Spam Calls: ஸ்பேம் அழைப்புகள் தொல்லையா! அனைத்து Android போன்களிலும் தடுப்பது எப்படி? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
Spam Calls: இந்தியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஸ்மார்ட்போன் பயனரும் தினமும் ஸ்பேம் மற்றும் டெலிமார்க்கெட்டிங் அழைப்புகளை எதிர்கொள்கின்றனர்.

ஸ்பேம் அழைப்புகள்: இந்தியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஸ்மார்ட்போன் பயனரும் தினமும் ஸ்பேம் மற்றும் டெலிமார்க்கெட்டிங் அழைப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த அழைப்புகள் இப்போது மிகவும் புத்திசாலித்தனமாகிவிட்டன், மீண்டும் மீண்டும் எண்களை மாற்றி அழைப்பதன் மூலமும் அடையாளத்தைத் தவிர்ப்பதன் மூலம் தொடர்ந்து அழைப்புகள் வந்துக்கொண்டே இருக்கும். ஆனால் தற்பொது பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஸ்பேம் அழைப்புகளைத் தடுக்க ஒரு உள்ளமைக்கப்பட்ட அம்சம் இப்போது வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொறு நிறுவன ஸ்மார்ட் ஃபொன்களிலும் இந்த ஸ்பேம் அழைப்புகளை எவ்வாறு தடுக்கலாம் என்பதை காணலாம்.
Samsung Galaxy ஸ்மார்ட்போன்களில் ஸ்பேம் அழைப்புகளைத் தடுப்பது எப்படி?
சாம்சங் போன்களில் அழைப்புத் தடுப்பு உள்ளமைக்கப்பட்டுள்ளது:
- கால் டயலிங் ஆப்பை திறக்கவும்
- மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளிகளைத் தட்டவும்
- "எண்களைத் தடு" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- "தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளைத் தடு" என்பதை கிளிக் செய்யவும்
- "ஸ்பேம் மற்றும் மோசடி அழைப்புகளைத் தடு" என்பதை கிளிக் செய்யவும்
- நீங்கள் விரும்பினால், ஒரு எண்ணை பிளாக் செய்யலாம்.
ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் ஸ்பேம் அழைப்புகளை எவ்வாறு தடுப்பது
பெரும்பாலான OnePlus ஃபோன்கள் இப்போது Google இன் Dialer செயலியை முன்பே நிறுவியுள்ளன:
- கால் டயலரை திறக்கவும்
- மூன்று புள்ளிகளைத் தட்டவும் > அமைப்புகளுக்குச் செல்லவும்.
- "அழைப்பாளர் ஐடி & ஸ்பேம்" என்பதைத் தட்டவும்.
- "ஸ்பேம் அழைப்புகளை வடிகட்டு" விருப்பத்தை இயக்கவும்.
Oppo, Vivo, iQOO மற்றும் Realme போன்களில் ஸ்பேம் அழைப்புகளைத் தடுப்பது எப்படி?
இந்த பிராண்டுகளின் பெரும்பாலான ஃபோன்கள் கூகுள் டயலரைப் பயன்படுத்துகின்றன:
- கால் டயலரை திறக்கவும்
- அமைப்புகளுக்குச் செல்லவும்
- அழைப்பாளர் ஐடி & ஸ்பேம் விருப்பத்திற்குச் செல்லவும்.
- "ஸ்பேம் அழைப்புகளை வடிகட்டு" என்பதை இயக்கவும்.
Xiaomi மற்றும் Poco ஸ்மார்ட்போன்களுக்கான முறை
HyperOS அல்லது MIUI இயங்கும் சாதனங்கள் உள்ளமைக்கப்பட்ட டயலர் வழியாக ஸ்பேம் அழைப்பு தடுப்பைக் கொண்டுள்ளன:
- தொலைபேசி பயன்பாட்டைத் திறக்கவும்
- மேலே உள்ள மூன்று புள்ளிகளைத் தட்டவும்
- அமைப்புகள் > அழைப்பாளர் ஐடி & ஸ்பேம் என்பதற்குச் செல்லவும்
- "ஸ்பேம் அழைப்புகளை வடிகட்டு" என்பதை இயக்கவும்.
பிற வழிகள்
இந்த அமைப்புகள் இருந்தபோதிலும் நீங்கள் இன்னும் ஸ்பேம் அழைப்புகளைப் பெற்றால், அரசாங்க கருவிகளைப் பயன்படுத்தவும்:
- DND (தொந்தரவு செய்யாதீர்கள்) சேவையை செயல்படுத்தவும்.
- உங்கள் மொபைலில் இருந்து 1909 என்ற எண்ணுக்கு START 0 என குறுஞ்செய்தி அனுப்பவும்.
- TRAI DND செயலியைப் பதிவிறக்கவும்
- கூகிள் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கு
- உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவும்
- பிளாக் செய்யும் ஆப்சனை கிளிக் செய்யவும்























