Mamata Banerjee vs Modi : மம்தாவிடம் SURRENDER ஆன 3 பாஜக எம்பி-க்கள்? கலக்கத்தில் மோடி
தங்களுடன் 3 பாஜக எம்.பி-க்கள் தொடர்பில் இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இந்நிலையில் மோடியின் கண்ணில் விரலை விட்டு ஆட்ட தொடங்கியுள்ளார் மம்தா..
அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில், அனைத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகளும் மேற்கு வங்கத்தில் பாஜக கொடி பறக்கும்.. மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் பல தொகுதிகளில் தோற்கும் என வந்தது.. ஆனால் அனைத்து தேர்தல் கணிப்புகளையும் பொய்யாக்கி, மேற்குவங்கத்தை தனதாக்கியுள்ளார் மம்தா.
29 தொகுதிகளை திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றி உள்ள நிலையில், பாஜக வெறும் 12 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.
இந்நிலையில் தான் பெருன்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியாமல், நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடுவை இறுக்கமாக பிடித்துக்கொண்டு 3வது முறையாக பிரதமராகும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் மோடி.
இப்படி பட்ட சூழலில் மேற்குவங்கத்தின் 3 பாஜக எம்.பிகள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
ஏற்கனவே நிதிஷும், சந்திரபாபு நாயுடுவும் எப்போது காலை வாரி விடுவார்கள் என்று தெரியாமல், வழக்கமான பொலிவின்றி காணப்படுகிறார் மோடி. ஏனென்றால் அவர்களின் கடந்த கால வரலாறு அப்படி. இப்படி இருக்கையில், பாஜகவினர் சிலரும் காலை வாரி விடலாம் என்று வரும் தகவல்கள் பாஜக மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனினும் பாஜக தரப்பில் இது பொய்யான தகவல் என இந்த குற்றச்சாட்டு மறுக்கப்பட்டுள்ளது குறிப்படத்தக்கது.