மேலும் அறிய

மணிக்கு 115 கிமீ வேகம்..அசத்தலான அப்டேட்டுகளுடன் களம் இறங்கியது Ola Electric Scooter | Ola S1, S1Pro

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவின் 75 வது சுதந்திர தினமான இன்று வெளியிடப்பட்டது.

அதன்படி எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ என இரண்டு வகையில் உள்ளது. தமிழ்நாட்டில் எஸ் 1 ஸ்கூட்டரின் விலை 99,999 ரூபாயாக உள்ளது. அதேபோல் எஸ் 1 ப்ரோ வகை ஸ்கூட்டரின் விலை 1,29,999 ரூபாய் ஆக உள்ளது. ஸ்கூட்டரின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன? எஸ் 1 ஸ்கூட்டரை சார்ஜ் செய்ய 6 மணி நேரம் தேவைப்படும்.

இந்த வகை பேக் முழு சார்ஜில் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. மேலும் இந்த எஸ் 1 ஸ்கூட்டர் 0-40 கிலோ மீட்டர் வேகத்திற்கு 3.6 விநாடிகளில் செல்லும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஓலா எஸ் 1 ப்ரோ ஸ்கூட்டர் எஸ் 1 ஸ்கூட்டரைவிட 30 ஆயிரம் விலை அதிகமாக உள்ளது. இந்த வகை ஸ்கூட்டரின் டாப் ஸ்பீட் மணிக்கு 115 கிலோ மீட்டராக உள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டர் 0-40 கிலோமீட்டர் வேகத்தை 3 விநாடிகளில் எட்டும் திறன் கொண்டது. மேலும் இந்த ஸ்கூட்டரில் வாயிஸ் அசிஸ்டி மற்றும் ஸ்பீக்கர் ஆகியவை உள்ளன. இந்த ஸ்கூட்டரில் டிஜிட்டல் டிஸ்பிளேவில் எவ்வளவு கார்பன் வெளியிடுவதை இந்த வண்டி மிச்சப்படுத்தியிருக்கிறது என்பதும் தெரியும். அத்துடன் ஓட்டுநர் இருப்பதை சென்சார் மூலம் அறிந்து இந்த வண்டி தானாகவே அன்லாக் செய்யும். மலைப்பகுதியில் எளிமையாக ஓட்டும் வசதி, ரிவர்ஸ் அசிஸ்டி ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளது. இதில் 7 இன்ச் டிஸ்பிளே மற்றும் 3 ஜிபி ரேம் ஆக்டாகோர் பிராசஸர் ஆகியவையும் உள்ளது.

