Kovai Student Sexual Assault |கூட்டு பாலியல் வன்கொடுமைமாணவிக்கு நேர்ந்த கொடூரம் கோவையில் பயங்கரம்
கோவையில் கல்லூரி மாணவியை 3 பேர் இணைந்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணாண பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவமே தமிழ்நாட்டை உலுக்கியது. இந்த நிலையில், இந்த சம்பவத்தை மிஞ்சும் வகையில் ஒரு கொடூரம் கோவையில் அரங்கேறியுள்ளது.
கோயம்புத்தூர் விமான நிலையம் பின்புறம் நேற்று இரவு 11 மணியளவில் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கே வந்த 3 இளைஞர்கள் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து கடத்திச் சென்றுள்ளனர். அந்த மாணவியின் ஆண் நண்பர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து, போலீசார் கடத்திச் செல்லப்பட்ட பெண்ணை தேடும் பணியை மேற்கொண்டனர். அப்போது, அந்த பெண் கடத்தப்பட்ட பகுதியில் இருந்து சற்று தொலைவில் அரைநிர்வாணமாக மீட்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணை மீட்ட போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பெண்ணை 3 பேர் கடத்திச் சென்றதாகவும், அவர்கள் 3 பேரும் சேர்ந்து அந்த மாணவியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவியுடன் பேசிக்கொண்டிருந்த ஆண் நண்பருக்கும் தலை உள்ளிட்ட உடலில் பல்வேறு இடத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
தவறு செய்துவிட்டு தப்பியோடிய அந்த 3 இளைஞர்களையும் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிசிடிவி கேமரா உள்பட பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சமீபகாலமாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை ஞானசேகரன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கிய நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்களும், சக மாணவ - மாணவிகளும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.





















