ஒரே குழுவில் 512 உறுப்பினர்கள்.. அப்டேட்டுகளை அள்ளி அள்ளி வீசும் Whatsapp..
வாட்ஸ் அப் குறித்த பல புதிய அறிவிப்புகளை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனால் பயனர்களின் வசதிக்காக வாட்ஸ்-அப்-பில் தற்போது வெளியாகியுள்ள அப்டேட் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகம் முழுவதும் 200 மில்லியன் மக்களுக்கும் அதிகமானோர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதன் ரேட்டிங் 5க்கு 4.2ஆக உள்ளது. சமீப காலங்களில் குறிப்பாக வாட்ஸ் போன்ற சமூக வலைதளத்தினால் மக்கள் தங்களை மிகவும் அருகில் இருப்பதை போன்ற உண்ர்வோடு இருக்கின்றனர். இப்படியான இந்த வாட்ஸ் அப் சமீப காலமாகவே அப்டேட்களை அள்ளி வீசி வருகின்றது. அவ்வகையில் தற்போதும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அப்டேடினை வழங்கியுள்ளது.
வாட்ஸ் அப் குறித்த பல புதிய அறிவிப்புகளை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனால் பயனர்களின் வசதிக்காக வாட்ஸ்-அப்-பில் அவ்வப்போது பல புதிய அப்டேட்கள் வெளியாவது வழக்கம். இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள அப்டேட் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த அப்டேட் ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகிய அனைத்து விதமான மொபைல் போன் பயன்பாட்டாளர்களுக்கும் இந்த அப்டேட்கள் பொருந்தும் என மெட்டா நிறுவனத்தை சார்ந்தவர்கள் கூறியுள்ளனர்.
WhatsApp is releasing larger groups with 512 participants to everyone!
— WABetaInfo (@WABetaInfo) June 10, 2022
You can finally create and join groups with up to 512 people by using the latest versions of WhatsApp for Android, iOS, and Desktop!https://t.co/KEGmGwR3De
புதிய அப்டேட்
இந்த அறிவிப்பில் ஒரே வாட்ஸ் அப் குரூப்பில் 512 உறுப்பினர்களை சேர்க்க முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 2ஜிபி வரையிலான போட்டோ, வீடியோ போன்றவற்றையும் பகிரும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு ஒரே நேரத்தில் வாட்ஸ்-அப் வாய்ஸ் காலில் 8 பேர் மட்டுமே இணைய முடியும் என்ற நிலையில் தற்போது இனி ஒரே நேரத்தில் 32 பேர் கலந்துரையாடலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அப்டேட்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் பயனர்கள் பயன்படுத்தலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த அப்டேட் கூடிய விரைவில் அமலுக்கு வரும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்