மேலும் அறிய

Mahindra Upcoming EV: BE.07 மாடலுக்கு என்ன ஆச்சு? மஹிந்த்ராவிற்கு தடங்கல் - மின்சார கார் எப்படி? என்ன? இருக்கும்?

Mahindra Upcoming BE.07 EV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது அடுத்த புதிய மின்சார கார் மாடலை 2027ம் ஆண்டு அறிமுகப்படுத்த மஹிந்த்ரா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Mahindra Upcoming BE.07 EV: மஹிந்த்ராவின் புதிய மின்சார கார் மாடலானது, BE.07 கான்செப்டை அடிப்படையாக கொண்டு உற்பத்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த்ராவின் புதிய மின்சார கார்:

மஹிந்த்ராவின் அடுத்த புதிய மின்சார காரானது, 2027ம் ஆண்டில் தான் சந்தைப்படுத்தப்படும் என அண்மையில் ப்ராண்ட் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டது. இது கடந்த 2022ம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட BE.07 கான்செப்டை அடிப்படையாக கொண்டு உற்பத்தி செய்யப்பட உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. B07 என்ற கோட்நேமை கொண்ட காரானது அக்டோபர் 2026 வாக்கில் அறிமுகமாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த வெளியீடு அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மஹிந்த்ராவின் BE.07 EV என்ன எதிர்பார்க்கலாம்?

ப்ராண்டின் BE சீரிஸில் இரண்டாவது கார் மாடலாகவும், நேரடி மின்சார கார் மாடலாக உற்பத்தி செய்யப்படும் நான்காவது மாடலாகவும் BE.07 உருப்பெறுகிறது. ஏற்கனவே ப்ராண்ட் தரப்பில் XEV 9e, BE6 மற்றும் XEV 9S ஆகிய மாடல்கள் நேரடி மின்சார கார்களாக மஹிந்த்ராவால் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய காரின் உற்பத்தி மாடலானது வித்தியாசமான பெயரை கொண்டுவரலாம். அதேநேரம், இந்த காரின் முன்னோட்டமானது பெரிய, 5 சீட்டர் அமைப்பை கொண்ட 4.6 மீட்டர் நீளத்திலான, வழக்கமான எஸ்யுவி கட்டமைப்பை கொண்டிருக்கும் என காட்டியது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் BE6 கார் மாடலுக்கு மேலே புதிய கார் நிலைநிறுத்தப்பட உள்ளதாம். உள்ளூர் சந்தையில் டாடா ஹாரியர் மற்றும் வின்ஃபாஸ்ட் VF7 ஆகிய கார் மாடல்களுடன் போட்டியிட உள்ளதாம்.


Mahindra Upcoming EV: BE.07 மாடலுக்கு என்ன ஆச்சு? மஹிந்த்ராவிற்கு தடங்கல் - மின்சார கார் எப்படி? என்ன? இருக்கும்?

மஹிந்த்ராவின் BE.07 EV - டிசைன் விவரங்கள்

ப்ராண்டின் மின்சார கார்கள் உற்பத்தி செய்யப்படும் அதே இங்லோ ப்ளாட்ஃபார்மில் தான், BE.07 கார் மாடலும் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதில் இடம்பெறக்கூடிய பேட்டரி ஆப்ஷன்கள் 60 முதல் 80KWh ரேஞ்சில் அடங்கலாம். தோற்ற அடிப்படையில் மஹிந்த்ராவின் தற்போதைய பல மின்சார கார்களின் தாக்கத்தை BE.07 பெறக்கூடும் என கூறப்படுகிறது. ஆனால், ஒட்டுமொத்த தோற்றமானது XEV 9e, BE6 மாடல்களை காட்டிலும் கூர்மையானதாக இருக்கும் என கூறப்படுகிறது. உட்புறத்தில் மூன்று திரைகளை உள்ளடக்கிய ஏராளமான தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெறலாம். அதேநேரம், முக்கியமான உட்புற அம்சங்களை கையாள பிஷிகல் பட்டன்களை பின்பற்ற வேண்டும் என்ற வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை மஹிந்த்ரா பரிசீலிக்கும் என கூறப்படுகிறது.


Mahindra Upcoming EV: BE.07 மாடலுக்கு என்ன ஆச்சு? மஹிந்த்ராவிற்கு தடங்கல் - மின்சார கார் எப்படி? என்ன? இருக்கும்?

