’’யாரும் என்னை கடத்தலஅடிச்சது என் கணவர் தான்’’பாதிக்கப்பட்ட பெண் பகீர்கோவை கடத்தல் சம்பவம் | CCTV | Viral Video | Kovai Woman Kidnap
கோவை, இருகூரில் நேற்று இரவு காரில் பெண் கடத்தப்பட்டதாக சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திய வீடியோ தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது உள்ளது. அதில் அப்பெண்ணை யாரும் கடத்தவில்லை என்பதும் அது கணவன் மனைவி தகராறு என்றும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோ காட்சியில் அவரும் அவர் கணவர் மற்றும் குழந்தை வெளியே துணிகளை தைக்க சென்று வந்ததாகவும், அப்பகுதியில் உள்ள பேக்கரியில் டீ சாப்பிட்டு விட்டு வந்ததாகவும், ராவுத்தர் பிரிவு அருகே பழங்கள் வாங்க கணவர் இறங்கக் கூறியதாகவும், அப்பொழுது இறங்க முடியவில்லை என்று அந்தப் பெண் கூறியதாகவும், அப்பொழுது சாதாரணமாக வந்து கொண்டு இருந்ததாகவும், அப்பொழுது இப்படியே பேசிகிட்டு எங்கேயும் கூப்பிட்டு செல்லாதே ? சந்தோசமாக வைத்துக் கொள்ளாதே ? என கேட்டதாகவும், கீழே இறங்க அதற்கு வீட்டிற்கு சென்றால் பெரிய பிரச்சனையாகி விடும் என்று கணவர் வா, வா என்று கூப்பிட்டதாகவும், அதற்கு தான் வரவில்லை என்று கூறியதாகவும், அப்பொழுது காருக்குள் பிடித்து இழுத்து வீட்டில் போய் பேசி கொள்ளலாம் என்று அடுத்ததாகவும், அதற்கு அந்தப் பெண்ணும் நான் உன்னிடம் அடி வாங்கணுமா என்று திருப்பி அடித்ததாகவும் அதற்கு பையன் ஏன் இப்படி மான மரியாதையை வாங்குகிறீர்கள் முதலில் காரை எடுங்கள் என்று கூறியதாகவும் பிறகு கிளம்பி வந்ததாக அந்தப் பெண் காவல் துறையினரின் விசாரணையில் கூறுகிறார், அந்த வீடியோ தற்பொழுது காவல்துறையினர் வெளியிட்டு விளக்கம் அளித்து உள்ளனர்.





















