WhatsApp : இனி யார் மெசேஜ் பண்றாங்கன்னு தெரிஞ்சிடும்; வாட்ஸ்-அப் குரூப் மெசேஜிங்கில் புதிய அப்டேட்..
WhatsApp : வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய வசதிகள் பற்றி இங்கே காண்போம்.
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. வாட்ஸப் குழுவில் தெரியாத (கான்டெக்ட் லிஸ்டில் (unknown contacts) இல்லாத நபர் மெசேஜ்) நபர் மெசேஜ் செய்யும்போது தொடர்பு எண்ணிற்கு பதிலாக ‘ பயனர் பெயர்’ டிஸ்ப்ளே செய்யும் வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
’WaBetaInfo’ வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ஆண்ட்ராய்டு 2.23.5.12 அப்டேட்டில் வாட்ஸப் குழு உரையாடலில் தெரியாத நபரிடமிருந்து மெசேஜ் வரும்போது மொபைல் எண்களுக்கு பதிலாக, பயனரின் பெயர் (Username) தெரியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய அப்டேட் மூலம் தொடர்பு எண்ணைச் சேமிக்காமல், அறியப்படாத நபர் யார் என்பதை, எளிதாகப் புரிந்துகொள்வதற்கு பயன்படுகிறது. பெரும் குழு உரையாடலில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வசதி iOS - க்கான வாட்ஸப் பீட்டாவை நிறுவிய பின், சில iOS பீட்டா சோதனையாளர்களுக்கும் இதே அம்சம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாட்ஸப் புதிதாக 21 இமோஜிகளை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் பயனாளர்கள் விரைவில் புதிய இமோஜிகளுக்கான அப்டேட்களை பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்-அப்:
சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி நிறுவனங்களிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், அதில் தொடர்ந்து பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குறுந்தகவலை பகிர்ந்து கொள்வதற்கான முதன்மை செயலியாக, வாட்ஸ்-அப் தொடர்ந்து நீடிப்பதற்கு மெடா நிறுவனம் வழங்கும், இந்த அடுத்தடுத்த அப்டேட்களும் முக்கிய காரணமாகும். அந்த வகையில்தான், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அடுத்ததாக, புதிய அப்டேட்களை வழங்க மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
வாட்ஸப் அப்டேட்களின் ரவுண்ட்-அப்:
Kept Messages வசதி
வாட்ஸப்பில் டிஸ்ஸப்பியரிங் மெசேஜ் மோட் (Disappearing messages) செயலில் இருக்கும்போது தகவல்களை குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு காணாமல் போவதை தடுக்கும் விதத்தில் கெப்ட் மெசேஜ் என்ற வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. ஆண்ட்ராய்ட்-இன் Android 2.23.4.10 வர்ஷன் அப்டேட்டில் வாட்ஸப் பீட்டா பயனர்களுக்கு மட்டும் இந்த வசதி கிடைக்கும்.
வாய்ஸ் நோட்: (Vioce Note)
ப்ப்பா.. எவ்வளவு டைப் பேசுறது. பெரிதாக மெசேஜ்களை டைப் செய்ய சிரமப்படும் பயனாளர்கள், குறிப்பிட்ட தகவலை பேசி வாய்ஸ்-நோட் ஆக ரெக்காட் செய்து அனுப்பும் அம்சம் உள்ளது. ஆனால், அந்த நீளமான வாய்ஸ் நோட்டை கேட்க விரும்பாதவர்களும் இருக்கிறார். இலலி எல்லாருக்கும் வாய்ஸ் மெசேஜ் செய்ய முடியாதில்லையா. அதோடு, ஹெட்-செட் இன்றி பொது இடங்களில் வாய்ஸ்-நோட்டை கேட்க முடியாமல் சிரமப்படுவதும், தனிப்பட்ட விவகாரங்கள் தொடர்பான வாய்ஸ் நோட்டை பொதுவெளியில் கேட்க முடியாத சூழலும் உண்டு. இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் ஒரு புதிய அப்டேட்டைத்தான் வாட்ஸ்-அப் செயலி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சம்:
வாய்ஸ் நோட்டை கேட்பதில் உள்ள சிக்கலை தீர்க்கும் வகையில், டிரான்ஸ்கிரிப்ஷன் எனும் புதிய அப்டேட்டை வாட்ஸ்-அப் செயலி வழங்க உள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட வாய்ஸ்-நோட்டை மொத்தமாகவே டெக்ஸ்ட் அதாவது எழுத்தப்பட்ட உரையாக மாற்ற முடியும் என கூறப்படுகிறது. இந்த அப்டேட் தற்போது ஆராய்ச்சியில் இருப்பதகாவும், விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாக்குமெண்ட் கேப்ஷன் (Document caption)
வாட்ஸப் பீட்டா பயனாளர்களுக்கு புதிய அப்டேட்டாக 3-KB வரை டாக்குமெண்ட்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அனுப்பும்போது, சின்னதாக கேப்சன் குறிப்பிட்டும் அனுப்பும் வசதி விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
கால் - ஷார்ட் கட்
வாட்ஸப் கால்களை எளிமையாக மாற்றும் வகையில், புதிய வசதியை அறிமுகப்படுத்த மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு, வாட்ஸ்-அப் செயலிக்குள் சென்று காண்டேக்ட்ஸ் பட்டியலை தேர்வு செய்து, அதில் குறிப்பிட்ட எண்ணை க்ளிக் செய்தால் அதை ஷார்ட்-கட் (Short Cut) ஆக மாற்றிக்கொள்ளலாம். இதன் மூலம், பயனாளர் அடிக்கடி தொடர்புகொள்ளும் நபருக்கு, எளிய முறையில் அழைப்பு மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.