மஹிந்த்ராவின் BE.07 EV - விற்பனை அதிகரிக்கும்

தற்போதுள்ள 3 நேரடி மின்சார கார் மாடல்களை தாண்டி, புதிய B07 மாடலானது மிகப்பெரிய அளவில் ப்ராண்டின் விற்பனையை ஊக்குவிக்கும் என மஹிந்த்ரா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் ஒவ்வொரு மாதமும் சுமார் 4 ஆயிரம் மின்சார யூனிட்களை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அடுத்த ஓராண்டில் இந்த எண்ணிக்கையை 6 ஆயிரம் முதல் 7 ஆயிரமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. அதேநேரம், அண்மைக்காலமாகம் மின்சார கார்களின் வளர்ச்சி என்பது சற்றே குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மஹிந்த்ராவின் BE.07 EV - ரேஞ்ச், விலை

புதிய மின்சார காரின் தொடக்க விலையானது 25 முதல் 30 லட்சம் ரூபாய் வரையில் நிர்ணயிக்கப்படலாம். 60 முதல் 80KWh பேட்டரி பேக் ஆப்ஷனை கொண்டு 500 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ரியர் வீல் ட்ரைவ் செட்-அப்பை கொண்டிருப்பதோடு, ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 30 நிமிடங்களில் 10 முதல் 80 சதவிகித சார்ஜிங்கை எட்டக்கூடுமாம். 


Mahindra Upcoming EV: BE.07 மாடலுக்கு என்ன ஆச்சு? மஹிந்த்ராவிற்கு தடங்கல் - மின்சார கார் எப்படி? என்ன? இருக்கும்?

2026ல் மஹிந்த்ராவின் ப்ளான் என்ன?

2025 ஆம் ஆண்டின் இறுதியில் XEV 9S ஐ அறிமுகப்படுத்திய மஹிந்திரா, ஜனவரியில் XUV 3XO EV மாடலை சந்தைப்படுத்தியது. தற்போதைய சூழலில் 2026 ஆம் ஆண்டில் ப்ராண்ட் சார்பில் புதியதாக எந்தவொரு மின்சார காரும் வெளியாக வாய்ப்பில்லை. அதேநேரம், இன்ஜின் அடிப்படையிலான இரண்டு கார்களின் அப்க்ரேடட் வெர்ஷன் சந்தைப்படுத்தப்பட உள்ளது. அதில் ஒன்று Scorpio N க்கான முதல் மிட்-சைக்கிள் ஃபேஸ்லிஃப்ட் ஆகும். தொடர்ந்து தார் மாடலும் புதுப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் தற்போது வரை இல்லை.

Frequently Asked Questions

மஹிந்திராவின் புதிய BE.07 EV எப்போது சந்தைக்கு வரும்?

மஹிந்திராவின் புதிய BE.07 EV 2027 இல் சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2022 இல் காட்சிப்படுத்தப்பட்ட BE.07 கான்செப்டை அடிப்படையாகக் கொண்டது.

BE.07 EV இன் சில முக்கிய அம்சங்கள் என்ன?

BE.07 EV ஆனது 5 சீட்டர் அமைப்பைக் கொண்ட 4.6 மீட்டர் நீள எஸ்யூவி ஆக இருக்கும். இது 60 முதல் 80 kWh வரையிலான பேட்டரி ஆப்ஷன்களுடன், மூன்று திரைகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் வரும்.

BE.07 EV எந்த மாடல்களுடன் போட்டியிடும்?

உள்ளூர் சந்தையில், BE.07 EV ஆனது டாடா ஹாரியர் மற்றும் வின்ஃபாஸ்ட் VF7 போன்ற கார்களுடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026 இல் மஹிந்திராவின் மின்சார வாகன திட்டங்கள் என்ன?

2026 இல் புதிய மின்சார கார் எதுவும் வெளியாகாது. இருப்பினும், Scorpio N மற்றும் Thar மாடல்களின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன்கள் வெளியிடப்படலாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Maruti 7 Seater: 32KM மைலேஜில் புது 7 சீட்டரை களமிறக்கும் மாருதி? பட்ஜெட்டில் குடும்பங்களுக்கான கார் - முழு விவரம்
32KM மைலேஜில் புது 7 சீட்டரை களமிறக்கும் மாருதி? பட்ஜெட்டில் குடும்பங்களுக்கான கார் - முழு விவரம்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget