(Source: ECI | ABP NEWS)
கரூர் துயர சம்பவம் த்ரிஷாவை சீண்டும் ஓவியா?கொந்தளிக்கும் தவெகவினர்! | Trisha | Keerthy Suresh | Oviya Vs Vijay
நடிகை ஓவியா தவெக தலைவர் விஜயை தொடர்ந்து சீண்டி வருவது புதிய சர்ச்சையை கிளம்பியுள்ளது. அதிலும் நடிகைகள் திர்ஷா, கீர்த்தி சுரேஷ்-ஐ வைத்து ஓவியா, விஜய் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது தமிழ் திரை உலகில் புயலைக் கிளப்பியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன், கரூர் மாவட்டத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழக அளவில் மட்டுமல்லாமல், இந்திய அளவிலும் பேசுபொருளானது. இந்தச் சூழலில், நடிகை ஓவியா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு அதிரடியான பதிவைப் போட்டார். அவர், 41 பேர் பலியாகக் காரணமான விஜய் அவர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்ய வேண்டும்" என்று பகிரங்கமாகத் தன் கருத்தை முன்வைத்தார். இந்த பதிவுதான் புயலைக் கிளப்பியது. சினிமா உலகில் பலரும் மௌனம் காக்கும்போது, ஓவியா இப்படி தைரியமாகக் குரல் கொடுத்தது ஒருபுறம் பாராட்டப்பட்டாலும், மறுபுறம் விஜய் ரசிகர்கள் மத்தியிலே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஓவியாவின் பதிவின் கீழ், பல தரப்பட்ட கருத்துக்கள் வந்தன. அதில் ஒரு ரசிகர், "விஜய்க்கு நெருக்கமான நடிகை ஏன் இன்னும் இது குறித்து வாய் திறக்கவில்லை?" என்ற தொனியில் ஒரு கேள்வியை எழுப்பி, சில மீம்ஸ்களையும் பதிவிட்டார். சினிமா வட்டாரத்தில், நடிகர் விஜய் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் இடையேயான நட்பு குறித்தும், அவர்களது தொடர்ச்சியான கூட்டணி குறித்தும் பல கிசுகிசுக்கள் பேசப்படுவதுண்டு. இந்த நிலையில், ஓவியா அந்தப் பதிவை நேரடியாக ரீட்வீட் செய்திருந்தார். ஓவியா ரீட்வீட் செய்தது மறைமுகமாக விஜயை சீண்டும் ஒரு செயல் என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஓவியாவின் இந்த ரீட்வீட், தீயில் எண்ணெய் ஊற்றியது போலானது. விஜய் ரசிகர்கள் பலரும் ஓவியாவை மிகக் கடுமையாக விமர்சித்தனர். ஆனாலும், ஒரு சிலர், உயிரிழப்புக்கு நீதி கேட்பது நியாயமான கோரிக்கைதான் என்று ஓவியாவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர்.
இந்தநிலையில் நேற்று ஓவியா தனது எக்ஸ் பதிவில், ஹே விஜய் நடிகை திரிஷாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு அவர் வீட்டிற்கு செல்கிறீர்கள், நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு தனி விமானத்தில் சென்றீர்கள். ஆனால், கரூருக்கு போக மட்டும் தயங்கினீர்கள். அப்படியானால், கரூர் மக்களை விட, திரிஷா, கீர்த்தி சுரேஷ் மீது உங்களுக்கு அதிக பாசம் இருக்கிறதா? ஓவியாஎன கேள்வி எழுப்பி உள்ளார். இந்த பதிவு தமிழ் திரை உலகில் புயலைக் கிளப்பியுள்ளது.
இதற்கிடையில், நடிகை ஓவியா பெயரை போலியாக பயன்படுத்தி சிலர், சமூக வலைதளங்களில் விஜயை கடுமையாக விமர்சித்து வருவதாக த.வெ.க.,வினர் கூறுகின்றனர்.





















