மேலும் அறிய

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!

புதிய போஸ்ட்பெய்ட் ஜியோ ஃபைபர் திட்டத்தை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

செல்போன் இண்டர்நெட் பயன்பாட்டில் ஒரு புரட்சியையே செய்தது ஜியோ தான். மாதத்திற்கு ஒரு ஜிபி, 2 ஜிபி என ஓட்டிக்கொண்டு இருந்த நேரத்தில் ஒருநாளைக்கு ஒரு ஜிபி, 2 ஜிபி என இணையசேவையை அள்ளி வீசியது ஜியோ. தொடக்கத்தில் இலவசமாக சிம் கார்டுகளும் கொடுக்கப்பட்டன. ஜியோவின் அதிரடி அறிவிப்பால் அதிர்ந்த ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களும் ஜியோவுக்கு ஏற்ப இண்டர்நெட் கொடுக்கத் தொடங்கின. இப்படி பல அதிரடிகளை உண்டாக்கிய ஜியோ தன்னுடைய அடுத்த இலக்கை தொடங்கியுள்ளது.

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!

4k வசதிகொண்ட செட்டாப் பாக்ஸுடன் போஸ்ட்பெய்ட் ஜியோ ஃபைபர் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் மாதத்திற்கு ரூ.399க்கு கிடைக்கிறது. மாதமாதம் பணம் செலுத்த வேண்டும் என்ற திட்டம் மட்டுமல்ல, ஒரு வருடம் அல்லது 6 மாதங்கள் எனவும் பேக்கேஜ்களை கொடுத்துள்ளது ஜியோ. உடன் கொடுக்கப்படும் 4k செட்டாப்பாக்ஸுக்கு பணம் செலுத்த தேவையில்லை. ஆனால் ரூ.1000 முன்பணமாக கொடுக்கப்பட வேண்டும்.

நீங்கள் ரூ.999க்கு அதிகமான பேக்கேஜ்ஜை தேர்வு செய்தால் நீங்கள் 15 ஓடிடி தளங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த ஃபைபர் போஸ்ட்பெய்ட்  நாளை முதல் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போஸ்ட்பெய்ட் பயனாளர்களுக்கு தனிப்பட்ட ப்ளான் விவரத்தை ஜியோ தெரிவிக்கவில்லை. ஆனால் மாதத்திற்கு ரூ.399முதல் ரூ.8499 வரை பேக்கேஜ்கள் உள்ளது என கூறப்பட்டுள்ளது.

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!

ரூ.399 ப்ளான்:

இந்த திட்டத்தில் இண்டர்நெட் வேகம் 30 mbps ஆக இருக்கும். அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் போன்கால் வசதி,, லேண்ட்லைன் இணைப்பு பெறலாம். இந்த ப்ளானில் ஓடிடி தளங்கள் தொடர்பான இலவசங்கள் இல்லை.

ரூ.699ப்ளான்:

இந்த ப்ளானிலும் அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் கால்வசதி, லேண்ட்லைன் உண்டு. இண்டர்நெட் வேகம் 100mbps. இதிலும்  ஓடிடி தளங்கள் தொடர்பான இலவசங்கள் இல்லை .ரூ.399 ப்ளானுக்கும் இந்த ப்ளானுக்கும் இடையேயான வித்தியாசம் இணையவேகம் மட்டுமே. 

ரூ.999 ப்ளான்:

உங்களுக்கு 14 வகையான ஓடிடி தளங்களை அள்ளி கொடுக்கும் ப்ளான் தான் இந்த ரூ.999 ப்ளான். இணையவேகம் 150mbps.வழக்கம்போல் அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் போன்கால் வசதி,, லேண்ட்லைன் இணைப்பு உண்டு.

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!

ரூ.1499 மற்றும் ரூ.2499:

இண்டர்நெட் ஸ்பீடு இன்னும் அதிகமாக வேண்டுமென்றால் ரூ.1499 அல்லது ரூ.2499 பக்கம் செல்லுங்கள். ரூ.1499 ப்ளானில் இண்டர்நெட் வேகம் 300mbps.  ரூ.2499 ப்ளானில் இண்டர்நெட் வேகம் 500mbps.

ரூ.3999 மற்றும் ரூ.8499

அதிகமான இண்டர்நெட் வேகம், அதிகமான டேட்டாக்கள் வேண்டுமென்றா ரூ.3999 மற்றும் ரூ.8499 ப்ளானை தேர்வு செய்யலாம். இரண்டு ப்ளானிலும் இண்டர்நெட் வேகம் 1 gbps. இரண்டு ப்ளான்களுக்கும் இடையே  டேட்டா அளவு வேறுபடுகிறது. ரூ.3999 ப்ளானில் 3300 ஜிபி பயன்படுத்தலாம். ரூ.8499 ப்ளானில் 6600 ஜிபி பயன்படுத்தலாம்.

சியோமி ஸ்மார்ட் வாட்ச்; இந்தியாவில் விரைவில் அறிமுகம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?

TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!

Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்...  கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு

CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Survey On TVK : ‘’விஜய் தான் பெரிய MINUS’’.. DMK எடுத்த சீக்ரெட் சர்வே! வெளியான மெகா ட்விஸ்ட்TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்...  கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்... கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Seeman: விமானத்தில் சிக்கிய சீமான்; கனமழையால் தரையிறங்க முடியாமல் விமானம் தவிப்பு.!

Poondi Dam: சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!

Embed widget