ஓலா நிறுவனம் விநாடிக்கு 2 ஸ்கூட்டரை தயாரிக்கும் திறனை தற்போது பெற்றுள்ளது. இதனால் விரைவில் 400 நகரங்களில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வர உள்ளது. மேலும் ஓலா ஸ்கூட்டருக்கு தேவையான சார்ஜிங் இடங்களும் 100 நகரங்களில் விரைவில் அமைக்கப்பட உள்ளது. இந்த வண்டியை ஆன்லைன் முறையில் புக் செய்பவர்களுக்கு வீட்டிற்கே வந்து வண்டியை தரவும் ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஓலாவின் எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ வகை எலக்டிரிக் வண்டிகள் பஜாஜ் நிறுவனத்தின் சேதக், ஏதர் 450 எக்ஸ், சிம்பிள் ஒன் மற்றும் டிவிஎஸ் ஐ-கியூப் ஆகிய வண்டிகளுக்கு போட்டியாக அமைந்துள்ளது. முன்னதாக கடந்த ஜூலை 15ஆம் தேதி வெறும் 499 ரூபாய்க்கு மின்சார ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை ஓலா தொடங்கியது. முதல் 24 மணி நேரத்திற்குள் நிறுவனம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் டீசரில், இ-ஸ்கூட்டர் பிரிவில் சிறந்த அம்சங்களை வழங்கும் என்று சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Car Price: லிஸ்டில் இணைந்த டாடா, ஹுண்டாய்..! கார்களுக்கான விலை உயர்வு அறிவிப்பு - எந்த மாடலுக்கு எவ்வளவு?
லிஸ்டில் இணைந்த டாடா, ஹுண்டாய்..! கார்களுக்கான விலை உயர்வு அறிவிப்பு - எந்த மாடலுக்கு எவ்வளவு?
இன்று அறிமுகமாகிறது Toyota Innova Hycross Facelift கார்..! இந்த 5 விஷயம்தான் ஹைலைட்..!
இன்று அறிமுகமாகிறது Toyota Innova Hycross Facelift கார்..! இந்த 5 விஷயம்தான் ஹைலைட்..!
Hyundai Ioniq P EV: மலிவு விலையில் புதிய மின்சார எஸ்யுவி..! எப்போது வரும்? விலை அப்படி? அம்சங்கள் ஈர்க்குமா?
மலிவு விலையில் புதிய மின்சார எஸ்யுவி..! எப்போது வரும்? விலை அப்படி? அம்சங்கள் ஈர்க்குமா?
VinFast VF5: 370KM ரேஞ்ச், 10 இன்ச் டச்ஸ்க்ரீன் - மிடில் க்ளாஸ் ஃபேமிலிக்கான பட்ஜெட் மின்சார கார் - முழு விவரம்
370KM ரேஞ்ச், 10 இன்ச் டச்ஸ்க்ரீன் - மிடில் க்ளாஸ் ஃபேமிலிக்கான பட்ஜெட் மின்சார கார் - முழு விவரம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Investment: 200 நாட்களில் 190 ஒப்பந்தங்கள்..! ரூ.1.73 லட்சம் கோடி, 1.98 லட்சம் வேலைவாய்ப்புகள் - தவெக அரசு பெருமிதம்
200 நாட்களில் 190 ஒப்பந்தங்கள்..! ரூ.1.73 லட்சம் கோடி, 1.98 லட்சம் வேலைவாய்ப்புகள் - தவெக அரசு பெருமிதம்
Gold Rate Today: காலையிலேயே சர்ப்ரைஸ்.. ஒரே நாளில் ரூ.2,360 குறைந்த தங்கம்... கிலோவுக்கு ரூ.10,000 சரிந்த வெள்ளி!
Gold Rate Today: காலையிலேயே சர்ப்ரைஸ்.. ஒரே நாளில் ரூ.2,360 குறைந்த தங்கம்... கிலோவுக்கு ரூ.10,000 சரிந்த வெள்ளி!
Manickam Tagore: ”ஐ.டி. விங் போல.. RSS அஜெண்டாவ பேசிக்குட்டு” பாஜகவை போட்டு பொளந்த மாணிக்கம் தாகூர்
”ஐ.டி. விங் போல.. RSS அஜெண்டாவ பேசிக்குட்டு” பாஜகவை போட்டு பொளந்த மாணிக்கம் தாகூர்
TN Weather News: 18 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
18 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN Govt: 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.58,000 வரை ஊதியம்..! தேர்வே இல்லை - ஊராட்சி செயலர் வேலை முழு விவரம்
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.58,000 வரை ஊதியம்..! தேர்வே இல்லை - ஊராட்சி செயலர் வேலை முழு விவரம்
IPL 2027 Mini Auction: தெறிக்குது சியா என்ட்ரி... மினி ஏலத்தில் பங்கேற்கும் சேவாக் வாரிசு! விலை எவ்ளோ?
IPL 2027 Mini Auction: தெறிக்குது சியா என்ட்ரி... மினி ஏலத்தில் பங்கேற்கும் சேவாக் வாரிசு! விலை எவ்ளோ?
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
இன்று அறிமுகமாகிறது Toyota Innova Hycross Facelift கார்..! இந்த 5 விஷயம்தான் ஹைலைட்..!
இன்று அறிமுகமாகிறது Toyota Innova Hycross Facelift கார்..! இந்த 5 விஷயம்தான் ஹைலைட்..!
Embed widget