கதறி அழுத முரளி நாயக் தந்தை“அழாதீங்க அப்பா நான் இருக்கேன்” கட்டி பிடித்து ஆறுதல் சொன்ன பவன் Murali Naik Funeral
முரளி நாயக் என் ஒரே மகன், அவர் நாட்டிற்காகப் போராடி இறந்தார் என்று முரளி நாயக்கின் பெற்றோர் மகனின் இறுதி சடங்கிற்கு வந்த பவன் கல்யாணை கட்டி கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க செய்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இந்தியா - மற்றும் பாகிஸ்தனுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்தார் ஆந்திராவைச் சேர்ந்த 25 வயது ராணுவ வீரர் முரளி நாயக்கின் இறுதிச் சடங்கில் துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் மத்திய அமைச்சர் நாரா லோகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஊர்வலப் பாதையில் நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று முரளி நாயக்கிற்கு அஞ்சலி செலுத்தினர். துணை முதல்வர் பவன் கல்யாண், அமைச்சர்கள் நர லோகேஷ், சத்ய குமார் ஆகியோர் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டு ராணுவ மற்றும் அரசு மரியாதையுடன் நிகழ்த்தப்பட உள்ளனர்.
முரளி நாயக்கின் இறுதிச் சடங்கில் ஆந்திரப் துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்து கொண்டார். மகனை இழந்த குடுபத்திற்கு ₹25 லட்சத்தை தனிப்பட்ட முறையில் வழங்குவதாக அறிவித்தார். முரளி நாயக்கின் சிறுவயது முதலே நடிகர் மற்றும் தலைவர் பவன் கல்யாணின் தீவிர ரசிகர் என்றும், இந்த தருணம் அவருக்கு மிகவும் கடினமாக இருக்கு என்றும் முரளி நாயக்கின் தந்தை கூறி கதறி அழுதார். பவன் கல்யாண் கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். நாயக்கின் பெற்றோர்ரை தொலைபேசியில் அழைத்து முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு ஆறுதல் கூறினார்.





















