PUBG Remake | 'சிக்கன் டின்னரை கொண்டாடலாம்' - எதிர்பார்ப்புகளை எகிறவைக்கும் பப்ஜியின் ரீமேக்!

"BATTLE GROUND INDIA” ஜூன் மாதம் 8ம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ரிலீஸ் தேதி குறித்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. 

FOLLOW US: 

இந்தியாவில் ஓஹோவென கொடிகட்டிப்பறந்த பப்ஜி திடீரென தடை செய்யப்பட்டது. இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்த பப்ஜி ரசிகர்களுக்கு இனிப்புச் செய்தியாய் வந்தது பப்ஜியின் ரீமேக். பப்ஜி விளையாட்டின், இந்திய பதிப்பின் பெயரை "BATTLE GROUND INDIA” என அந்நிறுவனம் அறிமுகம் செய்தது . இந்த புதிய பெயருடன் முன்பதிவை தொடங்கியது பப்ஜி.  Battlegrounds Mobile India என்ற பெயரில் தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் களம் இறங்கியுள்ளது. இதுவரை ரிலீஸ் தேதி எப்போது என அறிவிக்கப்படாத நிலையில் புதிய அறிவிப்புகள், பரிசுகள், டீசர்கள் என களைகட்டியுள்ளது சோஷியல் மீடியா. இந்த நிலையில் "BATTLE GROUND INDIA” ஜூன் மாதம் 8ம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ரிலீஸ் தேதி குறித்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. PUBG Remake |  'சிக்கன் டின்னரை கொண்டாடலாம்' - எதிர்பார்ப்புகளை  எகிறவைக்கும் பப்ஜியின் ரீமேக்!

இந்நிலையில் 'கிட்டத்தட்ட இதுதான் நேரம்' என பேட்டில் கிரவுண்ட் கேம் குறித்து அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து ட்வீட் செய்துள்ள அந்நிறுவனம், ''கிட்டத்தட்ட இதுதான் நேரம். நினைவுகளை மீண்டும் கட்டியெழுப்பும் நேரம். உங்கள் நண்பர்களுடன் விளையாண்டு சிக்கன் டின்னரை கொண்டாடலாம்'' எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த தகவலை தெரிவித்திருந்தாலும் ரிலீஸ் தேதி மட்டும் அறிவிக்கப்படவில்லை. முன்பதிவு கடந்த மாதம் தொடங்கிய நிலையில் சரியாய ஒருமாதம் கழித்து அதாவது வரும் 18ம் தேதி பப்ஜி ரிலீஸாக வாய்ப்புள்ளதாகவே கணிக்கப்பட்டது. ஆனால் பேட்டில் கிரவுண்ட் நிறுவனத்தின் சமீபத்திய ட்வீட் சீக்கிரமே கேம் ரிலீஸ் ஆகலாம் என்ற எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது.
>> ''ஹாய்.. எப்டி இருக்கீங்க? ஜி பே இருக்கா?'' - பேஸ்புக்கில் சுற்றும் மோசடி கும்பல்!
முன்னதாக, சீனா, செயலிகள் மூலமாக  இந்தியாவை உளவு பார்ப்பதாக கூறி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பப்ஜி, டிக்டாக் உள்ளிட்ட சீனாவுடன் தொடர்புடைய செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதில் முக்கியமானது பப்ஜி. பல்வேறு விமர்சனங்களுக்கு நடுவே கொடிகட்டிப்பறந்த பப்ஜி ஒரே நாளின் காணாமல் போனது. அதன்பின் பப்ஜியின் இடத்தைப் பிடிக்க பல கேம்கள் போட்டிப்போட்டன. CALL OF DUTY, FAUG-G  என நிறைய மொபைல் கேம் வந்தது. ஆனால் பயனில்லை . இந்நிலையில் தான் பப்ஜியின் ரீமேக்கான "BATTLE GROUND INDIA” இந்தியாவில் வெளியாகும் என தகவல் வெளியானது. PUBG Remake |  'சிக்கன் டின்னரை கொண்டாடலாம்' - எதிர்பார்ப்புகளை  எகிறவைக்கும் பப்ஜியின் ரீமேக்!

எதிர்வரும் புதிய கேம், இந்தியாவுக்கான பிரத்யேக தயாரிப்பாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பயனர்களையும், இந்திய சந்தையையும் கருத்தில் கொண்டு முழுக்க முழுக்க இந்தியாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆன்லைன் விளையாட்டு என்றாலும் இந்திய எல்லையைத் தாண்டி யாருடனும் சேர்ந்து நாம் விளையாட முடியாது. முன்பு உலகளவில் யார் கூட வேண்டுமானாலும் இணைந்து விளையாடும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்தமுறை பப்ஜி இந்தியாவுக்குள் மட்டுமே விளையாட முடியும். விளையாட்டில் எல்லை தாண்டி கூட்டணி வைக்க முடியாது எனக் கூறப்படுகிறது.
>> Centre on Social Media அதையெல்லாம் நீக்குங்க.. சமூக ஊடகங்களுக்கு 6 ஆயிரம் உத்தரவுகள்!
 
Tags: PUBG PUBG Mobile india PUBG release Battlegrounds

தொடர்புடைய செய்திகள்

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!

Oneplus Nord CE 5G Sale | ஒன்பிளஸ் நார்டு: இந்தியாவில் இன்று முதல் விற்பனை!

Oneplus Nord CE 5G Sale | ஒன்பிளஸ் நார்டு: இந்தியாவில் இன்று முதல் விற்பனை!

Twitter | 'என்னதான் சொல்றீங்க?' நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு ஆஜராக ட்விட்டருக்கு சம்மன்!

Twitter | 'என்னதான் சொல்றீங்க?' நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு ஆஜராக ட்விட்டருக்கு சம்மன்!

Xiaomi MI Watch Launch | சியோமி ஸ்மார்ட் வாட்ச்; இந்தியாவில் விரைவில் அறிமுகம்

Xiaomi MI Watch Launch | சியோமி ஸ்மார்ட் வாட்ச்; இந்தியாவில் விரைவில் அறிமுகம்

Airtel 5G | இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கே புரியும்.. அசரடிக்கும் 'ஏர்டெல் 5ஜி'யின் அதிவேகம்..!

Airtel 5G | இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கே புரியும்.. அசரடிக்கும் 'ஏர்டெல் 5ஜி'யின் அதிவேகம்..!

டாப் நியூஸ்

Sivashankar Baba: சென்னையில் சிவசங்கர் பாபா; சிபிசிஐடி கேள்விகளுக்கு திணறல்!

Sivashankar Baba: சென்னையில் சிவசங்கர் பாபா; சிபிசிஐடி கேள்விகளுக்கு திணறல்!

Tamil Nadu Coronavirus LIVE News : இன்று காலை தமிழ்நாடு வந்தடைந்த 60 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள்!

Tamil Nadu Coronavirus LIVE News :  இன்று காலை தமிழ்நாடு வந்தடைந்த 60 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள்!

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!