ஃபாலோவர்ஸை இழப்பதாக பேஸ்புக் பயனாளர்கள் புகார்...மார்க் ஜுக்கர்பெர்குக்கே இந்த பிரச்னைதானாம்...என்னாச்சு?
கிட்டத்தட்ட 119 மில்லியன் ஃபாலோவர்களை மெட்டா நிறுவனரும் தலைமை நிர்வாக அலுவலருமான மார்க் ஜுக்கர்பெர்க் இழந்துள்ளார்.
தங்களின் பெரும்பாலான ஃபாலோவர்ஸை இழந்து வருவதாக பேஸ்புக் பயனாளர்கள் புகார் தெரிவித்து வருவது பிரச்னையாக வெடித்துள்ளது. இதற்கு காரணம் என்ன என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.
கிட்டத்தட்ட 119 மில்லியன் ஃபாலோவர்களை மெட்டா நிறுவனரும் தலைமை நிர்வாக அலுவலருமான மார்க் ஜுக்கர்பெர்க் இழந்துள்ளார். இதன் காரணமாக, அவரை பின்தொடர்பவரின் எண்ணிக்கை 10,000க்கும் குறைவாக குறைந்துள்ளது.
@facebook I lost around 15,000 Plus followers all of a sudden. What is happening? I see number of friends from the list is also dropping (without hundreds unfriended me intentionally😇). @DishaShaikh7 has same experience to share. #Facebook
— Alka Dhupkar (@Alka_Dhupkar) October 12, 2022
இது தொடர்பாக நாடு கடத்தப்பட்டுள்ள வங்கதேச எழுத்தாளர் தஸ்லிம் நஸ்ரின் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஃபேஸ்புக் ஒரு சுனாமியை உருவாக்கியது. அது என்னை கிட்டத்தட்ட 900,000 பின்தொடர்பவர்களை இழக்கு செய்து 9000 பேரை மட்டுமே கரையில் விட்டுச் சென்றது. ஃபேஸ்புக்கின் நகைச்சுவை எனக்கு மிகவும் பிடிக்கும்" என பதிவிட்டுள்ளார்.
இப்பிரச்னை தொடர்பாக மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளரை தொடர்பு கொண்டு பேசுகையில், "பேஸ்புக் சுயவிவரங்களில் சிலர் சீரற்ற பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை எதிர்கொள்கின்றனர் என்பதை நாங்கள் அறிவோம். முடிந்தவரை விரைவாக விஷயங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர நாங்கள் பணியாற்றி வருகிறோம். சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்றார்.
பிரபல ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் தனது பெயரை மெட்டா என மாற்றியது. தற்போது அந்த நிறுவனம் வெர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது. அதன் அடிப்படையில் மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், நிறுவனத்தின் அடுத்த பெரிய VR ஹெட்செட்டிற்கான வெளியீட்டு விவரங்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்களை பகிர்ந்திருக்கிறார்.
தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்டில் அளித்த பேட்டியில், இந்த மாதம் நடைபெறும் மெட்டாவின் கனெக்ட் மாநாட்டில் இந்த புதிய வி ஆர் ஹெட்செட்டை அறிமுகம் செய்யவுள்ளதாக மார்க் தெரிவித்துள்ளார்.
முகபாவனைகளைக் கண்காணிக்கும் திறன் மற்றும் அவற்றை பயனாளர்களின் மெய்நிகர் அவதாரத்தில் (virtual avatar ) பிரதிபலிக்கும் திறன். ஆகியவற்றுடன் வரவுள்ளது. மக்களை இணைக்கும் தொழில்நுட்பத்தின் இறுதி வெளிப்பாடாக VR ஐப் பயன்படுத்துவதில் தனது கவனம் உள்ளது உதாரணமாக VR -க்குள் கண் தொடர்புகளை எளிதாக்குவதன் மூலம் கணெக்ட் செய்துக்கொள்ள முடியும் என மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.