கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
கரூரில் கிங்காக வலம் வரும் செந்தில் பாலாஜி 2026 தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது சொந்த தொகுதியை விட்டு வேறு மாவட்டத்தை டிக் அடித்துள்ளதன் பின்னணியில் சில முக்கிய கணக்குகள் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
கடந்த 2021 தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சுமார் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். குறிப்பாக 2021 தேர்தலுக்கு பிறகு கரூரில் முக்கிய நகர்வுகளை செந்தில் பாலாஜியே கவனித்து வருகிறார்.
ஆனால் வரவிருக்கும் தேர்தலில் 2026 தேர்தலில் கரூரை விட்டுவிட்டு வேறு ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்து செந்தில் பாலாஜி ட்விஸ்ட் கொடுத்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது. அதுவும் தொகுதி மட்டும் மாறாமல் மாவட்டத்தையே மாற்றி கோவை தெற்கு தொகுதியில் களமிறங்க செந்தில் பாலாஜி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2021 தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட திமுகவால் வெற்றி பெற முடியவில்லை. மேற்கு மண்டலத்தில் உள்ள 39 தொகுதிகளில் 23 தொகுதிகள் அதிமுக வசம் தான் இருக்கின்றன. அதிமுகவின் கோட்டையாக இருக்கும் கோயம்புத்தூரை திமுக வசமாக்கும் பொறுப்பை செந்தில் பாலாஜியிடம் ஒப்படைத்துள்ள திமுக தலைமை அவரை 6 மாவட்டங்களுக்கான பொறுப்பாளராக நியமித்தது. கொங்கு மண்டலத்தில் கட்சி வளர்ச்சிக்கு செந்தில் பாலாஜி முக்கிய காரணம் என்பதால் அந்தப் பகுதியை கண்ட்ரோலில் எடுக்கும் முடிவை எடுத்துள்ளார் செந்தில் பாலாஜி.
அதற்கு கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்டால் தான் சரியாக இருக்கும் என்ற முடிவை செந்தில் பாலாஜி எடுத்துள்ளாராம். கொங்கு மண்டலத்தில் முக்கிய தொகுதியாக இருக்கும் கோயம்புத்தூரில் வெற்றி பெற்றால் மற்ற தொகுதிகளையும் இயக்குவதற்கு வசமாக இருக்கும் என கணக்கு போட்டதாக சொல்கின்றனர். கடந்த தேர்தலை போல் இல்லாமல் கோயம்புத்தூரிலும் அதிமுகவை பின்னுக்கு தள்ளி MLA-க்களை உருவாக்கி விட வேண்டும் என்ற கணக்கும் இருக்கிறது.
கோவையைப் பொறுத்தவரை அதிமுகவின் கோட்டையாகவும், எஸ்.பி. வேலுமணியின் செல்வாக்கு மிக்க இடமாகவும் பார்க்கப்படுகிறது. அங்குப் போட்டியிடுவதன் மூலம் அதிமுகவின் செல்வாக்கைச் சிதைக்க முடியும் என அவர் நம்புகிறார்.
குறிப்பாக கோயம்புத்தூரை குறிவைத்து தான் பாஜகவும் காய்களை நகர்த்தி வருகிறது. கடந்த தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை தோற்கடித்து MLA ஆனால் பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன். தற்போது அதே தொகுதியில் களமிறங்கி பாஜகவுக்கு செக் வைக்கும் வகையில் ஆட்டத்தை ஆரம்பிக்க செந்தில் பாலாஜி ரெடியாகிவிட்டதாக சொல்கின்றனர்.





















