயிலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
இந்நிலையில் அண்மையில் ரம்யாவின் ஏழு மாத கை குழந்தை அடுக்கு மாடி குடியிருப்பில் அருகில் இருந்த கூறையின் மீது தவறி விழுந்து தத்தளித்த நிலையில், அந்த அப்பார்ட்மெண்டின் உள்ள வாசிகள் அனைவரும் துரிதமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக போராடி மீட்கும் காட்சி இணையத்தில் வைரலாக பரவியது.
ஆனால் இந்த வீடியோவை சமூக வளைதளங்களில் கண்ட மக்கள் பலர், 7 மாத குழந்தை அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது, பெற்றோர்கள் எங்கே சென்றார்கள் என்று கேள்வியை எழுப்பினர். மேலும் குழந்தையை பார்த்துக்க முடியாட்டி ஏன் பெத்துக்குறீங்க என்பது போன்ற காட்டமான பதிவுகளை பதிவிட்டு வந்தனர்.
சிலர் தாய் ரம்யா குறித்து மிக மோசமான கருத்துகளை தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.
ஆனால் பின்னர் அக்கம்பக்கத்து வீட்டாரிடம் விசாரிக்கையில், பெற்றோர் மீது எந்த தப்புமில்லை, தாய் ரம்யா ஜன்னல் வழியாக வேடிக்கை காட்டிக்கொண்டு உணவு ஊட்டும் போது குழந்தை துள்ளி தவறி விழுந்ததாக சொன்னார்கள். மேலும் கவன குறைவு என்று சொல்லாதீர்கள், தாய் ரம்யா குழந்தையை பொத்தி பொத்தி பாதுகாப்பாக வைத்திருப்பவர் நாங்களே பார்த்திருக்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் விமர்சித்தவர்களின் கருத்துகளால் மிகவும் மணம் துவண்டு போன ரம்யா, அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார், இதற்காக அவர் சிகிச்சையும் எடுத்துக்கொண்டதாக சொல்லபடுகிறது.
ஆனாலும் நம் சமூகம் ஏற்படுத்திய குற்ற உணர்ச்சியிலிருந்து வெளி வர முடியாத ரம்யா தொடர்ந்து மன அழுத்ததில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்ற ரம்யா கடந்த சில நாட்களாக அங்கேயே தங்கியுள்ளார், இந்நிலையில் தான் நேற்று மாலை ரம்யாவின் தாய் தந்தை மற்றும் குடும்பத்தினர் ஒரு நிகழ்ச்சிக்காக வெளியே சென்ற நேரத்தில் விபரீதமான முடிவெடுத்த ரம்யா, தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எதற்க்கும் தீர்வாகாது என்பது எந்தளவு உண்மையோ, அதே அளவு சமீப காலத்தில் எந்த ஒரு விஷயத்திலும் பாதிக்கபட்ட நபரின் மனநிலையிலிருந்து யோசிப்பதை மறந்து, எடுத்த எடுப்பில் வெறுப்பு பிரச்சாரத்தையும் கருத்துக்களையும் முன்வைத்து விடுகிறோம்.