தேங்கி நிற்கும் கழிவுநீர்! ஜெபம் செய்த மக்கள்! அதிகாரிகளுக்கு வைத்த REQUEST
சென்னை புளியந்தோப்பில் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கழிவுநீர் தேங்கிய சாலையில் மக்கள் நின்று ஜெபம் செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சென்னை பு ளியந்தோப்பு பகுதி 77வது வார்டுக்குட்பட்ட கே.எம்.கார்டன் பகுதியில்15 தெருக்கள் உள்ளன. இங்கு சுமார் 5000 பேர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த ஆறு நாட்களாக கழிவுநீர் சூழ்ந்துள்ளது. கழிவுநீர் வீடுகளை சுற்றி தேங்கி நிற்பதால், அப்பகுதியில் கடும் துார்நாற்றம் வீசுவதுடன் கொசுக்களும் அதிகரித்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் டெங்கு, மலேரியா காய்ச்சல் ஏற்படும் அச்சத்தில் இருக்கின்றனர்.
வீடுகளை சுற்றி கழிவுநீர் கால் முட்டி அளவுக்கு தேங் கியுள்ளதால் வீடுகளில் இருந்து மக்கள் வெளியே வர முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டில் உள்ள குழாய்களில் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதால் குடிநீருக்கும் வழி இல்லாததாக மக்கள் புலம்புகின்றனர். அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நிரந்தர தீர்வு ஏற்படவில் லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தநிலையில் இன்று கழிவுநீர் தேங்கியுள்ள சாலையில் அப்பகுதி மக்கள் நின்று ஜெபம் செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கழிவுநீரை முற்றிலும் அகற்றி, தொற்று நோய் பரவாதபடி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.





















