பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் டிவி! கலக்கும் Redmi நிறுவனம்!
டோப்லி ஆடியோ 5.1 வசதியுடன் 20W ஸ்பீக்கர் போன்ற பல வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
பிரபல ரெட்மி நிறுவனம் தனது Redmi Smart TV 32 மற்றும் Smart TV 43 ஆகிய இரண்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது. பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி பயனாளர்களை கவர்ந்த ரெட்மி தனது புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட் டிவிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 32 மற்றும் 42 என்பது டிவியின் அளவினை குறிக்கிறது.
Redmi Smart TV 32 மற்றும் Redmi Smart TV 43 வசதிகள்:
Redmi Smart TV 32 மற்றும் Redmi Smart TV 43 ஆகிய இரண்டு ஸ்மார்ட் டிவிகளுமே ஆண்ட்ராய்ட் 11 இயங்குதளத்தை கொண்டுள்ளன.மேலும் IMDb integration வசதி Universal Search, Kids Mode மற்றும் Language Universe போன்ற ஏராளமான வசதிகள் கொடுக்கப்படுள்ளன. சியோமி நிறுவனத்தின் விவோ புகைப்பட என்ஜின் (Vivid Picture Engine ) வசதி கொடுக்கப்பட்டுள்ளது. டோப்லி ஆடியோ 5.1 வசதியுடன் 20W ஸ்பீக்கர் கொடுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் விலை டிவியில் இது பிளஸாக பார்க்கப்படுகிறது. மேலும் குரோம்காஸ்ட் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் வசதியும் இன்பில்டாக கொடுக்கப்பட்டுள்ளது. கூகுள் அசிஸ்டண்ட் வசதியானது டிவிக்கு வழங்கப்படும் ரிமோட்டிலும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் டிவியின் சத்தத்தை குறைக்க உதவும் பொத்தானை இரண்டு முறை கிளிக் செய்தால் மியூட் செய்யும் ஷார்ட் கட் கீ வதியும் ரிமோட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. 5 வினாடிகளில் டிவியை ஆன் செய்வதற்கான quick wake வசதியுடன் அறிமுகமாகியுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவிகள். இது தவிற டூயல் பேண்ட் wifi வசதி, ப்ளூடூத் வசதி, கேம் விளையாடுவதற்கு ஏற்ற மாதிரியான latency rate வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு HDMI போர்ட், இரண்டு USB போர்ட் , ஆடியோ மற்றும் வீடியோவிற்கான போர்ட் , 3.5mm headphone jack போர்ட் , ஈதர்நெட் மற்றும் ஆண்டனா போர்ட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது
விலை :
விலையை பொருத்தமட்டில் இந்தியாவில் ரெட்மி ஸ்மார்ட் டிவி( Redmi Smart TV ) 32 விலை ரூ. 15,999, ரெட்மி ஸ்மார்ட் டிவி 43 (Redmi Smart TV 43_ விலை ரூ. 25,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்களை அமேசான், Mi.com, Mi ஹோம் ஸ்டோர்களில் பெற்றுக்கொள்ள முடியும். இதன் விற்பனை தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்கு வரலாம் என எதிர்பாக்கப்படுகிறது. மேலும் விழாக்கால சலுகைகளும் இடம் பெறும் என்பதால், குறிப்பிட்ட விலையை விட விலை சலுகைகளையும் பயனாளர்கள் எதிர்பார்க்கலாம் என தெரிகிறது.